இருளும் வெளியும் – 1

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.

View More இருளும் வெளியும் – 1

மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…

View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

திருக்குறுங்குடி சென்ற நாயகி

நம்மாழ்வார் நாயகி பாவத்தில் திருக்குறுங்குடி நம்பி மீது அருளிய அழகிய பாசுரங்களின் சொல்மாலைகளைக் கொண்டு தொடுக்கப் பட்டுள்ளது இக்கட்டுரை. நம்பி என்றால் எல்லோராலும் விரும்பப் படுபவன் என்று பொருள். பெருமை செல்வம், குணம் எல்லாம் நிறையப் பெற்றவன் என்றும் பொருள் கூறுவர். கண்டதுமே தன்னை முற்றிலும் இழந்து விடுகிறாள். அவனுடைய வில்லும் தண்டும், வாளும், சக்கரமும் இவளைக் கொள்ளை கொண்டு விடுகின்றன… எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்? – நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் – சங்கினோடும், நேமியோடும், தாமரைக் கண்களோடும் – செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே…

View More திருக்குறுங்குடி சென்ற நாயகி

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்

ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ஊர்வலம் முடிந்ததும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது

View More அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்

பொருனைக்கரை நாயகிகள்

தோழி! என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே!

View More பொருனைக்கரை நாயகிகள்

தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”

View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை. சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

View More ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”

View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

ஆதிசங்கரர் படக்கதை — 9

“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”

View More ஆதிசங்கரர் படக்கதை — 9

சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்

வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழியிலும் வல்லவரே போற்றற்குரியவர். தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.

View More சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்