ஜடாயுவின் இராமாயண உரை

ஜூன் 20,21 தேதிகளில், திருவண்ணாமலையில், தர்ம ரக்ஷண சமிதி அமைப்பின் ஆன்மீகப் பயிற்சி முகாமில், இரண்டு நாட்களாக, ஆறு அமர்வுகளில் இராம காதை முழுவதையும் அடியேன் உரையாற்றினேன் (ஆறு காண்டங்கள், ஆறரை மணி நேரம்). அதன் பதிவுகளை இந்த Playlistல் காணலாம். இந்த உரைகள் சம்பிரதாயமான கதாகாலட்சேப நடையிலோ, முற்றிலும் பண்டிதத் தமிழிலோ அல்லது மொத்தமும் பேச்சு வழக்கிலோ இல்லாமல் சகஜமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறேன். கதையின் சுவாரஸ்யம் குன்றாத வகையில் பொருத்தமான இடங்களில் கம்பராமாயணப் பாடல்களைக் கூறி, விளக்கிச் சென்றிருக்கிறேன்…

View More ஜடாயுவின் இராமாயண உரை

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?… என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?…. உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே…. இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள் வால்மீகியின் சீதை. புதுமைப் பெண்ணுக்கும் புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும்,, கற்பின் பொற்பை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் திகழ்கிறாள்…

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்….. “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்…..

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்

இராம காதையில் இரு தியாக தீபங்கள்

வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த  இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான்? என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்?’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்…. ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்…

View More இராம காதையில் இரு தியாக தீபங்கள்

இன்று போய் நாளை வா – எதற்கு?

“என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான்.

இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ ,அதே செய்தியைத்தான் இப்போதும் இராமன் சொல்கிறான்.அங்கதனிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.

”என்அவற்குஉரைப்பது?என்ன, ”ஏந்திழையாளைவிட்டுத்தன்னுயிர்பெறுதல்நன்றோஅன்றுஎனின்தலைகள்பத்தும்சின்னபின்னங்கள்செய்ய,செருக்களம்சேர்தல்நன்றோ? சொன்னவைஇரண்டின்ஒன்றேதுணிக! “எனச்சொல்லிடுஎன்றான்.

அந்த சந்தர்ப்பத்தில் சொன்ன “ அன்று எனின்” என்பது தான் இப்பொழுது இராவணனிடம் நேர்க்கு நேர் சொன்ன ”அல்லையாம் எனின்” என்பது.

View More இன்று போய் நாளை வா – எதற்கு?

இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..

View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

இரண்டெழுத்து அற்புதம்

கம்பன் எனும் காவியச் சோலையில் பூத்துக் குலுங்கும் சொற்பூக்களும் பழுத்துக் குலுங்கும் சொற்கனிகளும் ஏராளம், ஏராளம். அவற்றின் வண்ணமும் வாசமும் கண்ணைக் கவரும். கருத்தை ஈர்க்கும். சொற்பூக்கள் கண் சிமிட்டும்; இள நகை சிந்தும்; தீயும் சொரியும்; தென்றலாய் வருடும்; புயலாய்த் தாக்கும்; சொற்கனிகள் அமுதாய் இனிக்கும், கனிச்சுவையில் நவரசங்களும் சொட்டாது – கொட்டும். வார்த்தைகளைத் தேடிக் களைத்து தன்னை வஞ்சித்துவிட்டு ஓடிவிடுவதாக ஷெல்லியைப் போல் கம்பன் வார்த்தைக்காகத் தவம் கிடக்கவில்லை, வார்த்தைகள் அவனைக் காதலித்தன. வரிசையாக நின்று அவன் கவிதையில் இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே வந்தன. கவிதையின் அழகெல்லாம் ஒன்று திரண்டு ஒரே ஒரு சொல்லில் பூத்துக் குலுங்க வைப்பது கம்பன் கலை.

View More இரண்டெழுத்து அற்புதம்