காஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று. ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது… ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா எழுதி வைத்திருக்கும் குறிப்புக்கள் அதை இன்று படிக்கும் எவரையும் நிலைகுலையச் செய்யும் – “… வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின் அழுகைச் சத்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடிமையின் துன்பமும் மற்றவனை விடவும் அதிகமாகவிருந்தது. பலரின் கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சிலரோ தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள். பிள்ளைகள் தங்களின் அன்னையரிடமிருந்து பிரிந்து திரிந்தார்கள். மனைவிகள் கணவன்களிடமிருந்து….சிறிதும் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதல்களின் காரணமாக. முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் வலியாலும், பசியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள்…”
View More வன்முறையே வரலாறாய்…34Tag: இஸ்லாமியப் படையெடுப்பு
வன்முறையே வரலாறாய்…- 33
ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட.. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான்… 1070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது… 1398ம் வருடத்திய தில்லிப் படையெடுப்பைத் தொடர்ந்து தைமூரின் படைகள் வட இந்தியா முழுவதும் கொலை வெறியாட்டமிட்டன.. தைமூர் ஏறக்குறைய 25 இலட்சம் வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான் என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்..
View More வன்முறையே வரலாறாய்…- 33நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்வன்முறையே வரலாறாய்… – 20
சிறிய தீவுக் கூட்டங்களில் நெருங்கி வாழும் மக்களின் மீது செலுத்தப்பட்ட கட்டற்ற வன்முறையே இந்தோனேஷியா மற்றும் ஃபிலிப்பைனில் பெருமளவு பழங்குடிகளை வெகு வேகமாக இஸ்லாமியர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது என்பதே இன்றைய வரலாற்றாசிரியர்களின் முடிவு. சூஃபிக்கள் அமைதியான முறையில் தென் கிழக்கு ஆசியாவில் இஸ்லாமைப் பரவச் செய்தார்கள் என்பது வெறுக் கட்டுக்கதையே அன்றி வேறோன்றுமில்லை. மேலும் அப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான ஷாஃபி இஸ்லாமிய சட்டங்களும் இதற்கு இன்னொரு காரணம். இந்தியாவில் கொடூரங்கள் ஓரளவிற்குக் குறைந்த ஹனீஃபி இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்து காஃபிர்கள் “திம்மி”க்களாக நடத்தப்பட்டார்கள். ஆனால் ஷாஃபி சட்டங்கள் “மதம் மாறு; அல்லது மரணம்” என்னும் கொள்கையை உடையது….
View More வன்முறையே வரலாறாய்… – 20வன்முறையே வரலாறாய்… – 19
தொடர்ந்த தோல்விகளால் மிகவும் மோசமான நிலையிலிருந்த பரமேஸ்வரன் அவனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முஸ்லிம் படைவீரர்களை முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான். 1410-ஆம் வருடம் முஸ்லிமாக மதம் மாறிய பரமேஸ்வரன், ஸ்ரீவிஜய அரசினை ஒரு முஸ்லிம் சுல்தானிய நாடாக – சுல்தானேட் ஆஃப் மலாக்கா – அறிவித்ததுடன் அவனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றி கொண்டான்…. மலாக்கா சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்த வன்முறை (ஜிகாத்) பெருமளவில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இஸ்லாமின் ஆக்கிரமிப்பை அந்தப் பகுதிகளில் பரப்பும் நோக்கத்துடன் சுல்தானேட்டைச் சுற்றியிருந்த நாடுகளின் மீதான ஜிகாத் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத அடிப்படைவாதம் கொண்ட சுல்தானியப் படையினர் “காஸி”களாகும் (காஃபிரை கொல்பவர்கள்) நோக்கத்துடன் சுற்றியிருந்த நாடுகளின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்…
View More வன்முறையே வரலாறாய்… – 19வன்முறையே வரலாறாய்… – 18
அல்ஜீப்ரா முதன் முதலில் இந்திய எண்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது. இந்திய கல்வியின் உயரிய நிலையை அறிந்திருந்த பாரசீக அப்பாஸித் கலிஃபாக்கள், தங்களின் நாடுகளிலிருந்து கல்வியாளர்களையும், வியாபாரிகளையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து, அவர்களை இந்தியர்களிடமிருந்து கல்வி கற்று வரும்படி ஊக்குவித்தவர்களாக இருந்தார்கள்… அல்-புரூனி அவருடைய புகழ்பெற்ற படைப்பான “கிதப் ஏ ஹிந்த்” என்ற நூலில் பழம்பெரும் இந்திய கலாச்சாரத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்த நூல் 1030-ஆம் வருடம் அராபிய மொழியில் எழுதப் பட்டது… இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் உச்சத்தில் (8 முதல் 11-ஆம் நூற்றாண்டுகள்), இந்தியா உலகத்தின் மிக செல்வ வளமுடைய நாடாக இருந்தது. தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த வைரமும், ரத்தினமும், மதங்களும், கலாச்சாரமும், கலைகளும், இலக்கியமும் பெரு வளர்ச்சியடைந்ததாக இருந்தது….
View More வன்முறையே வரலாறாய்… – 18வன்முறையே வரலாறாய்… – 16
இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிகாதி மனோபாவமுடையவர்களாக, ஏன், அவர்களே ஜிகாதிகளாக இருந்ததாகத்தான் வரலாறு நமக்கு எடுத்துக் கூறும் உண்மை. இது அவர்கள் (சூஃபிக்கள்) வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறு. அவர்களின் மொழியில் சொல்வதானால், காஃபிரி இந்துக்களால் அல்ல.
View More வன்முறையே வரலாறாய்… – 16வன்முறையே வரலாறாய்… – 15
இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் என்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.
View More வன்முறையே வரலாறாய்… – 15வன்முறையே வரலாறாய்… – 14
எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ண ராயரின் படைகளைத் தாக்கிய முஸ்லிம் படைகள், கிருஷ்ண ராயரின் 10,000 படைவீரர்களைக் கொன்றார்கள். அதன்பிறகும் ரத்தம் குடிக்கும் வெறியடங்காத சுல்தான், விஜய நகரத்திலிருக்கும் அத்தனை குடிமக்களையும் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். இதனைக் கேள்விப்பட்டுப் பதறிய கிருஷ்ண ராயர், சுல்தானுடன் சமாதானம் பேச தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். அதனை ஃபெரிஸ்டா இவ்வாறு பதிகிறார் – “அரசர் தவறு செய்தால் ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்கள் என்ன செய்வாரகள்? என்று தூதுவர்கள் கேட்கிறார்கள். அதற்கு சுல்தான், அல்லா எல்லா சிலைவழிபாட்டார்களையும் கொன்றழிக்கச் சொல்லி (குரான் 9:5) உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதன்படி செய்யவேண்டியது எதுவோ அது செய்யப்படும். உலகின் எந்த சக்தியாலும் அதனை மாற்ற முடியாது என்று பதிலளித்தான்.”…
View More வன்முறையே வரலாறாய்… – 14வன்முறையே வரலாறாய்… – 13
இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்… திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்….
View More வன்முறையே வரலாறாய்… – 13