இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…

View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

போர்ச்சுகலில் குடியிருக்கும் அத்தனை யூதர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும், அல்லது கிறிஸ்தவ மதத்தைத் தழுவவேண்டும் என உத்தரவிட்டான். அந்த உத்தரவை மீறுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் எனவும், அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது…

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்… கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்….

View More பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்… கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்…

View More ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?

தமிழகத்தில் மாணவர்கள் கேட்ட மையங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும், மையங்களின் எண்ணிக்கை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை விட குறைக்கப்பட்டதாகவும் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மையங்களின் எண்ணிக்கை அமையவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது குறித்து தகவல்களை திரட்ட தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். கிடைத்த விவரங்கள் இக்கட்டுரையில்…. சராசரியாக எத்தனை மாணவர்களுக்கு ஒரு மையமும் ஒரு மையமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், 615 மாணவர்களுக்கு ஒரு மையம என்ற விகிதத்துடன் கர்நாடகா முதலிடத்திலும் 668 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ் நாடு 631 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது…

View More நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?

கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

ஒரு போர்ச்சுகல் யூதனின் மகன் கிறிஸ்தவனாக மதம்மாறினால் அவனது தகப்பனது சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கிறிஸ்தவ மகனுக்கே சென்றுவிடும் எனச் சட்டம் இருந்தது. அப்படி மதம்மாறியவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக அனுமானிக்கப்பட்டு அவர்களின் வீடும், நிலமும், அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்திலும் மூன்றில் இரண்டு பங்கு அந்த மகனுக்கே உரிமையாகும். இந்த நடவடிக்கை யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்குப் பெரிதும் உதவியது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.

View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

கொலைகாரக் கிறிஸ்தவம் – 2

ஜனவரி 2, 1481 -ஆம் ஆண்டு ஸ்பெயினில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் துவங்கியது. 1481-ஆம் வருட முழுமையும் ஏறக்குறைய 300 கிறிஸ்தர்களல்லாத பிறமதத்தவர்கள் செவிய்யா (Seville) நகரில் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர், 80 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் பிறநகரங்களில் ஏறக்குறைய 2000 பேர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 17,000 பேர்களுக்கு வெவ்வேறுவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 2

“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் என்று தொடங்கும் இந்தப் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது… பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே…

View More “அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்

நேதாஜி: தலைவர்களின் தலைவர்

பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்… நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது…

View More நேதாஜி: தலைவர்களின் தலைவர்