பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு…

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

View More குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்” என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

View More வள்ளுவமும் வைணவமும்

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

View More பணிப்பொன்

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.

அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…

View More அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

சகோதரர்களுக்கிடையே ஒப்பீடு

பலரும் இதுபோன்ற ஒப்பீடுகளின் சுமையை உணர்ந்திருப்பீர்கள். மனித வாழ்வின் ஒரு நிலையான அம்சம் இந்தச் சகோதர ஒப்பிடல்.

மனிதனாகவே வாழ்ந்த, மனிதனாகவே வடிக்கப்பட்ட, மனிதனாகவே காட்டப் பெற்ற கம்பனின் இராமனும் இதிலிருந்து தப்பவேயில்லை…

View More சகோதரர்களுக்கிடையே ஒப்பீடு