கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?… என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?…. உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே…. இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள் வால்மீகியின் சீதை. புதுமைப் பெண்ணுக்கும் புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும்,, கற்பின் பொற்பை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் திகழ்கிறாள்…

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

வன்முறையே வரலாறாய்… – 17

அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்களும் இப்படிப் பட்டவர்கள் தான், இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் தான். இதை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல? அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது?….

View More வன்முறையே வரலாறாய்… – 17

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது.…

View More வேரை அரிக்கும் கரையான்கள்

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன. பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது, சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது, தொழிலுக்கான நிதியை உருவாக்குவது இவை இக்குழுக்களின் வேலைகள்… அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினர்….

View More மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

இன்று வாக்களிக்கு முன்…

2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்..

View More இன்று வாக்களிக்கு முன்…

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது… இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்…

View More நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் (BJP Parliamentary Party) இணைச் செயலாளர் திரு.வி.சண்முகநாதன்…

View More மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!

காய்த்த மரம் தான் கல்லடி படும். வற்றிய குளத்தை நாடி எந்தப் பறவையும் வராது. இன்றைய சூழலில் பாஜக மட்டுமே நம்பிக்கை தரும் கட்சியாக மிளிர்கிறது. எனவே, மக்களின் மனநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது பாஜகவை கடுமையாக எதிர்க்கத் துவங்கி உள்ளன. மொத்த்தில் தமிழக அளவில் தேர்தலின் நாயகியாக இருந்த ஜெயலலிதாவின் இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார் மோடி… தேசிய அளவில் காணப்பட்ட மோடி மைய அரசியல் தமிழகத்திலும் வந்துவிட்டது. இதுவே, பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி தான். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லும் கட்சியினரை விட, ஏற்கனவே என்ன சாதித்திருக்கிறார் என்பதைத் தான் நாட்டின் வாக்காளர் முக்கியமாகக் கவனிக்கிறார்…..

View More தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!

தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பிவரும் தேசிய சிந்தனைக் கழகம் என்ற அமைப்பு,…

View More தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது…. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது…

View More மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2