கையாலாகாதவனாகிப் போனேன்! – 2

“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று இழுத்தாள் மூதாட்டி.
“வாங்க ஐயா. தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.”

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 2

ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17

பத்தினிப்பெண்டிர் கணவனை இழந்ததும் தீ வளர்த்து அதனுள் இறங்குவதும், அந்தத் தீயானது அவர்களைத் தழுவிக்கொண்டு உயிரைப் பருகவது குறித்துக் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி உக்கிரமாக எரியும் தணலின் நடுவில் தான் சென்று அமர்ந்தும் இந்தத் தீயின் வெப்பம் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது, அவளுக்குத் தான் தனது கணவனுக்கு உரிய சேவைகளைச் செய்து அவர் பெற்றோரைப் பேணி, வந்த விருந்தினரை ஓம்பி முன்னோர்களுக்குப் பித்ரு காரியங்கள் செய்வித்து வந்ததில் ஏதேனும் பிழையோ என்ற ஐயம் ஏற்பட்டது.

View More ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்

View More பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14

பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது. இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும்.

View More ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14

அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13

‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன்.

View More அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி.
சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.

View More பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை. எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11

“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.”

View More மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11