ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) அமைப்பின் தன்னார்வலர் தில்லிக் காரர் கௌரவ் ஷர்மா இந்தக் கேள்விகளை எழுப்புகிறார் – நீங்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பவரா? இல்லை என்றால், எப்படி உச்சநீதி மன்றத்தில் பயங்கரவாதிகளின் வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவரை நிறுவனராகக் கொண்ட கட்சியை ஆதரிக்கிறீர்கள்?… வகுப்புவாதத்தையும் வாக்கு வங்கி அரசியலையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உ.பி பரெய்லி மதக்கலவரங்களில் நேரடியாக ஈடுபட்ட, பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய ஃபத்வா வெளியிட்ட மௌலானா தவ்கீர் ரஜா என்பவரிடம் பிச்சை கேட்காத குறையாக்க் கெஞ்சினார் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை எப்படி ஆதரிக்கிறீர்கள்?…
View More ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்Tag: அண்ணா ஹசாரே
ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…
அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
View More ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…காந்தியின் (கி)ராம தரிசனம்
குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை… நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்… இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்…
View More காந்தியின் (கி)ராம தரிசனம்ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்
திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.
View More ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?
இப்போது அரசு பம்பிப் பதுங்கும் நிலையை சாதகமாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை ஒன்றிணைத்து, ஊழலுக்கு எதிரான போரை முனை மழுங்காமல் காத்தால் தான் இறுதி வெற்றி கிடைக்கும். இதையே அண்ணா ஹசாரேவிடம் நாடு எதிர்பார்க்கிறது….
View More லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?
அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் மன்மோகன் சிங் மட்டும்…. பிரச்சினை, பொதுமக்கள் ஊமைகள் என்பதல்ல. சட்டத்தின் காவலர்கள் செவிடாகியிருக்கிறார்கள் என்பது தான்…நிறுவனங்களையும், செல்வந்தர்களையும் விடவும் ஊழல் இந்த ஏழைகளைத்தான் மிக அதிகமாகப் பாதிக்கிறது… நடுத்தர வர்க்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையேயான கண்ணியமான சமூக ஒப்பந்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது… [மூலம்: பேரா.ஆர்.வைத்தியநாதன்]
View More அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…
அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….
View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…
View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்
உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும்… இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.
View More சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்