இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா?…திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்…ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது….

View More இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

View More இரு பெண்களின் கதை

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….

View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி