உயிருண்ணி

சீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது… விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப்  பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்….

View More உயிருண்ணி

யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2

சைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.
சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.

View More யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2

யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1

அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.

அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.

View More யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1

‘சும்மா இரு சொல் அற’

சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்… இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்….

View More ‘சும்மா இரு சொல் அற’

அக்பர் என்னும் கயவன் – 12

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் “விபச்சாரிகள்” என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது. போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை… சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின் தகப்பனான ஹுமாயுன் அதற்குச் சிறிது குறைந்தவனில்லை. தனது உபயோகத்திற்கென சிறுவர்களை எப்போது தன்னுடனேயே வைத்திருந்தான் ஹுமாயுன். அக்பரும் ஏராளமான சிறுவர்களை தனது அந்தப்புரத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாக அபுல் ஃபசல் கூறுகிறார்….

View More அக்பர் என்னும் கயவன் – 12

அக்பர் என்னும் கயவன் – 11

அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன…போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார்… விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று அவளையும் தனது அந்தப்புரத்தில் அடைத்துவிட்டார்.  மேலோட்டமாகப் பார்க்கையில் மிக உயரிய ஒன்றாகத் தெரியும் இதனை சிறிது யோசித்தால் அந்தப் பெண்ணை அடைவதற்காக அகபர் செய்த் திட்டமிட்ட படுகொலை என்பதனை நாம் உணரலாம்….

View More அக்பர் என்னும் கயவன் – 11

இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!

2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள்.  கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன.  இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது.  கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.

View More இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!

சுப்பிரமணிய புஜங்கம்

என் சந்நிதிக்கு வந்து யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் தீவினைகள் கடலலைகள் அழிதல்போல் அழிந்துபடும். ஆகவே என்முன் வாருங்கள்,’ என உணர்த்துவது போலத் திருச்செந்தூர்க் கடலலைகள் வந்துவந்தழியும். அந்தச் சீரலைவாய்க் குமரனை என் மனதில் வைத்து தியானிக்கிறேன்…. உயிர்மங்கும்பொழுதில் உனது தாள்களை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனக்கூறவும் இயலாதவனாகி விடுவேன். கைகளைக் குவிக்க இயலாது. அப்போது நீ என்னைக் கைவிடலாகாது. இப்போதே நான் உனக்கு அடைக்கலம் என்று கூறிக்கொள்கிறேன்…

View More சுப்பிரமணிய புஜங்கம்

இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு — எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா[?] ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள். தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது.  இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது. “வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இங்கிருக்கும்போது ஸோஃபியா தன்னிஷ்டத்திற்கு அலைந்து திரிவது எங்ஙனம்?” என்று வெதும்புகிறார் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான அலி அல் அகமது.

View More இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

அக்பர் என்னும் கயவன் – 10

பதினாலாவது வயதில் அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்து நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. போரில் தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது… இதன் காரணமகாகவே, கணிசமான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர் தங்களின் பெண்களின் முகத்தில் வாளால் வெட்டியும், தீயில் கருக்கியும் அவளது முகத்தை அவலட்சணமாக்கினார்கள். இன்னும் சிலர் தங்களைத் தூக்கிச் செல்ல வந்த முகலாயப் படைத்தலைவனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அவனது மனதை மாற்ற முயன்றார்கள். பெரும்பாலான சமயங்களில் தப்புவதற்கு வாய்ப்பில்லாமல் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தின் ஐயாயிரத்தில் ஒருத்தியாக அடைபட்டார்கள்….

View More அக்பர் என்னும் கயவன் – 10