நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?Tag: அரசியல்வாதிகளின் அலட்சியம்
திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]
உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை… நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது… சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.
View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]
எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..
View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]