கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன… இந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது…
View More விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…
மதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது… இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை….
View More ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…
“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…
View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்
யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார் ராமன். அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றும் சொல்கிறார்…. உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்க்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட.ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப் படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்…
View More யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்அஞ்சலி: அப்துல் கலாம்
ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை… தன்னளவில் மிக அமைதியான, ஆன்மீகமான, மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார். கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின், “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்…
View More அஞ்சலி: அப்துல் கலாம்தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!
குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு… ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது…
View More தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி
முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்?… இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்….
View More மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படிஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்
தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து – இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
View More ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை
இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்…
View More இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரைஇந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?
ஆயிரக்கணக்கில் நாம் ஆதாரத்துடன் பிறப்பின் மூலமாக வருகிற நிறவெறியின் மூலம் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதை கூறலாம். தீண்டாமையின் கோரமுகத்தை இங்கும் காணலாம். பல இஸ்லாமிய தீவிரவாத குறுங்குழுக்கள் பிறப்பின் மூலமாக வருகிற ஜாதியை வைத்து தங்கள் ஜாதியைத் தவிர பிறரை படுகொலை செய்யும் செய்தியை நாள்தோறும் நாம் இப்போது கண்முன் (youtube மூலமாக) பார்த்து வருகிறோம். இந்தக் குறுங்குழுத் தீவிரவாதிகள் தாங்கள் அரங்கேற்றும் கோரப் படுகொலையை வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கேறி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.
View More இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?