மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்…. சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள்…

View More மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

சனி பிடித்த குரு

சூரியனுக்கு அருகே தான் பாறை கிரகங்கள் உருவாகும்.ஆனால் சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால் பாறை கிரகங்கள் உருவானது எப்படி என மண்டையை பிய்த்து கொண்ட விஞ்ஞானிகள் யுரானசும், நெப்டியூனும் தற்போது உள்ள இடங்களில் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.இந்த கிரகங்கள் சூரியனுக்கு அருகே உருவானவை.முன்பு இவற்றின் பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும் (குருவும் சனியும்) ஒரே நேரத்தில் வந்தன.அப்போது அவற்றின் ஈர்ப்பு விசை இந்த இரு கிரகங்களையும் சூரிய குடும்பத்தை விட்டு உந்தி தள்ளியது…. தியாவையும், பூமியையும் மாங்கனியாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புரம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்..அதே மாதிரிதான் பூமிக்கும், தியாவுக்கும் நடுவே இரும்பு கோர்.அதை சுற்றி பாறை போன்று இறுகிய மேன்டில், மேற்புரம் ஜுஸ் போல இளகிய திரவ நிலையில் இரும்பு.அதற்கு மேற்புரம் மீண்டும் பாறை.அதற்கு மேலே நாம்…

View More சனி பிடித்த குரு

தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்

நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை… தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்….

View More தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்

மோடி திருமணத்தை மறைத்தாரா?

  இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா…

View More மோடி திருமணத்தை மறைத்தாரா?

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில்…

View More புத்தாண்டில் ஒரு புது சபதம்!

மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்… உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் திகழ்கிறார்… நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்….

View More மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

பாஜகவின் தேர்தல் அறிக்கை நாடெங்கும் புதிய நம்பிக்கை அலையை உருவாக்கியுள்ளது. பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 52 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து தினமலர் ஒரு நேர்த்தியான 8-பக்க சிறப்பிதழை ஏப்ரல்-8 அன்று வெளியிட்டது. வாசகர்களின் வசதிக்காக அந்த சிறப்பிதழின் பக்கங்களைத் தொகுத்து ஒரே pdf கோப்பாக வழங்குகிறோம். இந்த கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து படிக்கலாம்… பல்துறை பொருளாதார வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு, மக்கள் நலன், கலாசார உணர்வு என்று பல அம்சங்களிலும் சிறப்பான கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை உள்ளது…

View More பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1

மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை… எனவே மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது அபத்தமான ஒரு வாதமே… மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது….

View More இந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1

தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1

தினமும் 10 மணி நேரம் மின் வெட்டை மாநிலம் முழுவதும் செய்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த முறை மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டாவிட்டால் அவர் அவர்களை இலவசங்களை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்களாக மட்டுமே வருங்காலத்திலும் நடத்துவார்…. தமிழகத்தில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெண் ஒருவர் கூட இல்லை என்பது ஒரு பெரும் குறை. வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அல்லது வானதி இருவரில் ஒருவர் அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இருவரும் இல்லாமல் “கல்வித் தந்தை” ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது….

View More தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1