இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப் படவில்லை என்பது உண்மையாகும். ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஜிகாதி அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது…. இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்….
View More தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்Tag: இந்தியன் முஜாஹிதீன்
மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்
பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப்…
View More மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்
இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை…
View More ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19
2004 வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அதற்குப் பிறகு, இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதும், இந்துப் பண்டிகைகளின் போதும் தாக்குதல் நடத்தி, உள்ளுர் மக்களிடம் அதிக அச்சத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை மாற்றினர், வாரணாசி குண்டு வெடிப்பு இதன்படி நடந்த ஐந்தாவது சம்பவமாகும்… அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18
இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்
ஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்… மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன… ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
View More பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17
2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளைச் சார்ந்த முக்கிய இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறுமாதிரியாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்து செயல்படுத்துவதின் நோக்கம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16
பாரத தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதால் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களும் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல் பெறுவதிலும், அந்தத் தகவல்களை முறைப்படி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவதற்கும், உரிய இடமாக டெல்லியை மாற்றி வைத்திருந்தார்கள்….1997-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 200க்கும் மேற்பட்டது. . கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் அதுவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள், மற்றவர்கள் அப்பாவிப் பொது மக்கள் என்பதை மறந்து விட இயலாது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16மலேகான் முதல் மகாடெல்லி வரை
குறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன. மலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது.
View More மலேகான் முதல் மகாடெல்லி வரைஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14
இந்த நாட்டின் துரதிர்ஷ்டம், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களை திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது… பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன… இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14