மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.

View More மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்

ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை…

View More வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்

வெ.சா. பக்கம்: செல்வமாகாளி அம்மன்

வெளியூரில் எங்கிருந்தாலும், எவ்வளவு தூரத்திலிருந்தாலும், உடையாளூர் வாசிகளை பங்குனி உத்திரத்தில் நடக்கும் தன் உற்சவத்திற்கு அழைத்துவிடும் தெய்வம் செல்வமாகாளி அம்மன்தான். கனம் கிருஷ்ணய்யரையே ஊர்வலம் வந்த அக்கணமே ஒரு கீர்த்தனையை இயற்றிப் பாட வைத்த அம்மன். உ.வே.சா.வின் எழுத்துக்களில் இடம்பெற்றது உடையாளூர் சிவனோ பெருமாளோ இல்லை. செல்வமாகாளி அம்மன் தான்…

View More வெ.சா. பக்கம்: செல்வமாகாளி அம்மன்