இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.
View More சோமபானம் என்னும் மர்மம்Tag: சடங்குகள்
வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
பதினொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் வங்கத்தில் நிலவிய இந்துமத வாழ்க்கையும் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். இந்து மதத்தின் வேதங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் முரணான, சம்பந்தமற்ற எவ்வளவோ கொடிய பழக்கங்கள் நம்பிக்கைகளும், இந்து மதத்தின் பெயரைச் சொல்லி அவ்வப்போது கால நீட்சியில் தோன்றியபோதிலும், அவ்வப்போது இந்துமதம் தன்னை விமர்சித்துக்கொண்டு புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது, அந்த விமர்சனங்கள் இந்து மதத்தின் உள்ளிருந்தே எழுகிறது என்பதை இந்த ஆவணம் நமக்குச் சொல்லாமல் சொல்கிறது.
View More வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்