மணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற மகள் பிறந்தவீட்டுக்கு நெடுநாட்கள் கழித்து வருகிறாள். அவளைக் கண்ட தாயின் தவிப்பும் அங்கலாய்ப்பும், கணவனைப் பற்றிய மகளின் பெருமிதமும் இக்குறுங்காவியத்தில் சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன. இதில் மகள் உமை. தாய், இமவானின் மனைவியாகிய மேனை. பரமேசுவரனைக் காதலித்து விரும்பி மணந்து கயிலைக்குச் சென்ற உமை நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் தனது இரு மக்களுடனும் தாய் வீட்டுக்கு வருகிறாள்.
View More யாரே அழகுக்கு அழகு செய்வார்?Tag: உமையன்னை
சிவமாக்கும் தெய்வம்
முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா உடனான தொடர்பு தமிழ்ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்… எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது…
View More சிவமாக்கும் தெய்வம்வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….
View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?