அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….
View More இளையராஜா @ கூகிள்Tag: இசைமேதை
எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை
தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…
View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளைஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்
இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்… சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார்… முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது…
View More எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி
கவி குஞ்சர பாரதி தனது 12ஆம் வயதிலேயே கவிதைகள் இயற்றத் தலைப்பட்டு விட்டார். தமிழில் கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் கூட இயற்றத் தொடங்கினார். இவர் பாடல்களில் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைத்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது… இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் சேதுபதி மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவர் “ஸ்கந்தபுராண கீர்த்தனைகள்” எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 55 ஆகியிருந்தது. அதன் பின்னர் இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் தானுண்டு தன் இசையுண்டு என்று கவிகள் இயற்றிப் பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார்…
View More எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதிஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்
சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…
View More எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்
எத்தனை முயன்று நீந்திப் பார்த்தாலும் ஆழம் காண முடியாத பெரும் சங்கீத சாஹித்யக் கடல் தியாகராஜருடையது. இதில் மூழ்கி ஒரு சில அபூர்வமான முத்துக்களை எடுத்துப் பார்த்து, கேட்டு மகிழலாமே… தியாகராஜர் எல்லாப் பாடல்களிலும், அவற்றின் வரிகளினூடே ஒரு தத்துவத்தை, ராம காதையிலிருந்து தாம் ஆழ்ந்து அனுபவித்த ஏதேனும் ஒரு செய்தியை அல்லது ரசத்தை கோடியிட்டுக் காட்டியிருப்பார்… “உனக்கு வெட்கம் இல்லையா, உன் தனயனான என்னிடம் அபிமானமும் இல்லையோ?” என்று ஒரு பாடலில் உரிமையுடன் ராமனைக் கேட்கிறார்…ஆடமோடி கலதா என்ற பாடலில், கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட (முதல் சந்திப்பில்) உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன் நீ… (எளியவனான இந்த) தியாகராஜனிடம் பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்… தியாகராஜ கிருதிகள் அளக்க இயலாத பொற்குவியலான சொற் சித்திரங்கள். காவேரியின் கரைகளில் பிறந்து வளர்ந்து பண்பட்டு நமக்கெல்லாம் பெருமை தரும் அருமைத் தென்னக கர்நாடக இசைச் செல்வங்கள்….
View More எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்