நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்
இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்… சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார்… முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது…
View More எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?
டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது…முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்….
View More டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்
நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை…. பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கம். இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று கூடிப் பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள்….
View More மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8
“மாதொருபாகன்” நாவல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து, அந்த நாவல் சித்தரிப்புகளின் வரலாற்றுத் தன்மை…
View More “எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!
எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை…
View More யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015
சென்னையில் 7வது ஹிந்து, ஆன்மீக சேவைக் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இடம்: ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம், சென்னை.பிப்ரவரி 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை, தினந்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை. நூற்றுக் கணக்கான ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் பங்கேற்கின்றனர். தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரங்கும் உண்டு. அனைவரும் வருக !
View More சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]
“ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…” இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தான்… ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது… திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல… சொல்ல… அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. இயக்குனர் திருக்குமரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்….
View More விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்
காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்… இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும் இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும்…
View More நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்