இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

முந்தைய பகுதிகள்

சென்ற பகுதியில் உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றிய நிகழ்வுகளை ஆய்வு செய்வோம், ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்பை பற்றிய விவரங்களையும் சற்றே அலசுவோம்.

பாரத தேசத்தில் நடைபெற்ற அனைத்து பயங்கரவாத தாக்குதல்களில் முக்கியப் பங்கு கொண்ட பயங்கரவாத அமைப்பு சிமி அமைப்பாகும். இந்த அமைப்பு 1977ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் அலிகார் பல்கலைகழகத்தில் துவக்கப்பட்டது. எனவே உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக உள்ள மாநிலமாகும். சென்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளப் படி இந்த கட்டுரையில் ஹர்கத் உல்அன்சார் என்கின்ற பயங்கரவாத அமைப்பைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்

ஹர்கத்-உல-அன்சார் (Harakat-ul-Ansar)

இந்த இயக்கத்தைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?. 30.4.2001ந் தேதி உத்திர பிரதேசம் ஹப்பூரில் (Hapur ) பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஹர்கத் உல் அன்சார் இயக்கததை சார்ந்தவன் கைது செய்யப்பட்டான். ஏப்ரல் மாதம் 27ந் தேதி 1996ல் உத்திரபிரதேச போக்குவரத்து கழக Roorkie டெப்போவில் குண்டு வைத்த சம்பவத்தின் குற்றவாளி என்பது தெரியவந்தது. ஆகவே காஷ்மீர் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும். பாகிஸ்தான் எல்லைகளை காஷ்மீர்வரை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும், துவக்கப்பட்ட இந்த பயங்கரவாத இயக்கம், பின்னாளில் உத்திரபிரதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் முக்கிய பங்கு கொண்டது என்பது தெரியவந்ததால் இது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இடையில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

Delhi Police Special cell personnel show alleged Harkat-ul-Jihadi Islami (HUJI) militant Abdul Rehman to media representatives. AF

1993ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் முஸபராபாத்தை மையமாக வைத்து ஐ.எஸ்.ஐயின் முழு உதவியுடன் துவக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். ஏற்கனவே 1985ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த சோவியத்திற்கு எதிராக ஜிகாத்தை துவக்க ஏற்படுத்திய இயக்கமும் அதிலிருந்து வெளியேறிய பின்பு புதிதாக துவக்கி, தற்போது இயங்கி கொண்டிருந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி ( Harakat ul-Jihad-i-Islami (HUJI) ) என்ற அமைப்பும், ஹர்கத்-உல்-முஜாஹ_தின் அமைப்பும (Harakat ul-Mujaheddin ) இணைந்து ஹர்கத்-உல-அன்சார் என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பும் எல்லா பயங்கரவாத அமைப்பகளும் கூறுவது போலவே, முதலில் காஷ்மீருக்கு விடுதலை பெறவே ஜிகாத் துவக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். ஆனால்; காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை துவக்கிய ஹர்கத்-உல-அன்சார், நாளடைவில டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக உளவு துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1997ல் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால்,; அமெரிக்க அரசு இந்த இயக்கத்திற்கு முழு தடை விதித்தது. 2000ம்; ஆண்டு இதன் உறுப்பினர்கள் மௌலான மசூத் அஸார் என்பவனுடன் சேர்ந்து Jaish-e-Muhammad என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஹர்கத் உல் அன்சார் என்று இருந்தாலும், இந்த இயக்கத்தில் இணைந்த ஹர்கத் உல் முஜாஹ_தின் அமைப்பினரின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே அமைந்தன.

பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள முக்கியமான பயங்கரவாதி Fazlur Rahman Khalil என்பவன். இவன் ஹர்கத்-உல்-முஜாஹ_தின் அமைப்பின் பொறுப்பாளர், இதனுடன் ஹர்கத்-உல்-அன்சாரின் அமைப்பிலும் முக்கிய பொறுப்பில் இருந்தான். காராச்சியில் உள்ள Binori Madrassah மதரஸாவின் மாணவன், இதே மதரஸாவில் தாலிபானின் முக்கிய தலைவரான முல்லா உமரும் மாணவன், இந்த உறவின் காரணமாக இருவருக்கும் நெருங்கி தொடர்பு ஏற்பட்டது. ஆகவே இந்த தொடர்பே இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பும் முன் வந்தது. . Fazlur Raman Khalil அல்காயிதா மற்றும தாலிபானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தான், இதனால் இந்தியாவிலும் அல்காயிதாவும், தாலிபானும் நுழைய வழி கிடைத்தது.

ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பினரின் செயல்பாடுகள், வெடிகுண்டு தாக்குதல், பணத்திற்காக ஆட்களை கடத்துவது, அரசியல் காரணங்களுக்காகக் கொலைகள் செய்வது, காஷ்மீரில் வாழ்கின்ற ஹிந்துக்கள் மீது காரணம் இல்லாமல் தாக்குவது போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தார்கள். இந்த அமைப்பினர் 1998ல் வெளியிட்ட பட்வாவில் உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அமெரிக்கர்களை கொல்ல வேண்டும் என உத்திரவு பிறப்பித்தார்கள். ஆகவே டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களில் ஹர்கத்-உல்-அன்சாருக்கும் பங்கு உண்டு.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம் பாரத தேசத்தின் முக்கியமான நகரங்களை உள்ளடக்கிய மாநிலமாகும். இம் மாநிலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் பெரிய மாநிலமாகும். இந்த நாட்டின் பிரதம மந்திரிகளை உருவாக்கும் மாநிலம், அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழும் மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலம். இந்துக்களின் புனித நகரங்கள் அமைந்துள்ள மாநிலம், காசி, அலகாபாத், அயோத்தி, மதுரா போன்ற நகரங்கள் அமைந்துள்ள மாநிலம். எந்த அளவிற்கு இந்துக்களுக்கு புனிதமான நகரங்கள் அமைந்துள்ளதோ அதே போல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாகவும் உத்திர பிரதேசம் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் உள்ள கான்பூர், பைசாபாத், லக்னே, ஆஸம்கார், அலிகார் போன்ற நகரங்களில் இஸ்லாமியர்களின் தேச விரோத நடவடிக்கைகள் ஏராளமாக நடந்துள்ளது. அதிக அளவில் வகுப்பு வாத கலவரங்கள் நடந்த மாநிலங்களில் முதன்மையான மாநிலமாகும

Terror Modules Map in Uttar Pradesh

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் பிரச்சினைக்குரிய பழமையான கட்டிடம் இடிக்கப்பட்ட பின் தான், இந்தியாவில் இஸ்லாமியர்கள் ,தங்களின் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்கிறார்கள் என்ற வாதம், மதச்சார்பற்ற அரசியல்வாதிகளிடம, அதிக கூச்சலை எழும்புகிறது. ஆனால் உண்மையில் அயோத்தியில் நடந்த சம்பவத்தால் தான் நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு நேரடியாக எவரும் பதில் தர முன்வரவில்லை. உத்திரபிரதேசத்தில் உள்ள 70 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை உள்ள மாவட்டங்கள் 15க்கு மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. நடைபெறும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமியர்களின் வாக்கு முக்கியமான இடத்தில் உள்ளது. ஆகவே உத்திரபிரதேச தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள். ஆகவே இஸ்லாமிய பயங்கரவாதிகளை பற்றிய விவரங்களை விரிவாக ஆய்வு செய்ய உத்திரபிரதேசம் ஒரு முக்கிய களமாக இருக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக பயங்கரவாத மையம் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசமாகும். 2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் 54, இதில் 45 சம்பவங்களில் நேரடித் தொடர்பு கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம், இதில் 14 குண்டு வெடிப்புகள் அதிக பயமுறுத்திய சம்பவமாகும். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இந்தியன் முஜாஹ_தின் அமைப்பைச் சார்ந்த இருவர், உத்திரபிரதேசம் ஆஸம்கார் பகுதியை சார்ந்தவர்கள். இதைப் போலவே ஜெய்பூர், அகமதாபாத், டெல்லி போன்ற இடங்களில் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆஸம்கார் பகுதியை சார்ந்தவார்கள்.

உத்திரபிரதேசத்தில் வேலையில்லாத, படிப்பறிவு இல்லாத இஸ்லாமிய இளைஞர்கள் அதிக அளவில் உள்ளார்கள். இவர்கள் எந்த நோக்கமின்றி இருப்பதாலும் , இப்படிப்பட்டவர்களை பயங்கரவாத செயலுக்கு இழுப்பதற்கு உத்திரபிரதேசம் நல்ல மாநிலமாக திகழ்கிறது. 1985லிருந்தே உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. ஆந்திராவை சார்ந்த அஸம் கோரி என்பனும், உத்திரபிரதேசத்தை சார்ந்த அப்துல் கரீம் துன்டா( Abdul karim Tunda) என்பவனும் இனைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி, தர்க்க ரீதியாக லஷ்கர்-இ-தொய்பாவிற்கு முழு ஆதரவை அளித்தார்கள். இவர்களுக்கு துணையாக மும்பையை சார்ந்த மருத்துவர் Jalees Ansari என்பனும் இணைந்தார். இவர்களின் இணைப்பின் காரணமாக 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி மும்பையில் மிகவும் மோசமான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே நடந்த முதல் சம்பவம் இந்த நிகழ்வாகும். இதை தொடர்ந்து இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத சம்பவங்கள் அனைத்திலும் உத்திரபிரதேசம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆகவே உத்திரபிரதேசம் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலை என்றால் அது மிகையாகாது.

1.10.2005ந் தேதி ஹ_ஜீ கமான்டர் முப்தி அப்துல் ஹன்னன் (Mufti Abdul Hannan) டாக்காவில் கைது செய்யப்பட்டான்.

Mufti Mohd Dhaka arrest

விசாரனையில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பயிற்சி பெற்றவன் என்பதும், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்ததாகவும், பாகிஸ்தான் செல்வதற்கு முன்பு உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஜன்பூரில்(Shahjahanpur) உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஆறு வருடங்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தான். 2008ம் ஆண்டு ஜீன் மாதம் டெல்லி காவல்துறையினர் ஹர்கத்-உல்-முஜாஹ_தின் அமைப்பைச் சார்ந்த ஹபீப்-உர்-ரஹ_மான் ( Habi-ur-Rehman) என்பவனை கைது செய்தார்கள், இவன் உத்திரபிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தைச் சார்ந்தவன். உத்திரபிரதேசத்தில் 78 மோசமான அதாவது அழிக்கதக்க அளவிற்கு பயங்கரவாத செயல்கள் நடந்தன, இந்த செயல்பாடுகள் 34 மாவட்டங்களில் நடைபெற்றது.

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற மோசமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் 2006-ம் ஆண்டு காசியில் நடந்த குண்டு வெடிப்பு, 2008ம் ஆண்டு ராம்பூரில் மத்திய ரிசர்வ் காவல் துறையினரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், லக்னோ , பைசாபாத், வாரணாசியில் உள்ள நீதி மன்ற வளாகத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களை குறிப்பிடலாம். முக்கியமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார் உத்திரபிரதேசத்திலும், அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர், போன்ற மாவட்டங்கள் உள்ளடக்கிய மாநிலம் உத்திர பிரதேசமாகும். அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின் தான் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன என்கின்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு காலக்கட்டங்களில் எழுப்ப படுகிறது. ஆனால் உண்மையில் நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து உத்திரபிரதேசத்தில் வகுப்பு கலவரங்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தன என்பதை மறந்து விடக்கூடாது. கான்பூர் கலவரம், மீரட் கலவரம், போன்று பல்வேறு கலவரங்கள் அடிக்கடி நடந்துள்ளன. இந்த கலவரங்களில் கூட வெடி குண்டுகள் பயன்படுத்தவில்லையே தவிர ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, உள்ளுர் தயரிப்பான வெடி குண்டுகள் பயன்படுத்தபட்டன.

அஸாம்கார்

உத்திரப் பிரதசேத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சின்னஞ்சிறு நகரம். தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மையப்பகுதி என்றால் மிகையாகாது. இந்த நகரத்தை சார்ந்த பலர் இன்னும் சிமி இயக்கத்தில் தலைமறைவாக இருக்கிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகும் மையமும் அஸாம்கார் நகரமாகும். சிமி இயக்கம் வளமாக வளர்வதற்கு உகந்த இடம், சிமியின் முக்கிய பொறுப்பாளாரான அபு பஸிர்(Abu Bashar ) அஸாம்கார் நகருக்கு அருகில் உள்ள Saraimir பகுதியை சார்ந்தவன். சிமி இயக்கத்தினரும், மற்ற பயங்கரவாத அமைப்பினரும், தாக்குதல் நடைபெறும் சமயங்களில் ஆவோசமாக தாக்குதல் நடத்துவதும், பின்னர் செயலற்ற தன்மையில் அஸாம்கார் பகுதியில் தஞ்சம் புகுந்துவிடுவார்கள். டெல்லியில் என்கவுன்டரில் கொல்லப்பட்டMohammad Saif என்பவனும், இந்த என்கவுன்டருக்கு முன் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட Atif, Sajid என்பவர்களும் அஸாம்கார் பகுதியை சார்ந்தவர்கள். ஆகஸ்ட் 2ந் தேதி புனேவில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என காவல்துறையினர் கைது செய்தவர்கள் Dr.Shahnawaz , Mohammad Sajid alias Bads Sajid, Abbu Rashid ஆகிய மூவரும் அஸாம்கார் நகரை சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு இந்தியன் முஜாஹ_தின் அமைப்பின் தொகுயில் பயிற்சி பெற்றவர்கள். இந்த அமைப்பு இந்தியன் முஜாஹ_தின் பிரிவின் முக்கியமான தொகுதியாகும். டெல்லி பாட்லா ஹவுஸில் நடைபெற்ற என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அத்தீப் அமீன், பல குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளையாக செயல்பட்டவன் என காவல் துறையினர் தெரிவித்தார்கள். ஆஸாம்கார் நகருக்கு அருகில் உள்ள சராய்மீர் பகுதி மினி துபாய் என்று வர்ணிக்கப்படுகிறது. மும்பை தாதா அபுசலீம் இந்த நகரை சார்ந்தவன். ஆஸாம்கார் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். சராய்மீர் (Saraimeer) பகுதியில் இருந்து மட்டும், 2007ல் 1,200 பேர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த பகுதியை சுற்றியுள்ளவர்கள் 9 கோடி ரூபாய் மதிப்பிற்கு சர்வதேச தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருப்பதும், இவ்வாறு பேசியவர்களில் 80 சதவீதத்தினர் ப்ரீபெய்டு சிம்கார்டுகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

1997ம் ஆண்டு மும்பையில் குல்ஷன்குமார் கொல்லப்பட்ட போதுதான், அஸாம்கார் துப்பாக்கி பிரபலமானது. அந்தத் துப்பாக்கியில் அஸாம்கர் அருகே உள்ள பாம்பூர் எனும் கிராமத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தக் கிராமத்தில் தான் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆஸாம்கார் பகுதியைச் சார்ந்த முன்னாள டி.ஐ.ஜி பிரகாஷ்சிங் இந்தப் பகுதியில் உள்ள குற்றவாளிக்ள மற்றும் நன்றாகச் சுடத் தெரிந்தவர்கள் ஆகயோரைக் குறிப்பிட்டு தீவிரவாதத்துக்கும் இந்த நகருக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்த்தினார். 2007ம் ஆண்டு மிகப் பெரிய இஸ்லாமியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தைப்பற்றி எவரும் வாய் திறக்கவில்லை, வாக்கு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள் என உள்ளுர் பிரமுகர்கள் பலர் தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸ் என்கவுன்டருக்கு பின் முகமது சபீப் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்யப்பட்டான் என தெரிந்தவுடன் இவனது சகோதர் யூனானி மருத்துவர் Dr.Shahnawaz தானும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேபாளம் வழியாக பங்களா தேஷ் நாட்டிற்கு தப்பி சென்று தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார், இவர் அஸாம்கார் பகுதியை சார்ந்தவன் என்பது குறிப்பிட தக்கது. இன்னும் சிலர் இந்தியன் முஜாஹ_தின் அமைப்பைச் சார்ந்தவர்கள், இந்த வழியாகவே தப்பி சென்றுள்ளார்கள். Dr.Shahnawaz இவருடன் இந்தியன் முஜாஹ_தின் அமைப்பைச் சார்ந்த Junaid and Asadullah என்பவர்களுக்கும் ரியாஸ் பட்கல் மற்றும் அவருடைய சகோதரர் இக்பல் பட்கல் என்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரனையில் தெரியவந்தது.

ஆஸாம்கார் நகரை சுற்றியுள்ள பகுதியான , Sanjarpur, Mubarakpur, Bilariaganj, Larganj, Vindwal, Anwak, Bishan, Mohammedpur ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினருக்கு துபாயில் உள்ள தாதா இப்ரஹிம் தாவுத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், தாவுத்தின் தொடர்பில்Abu Salem, Abu Bashir, Mohammed Saif, Shakeel, Salman, Sajid, Shahjad, Junaid, Shadab, Dr.Shahnawaz, Asadullah என்பவர்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளவர்கள், இவர்கள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளிகள் என்றும், இவர்கள் அனைவரும் அஸாம்கார் நகரை சார்ந்தவர்கள் என உத்திர பிரதேச காவல் துறையினர் தெரிவித்தார்கள். சட்ட விரோதப் பண பரிமாற்றம் நடைபெறும் இடமாகவும் அஸாம்கார் விளங்குகிறது. மும்பையில் உள்ள தாதாகள் அனைவரும் ஏதேனும் ஒரு வழியில் அஸாம்கார் தொடர்பு உள்ளவர்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்தார்கள். ஆகவே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் ஆஸாம்கார் பகுதியைச் சார்ந்தவர்கள் என இன்னும் மத்திய, மாநில அரசுகளின் உளவுத் துறையினர் நம்புகின்றனர்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியின் பங்கு

உத்திர பிரதேசத்தில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட பயங்கரவாத அமைப்பு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமி யாகும். இவர்களுடன் லஷ்கர்-இ-தொய்பாவும், கலந்து கொண்டது. மேற்கு உத்திர பிரதேசம் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமிஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமி அமைப்புகளின் கேந்திரமாகும். பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமி வுடன் தொடர்பு கொள்ள முகமது ஷாகீத் பிலால்(Muhammad Shahid Bilal) என்பவன் நியமிக்கப்பட்டான். இவன் ஏற்கனவே 18.5.2007ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரியாகும். 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசம் வாராணாசி, லக்னோ, பைசாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாங்களில் குண்டு வெடித்த சம்பத்திலும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமி அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி இரண்டு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமி அமைப்பினர் கைது செய்யப்பட்டார்கள். Mohammad Tariq Qasmi , Khalid Mujahid இருவரும் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திலும், மே மாதம் 22ந் கோரக்பூரில் நடந்த சம்பவத்திலும் தொடர்புடையவர்கள். இந்த கைதின் மூலம் இரண்டு தாக்குதல்களிலும் உள்ள ஆழமான கரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவர்களின் வாக்குமூலத்தின் படி உத்திர பிரதேசத்தில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியின் ஏரியா கமான்டர் Qasmi யூனானி வைத்தியர் என்பது தெரியவந்தது. சிமி இயக்கத்தினர் ஹஜி பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் உதவிகளும் செய்து வந்தார்கள்.

(தொடரும்)

3 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18”

 1. அன்பு சரவணன், நீங்கள் பழைய சம்பவங்களை வைத்து இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே, புதிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் அங்கங்கு உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

  உரிய நேரத்தில் கைது செய்து, பயங்கர சம்பவத்தைத் தடுத்த அர்சும் உளவுத் துறையும் பாராட்டுக்குரியவை.

  https://tamil.oneindia.in/news/2012/10/11/india-delhi-police-nabs-three-suspected-im-men-162995.html

  புனே குண்டுவெடிப்பு: டெல்லியில் 3 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது

  டெல்லி: இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புனேவில் நடந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது இவர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது.

  முன்னதாக கர்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் 3 பேர் சிக்கியுள்ளனர்.

  இந்த அமைப்பின் தலைவரான யாசின் பத்கலின் உத்தரவுகளின்படி டெல்லியில் தாக்குதலுக்கு இவர்கள் தயாராகி வந்ததும் தெரியவந்துள்ளது.

  இவர்கள் பதுங்கியிருந்த டெல்லி புல் புர்கலாத்பூர் பகுதி வீட்டிலிருந்து வெடி மருந்து, வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

  டெல்லியில் ஆயுத பூஜையின்போதும், பிகாரில் புத்த கயாவிலும் இவர்கள் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இவர்களைக் கைது செய்ததன் மூலம் நடக்கவிருந்த தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 2. இந்தியா சுதந்திர போராட்டத்தின்போது “நவகாளியில்” ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். காந்திஜி அந்த இடத்திற்கு சென்று “இந்துக்களை” சமாதானப்படுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி இளைஞர்களை கேட்டுக்கொண்டார். அப்படியெல்லாம் கொடுமைக்கு ஆளானார்கள் நமது இந்துக்கள். பழிக்குப்பழி ரத்தத்திற்கு ரத்தம் கொடுத்தே ஆக வேண்டும். காலம் கனியட்டும்!!! வீரத்தின் விளைநிலம் நமது பூமி. வெற்றி நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *