தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4Tag: அதர்மம்
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3
தேவர்களில் தொடங்கி அசுரர்கள், மனிதர்கள் வரையிலான பல நூற்றுக்கணக்கானவர்களின் மனைவிகளை ராவணன் அபகரித்துச் சென்றதே அவன் செய்த பாவங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது. அவர்கள் அனைவரின் சாபமும், கண்ணீரும் காலத்தால் வீணாகப் போகவில்லை. இறுதியில் சீதை என்னும் பெண் வடிவில் அவனது முடிவிற்கான காரணம் வந்தது. ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களின் மேல் கடவுளர்கள் அனைவரும் பரிதாபம் கொண்டிருந்தாலும், அவனுக்கு சீதையின் மூலம் வரப்போகும் அழிவைப் பற்றியும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இறுதிவரை ராவணன் தன் வழிகளைத் திருத்திக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடுத்த சாபத்தினால் அவன் தன் சக்தியைப் படிப்படியாக இழந்துகொண்டே வந்தான். ஒரு முறை குபேரனின் மகன் நலக்கூபரனின் மனைவி ரம்பையை ராவணன் பலாத்காரம் செய்தபோது அவள் இட்ட கொடுமையான சாபத்தினால், அவன் நிலைகுலைந்து போனான்….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2
ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன் தமிழாக்கம்: எஸ். ராமன் முந்தைய…
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2திரௌபதியின் கேள்வி
அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு, துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம்…. எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது?…. உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது…
View More திரௌபதியின் கேள்விஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28
நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கையில் சுற்றிய பாம்பைத் தூக்கி எறியவேண்டும். அதுபோல தர்மத்தின் பாதையில் செல்லாது, பாவம் சேர்க்கும் கொடிய வழிகளையே விரும்பும் தலைவனை அப்புறப்படுத்தவேண்டும்…. மனைவியோ, உறவினர் வேறெவரோ இறந்தால் அவர்களுக்குப் பதில் வேறு எவரையாவது, ஏதோ ஒரு இடத்திலாவது கண்டுபிடிக்க முடியும். ஆனால் சகோதரன் இறந்துவிட்டால் அவனுக்குப் பதிலாக வேறெவரும் இருக்க முடியாது… தன்னைச் சார்ந்தவர்களைத் துறந்துவிட்டு, அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுப்பதால் தனக்கு நன்மை உண்டு என்று ஒருவன் நினைப்பது தவறானது. எதிரிகள் முதலில் மற்றவர்களை அழித்துவிட்டு, கடைசியில் யார் காட்டிக் கொடுத்தானோ அவனையும் ஒழித்துவிடுவார்கள்….
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28