சோமபானம் என்னும் மர்மம்

soma1வேதங்கள் சோம பானம் (சோமத்தை அருந்துவது) குறித்து பேசுகின்றன என்பது  அனைவரும் அறிந்த விஷயம்.

”சோம” என்பது ஒரு  தாவரம். வேத இலக்கியத்தில் இந்தத் தாவரம்  வனத்தின் தலைவன் (வனஸ்பதி), வாழ்விடத் தலைவன் (ஷேத்திரஸ்பதி), வாக்கின் தலைவன் (வாக்பதி) என்றெல்லாம் போற்றப்படுகிறது. ரிக் வேத செய்யுட்களில் 120 பாடல்கள் தாவரமான சோம தெய்வத்துக்கு பாடப்பட்டவையாகும். வேத இலக்கியத்தில்,  புனித உலகின் காரணமும்,விளைவும் தந்தையும் மைந்தனும் சோமக் கொடியேயாகும் என்று உருவகப் படுத்தப் பட்டிருக்கின்றது.

இவ்வாறெல்லாம் போற்றப்படும் இந்த சோமத் தாவரம் எது? பல மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் இச்செடியை இந்தியாவுக்கு வெளியே உள்ளதாகவும்,  போதை அளிப்பதாகவும் உள்ள ஒரு தாவரத்துடன் ஒப்பிடுகின்றனர். இதில் ஒத்த முடிவும் இல்லை. உதாரணமாக, மார்ஜுவானா/கஞ்சா (தாவரவியல் பெயர்: Cannabis sativa), soma4ஓப்பியம் பாப்பி (Papaver somniferum L.), சிரியன் ரூ (Syrian Rue) (Peganum harmala L.), சீன ஜின்செங்க் (Panax), மற்றும் போதை தரும் பூஞ்சணம் (Amanita muscaria) ஆகியவை எல்லாம் சோம பானத்துக்கு பயன்படுத்தப்படும் செடியாக இருக்க வேண்டும் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவை எதுவுமே இந்தியா முழுவதும் நிலவிவரும் வைதீகப் பண்பாட்டால் மதிக்கப்படவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். மேலும் இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்குக் காணலாம். மேலும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தை கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது.

சோம தேவதையை ஒரு கிழங்காகச் சொல்லும் வேதம் அதனை நேராக நிற்கும் தெய்வீக அச்சாகவும் உருவகிக்கிறது. அதன் தோற்றம் தாவரங்களிடையே ஒரு அம்பினைப் போல இருந்ததாகவும், அது நாணலாகவும்,  ஒரு மூலிகையாகவும் விளங்குவதாகவும் போற்றப்படுகிறது.  சோமம் படரும் தாவரமாக (”சோம லதா” – சோமக் கொடி) உருவகிக்கப் ப்படுவது வேதங்களில் இல்லை என்றும்  அது பிற்காலத்திய இலக்கிய உருவகமே என்றும்  மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறல்ல என சமீப கால ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

வேதம் எப்போதுமே குறியீட்டுத் தன்மையுடன் (symbolic) பேசுகிறது. சோமச்செடியின் தவழ்ந்து படரும் தன்மை அதே குறியீட்டுத் தன்மையால் விளக்கப்படுகிறது என்கின்றனர் இவர்கள். உதாரணமாக சோமத்  தாவரம் ஆகாசம் வரை நெடிந்துயர்ந்து பிரபஞ்ச அச்சாக விளங்கும் தன்மை ஒரு பாம்பு அதன் தோலை உதிர்த்து எழுவதற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. சோமம் வேதத்தின் மைய தொன்மங்களில் ஒன்றான விருத்திர சர்ப்பத்துடனும் இணைத்து பேசப்படுகிறது. அத்துடன் வேத ஞானமே சர்ப்ப வித்தை என அழைக்கப்படுகிறது. இவையெல்லாமே வேதத்தில் சோமச்செடியின் படர்ந்து தவழும் தன்மை குறிப்பாக உணர்த்தப் பட்டதற்கான ஆதாரம் என்கின்றனர் நவீன அறிஞர்கள்.

soma10மக்கட்குழு தாவரவியல் (Ethno-Botany) என்பது வரலாற்று, பண்பாட்டு தொன்மத் தகவல்களையும்,  தாவரங்கள் மக்கள் பண்பாடுகளில் எவ்வித மருத்துவ, ஆன்மிக பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதையும்,  நவீன தாவரவியல்/மருத்துவவியல்/உயிர் வேதியியல் தரவுகளுடன் இணைத்துப் பார்க்கும் புதிய அறிவியலாகும். இதனை காலனியத்துக்கு பின் எழுந்த அறிவியல் பார்வை (post-colonial) என்றும் சொல்லலாம். பொதுவாக நவீன அறிவியக்கத்தில் முன்வைக்கப்படும் ஐரோப்பிய மையப் பார்வை இதில் பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அத்தகையதோர் தாவரவியலாளர் ஆவார். இவர் சோம தேவதையின் மேற்கூறிய வேத விவரணத்  தரவுகளின் அடிப்படையில் சோமத் தாவரத்தைக் கண்டடைய முயற்சி செய்தார். வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய பண்பாட்டு மண்டலத்தில் ஒரு மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் அவர் சிந்து சமவெளி பண்பாட்டிலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பௌத்த பண்பாடுகளை ஆராய்ச்சி செய்யலானார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத்  தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார். இந்த வேத ஆன்மிகத்தின் மைய உருவகத்துக்கும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டுகிறார்:

சிந்து நதிப் பண்பாடு  கி.மு. இரண்டாயிரங்களில் செழித்தோங்கியிருந்தது. இப்பண்பாட்டில் தாமரை முக்கியமான ஐதீக மற்றும் ஆன்மிக பயன்பாடு கொண்டதாக இருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இப்பண்பாட்டின் காலகட்டம் வேத செய்யுட்களை கவி-ரிஷிகள் பஞ்சாப் பிரதேசத்தில் உருவாக்கிய அதே காலகட்டத்துடன் இணைவதாக அமைந்துள்ளது. [சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும்] சிறிய, ஆனால் விஸ்தீரணமான இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது. இதன் இருபுறமும் காட்டப்பட்டுள்ள கொம்புள்ள பூதநாகங்கள் போன்ற விலங்குகள் ரிக்வேத தொன்மத்தை ஒத்துச்செல்கின்றன.

இந்த அடிப்படையில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு குறித்து இந்த ஆராய்ச்சியாளர் கூறும் கருத்து என்ன? தமிழ் ஹிந்து தளத்துக்கு திரு. மெக்டொனால்டு அளித்த மின்னஞ்சல் பதில்களில் ஆரிய இனக் கோட்பாடு குறித்து அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு பின்வருமாறு:

soma3ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டின் தொன்ம அடிப்படை விருத்திரன் எனும் சர்ப்பத்தை இந்திரன் கொல்வதுதான். ஆனால் இந்த தொன்மம் இங்கே முழுமையான விதத்தில் (அதாவது பாரதப்பண்பாட்டுக்கு உகந்த படி காலனிய பார்வையின் திரிவுகளைத் தவிர்த்து) மறு ஆக்கம் செய்யப்படுகிறது. மத்திய ஆசியாவிலிருந்து வந்த வெள்ளைத் தோலர்கள் கறுப்பின மக்களை வெற்றிக்கொண்டதாக இந்தத் தொன்மத்தைக் காண எந்த ஆதாரமும்  இல்லை.

சொல்லப் போனால் இது காக்கஸியர்களைக் (caucasians) குறித்ததே அல்ல. ஆரிய என்கிற பதத்தின் ஆகப் பழமையான சொல்லாட்சி இந்திய இலக்கியத்திலிருந்தே வருகிறது. மேலும் இந்தப் பதத்துடன் இணைந்த ஒரு இலச்சினையான ஸ்வஸ்திகத்தின் ஆகப் பழமையான சித்தரிப்பு சிந்து சமவெளி இலச்சினைகளிலேயே கிடைக்கிறது. அங்கிருந்தே அது ஐரோப்பிய பகுதிகளுக்கு செல்கிறது.

ஐரோப்பிய மையம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் செய்த தவறுகள் திருத்திக்கொள்ளப்பட நிச்சயமாகக் காலம் பிடிக்கும். நாம் பொறுமையாக இருக்கவேண்டும். சோம பானச்சடங்கு கண்டங்களிலெல்லாம் பரவியிருந்ததொரு சடங்காகும். வேத ரிஷி-கவிகள் பசுவுடன் இணைந்த விவசாய வாழ்க்கை வாழ்ந்ததை அறிவியல் கண்ணோட்டத்துடன் வேத இலக்கியத்தை அணுகுவோர் கண்டு கொள்ள முடியும். இது நாடோடி-கால்நடை மேய்க்கும் வாழ்க்கையன்று. இந்த அடிப்படையில் ஹரப்பா பண்பாடானது இந்தோ-ஆரிய பண்பாடு என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மெக்டொனால்டைப் பொறுத்தவரையில் இந்தோ-ஆரிய பண்பாடு என்பது இனத்தைக் குறிக்கும் சொல்லன்று. அது வேத பண்பாட்டு அம்சங்கள் ஆசியக் கண்டத்திலும், யுரேசியப் பகுதிகளிலும் பரவியதைக் குறிப்பதாகும்.

ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.

துணைபுரிந்தவை:

 • Andrew Mcdonald, A botanical perspective on the identity of Soma (Nelumbo nucifera Gaertn) based on scriptural and iconographic records, Economic Botany, pp. S147-S173. 2004.
 • ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அளித்த மின்னஞ்சல் பதில்கள்/விளக்கங்கள்: ஜூலை 20 & 21, 2009

35 Replies to “சோமபானம் என்னும் மர்மம்”

 1. Some People and Karunanidhi like filthy politicians must know what is soma bhanam & sura bhanam. Without having proper knowledge and only to insult the wonderful culture&tradition of this great country, they are opening their nasty mouth with dirty words.

  to the author: does soma yagyam is having any connection with this soma bhanam or soma plant? Kindly explain this, if possible?

  Excellent article

 2. ப‌ண்டைய இந்திய சமுதாயத்தை விமரிசிக்க வேண்டும் என்று விரும்புப‌வ‌ர்க‌ள் மூலை, முடுக்கெல்லாம் தேடி இந்த சோம பான விவகாரத்தை கையிலே எடுக்கிறார்க‌ள்..

  அதற்க்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ நமக்கு புரியவில்லை.

  இந்த சோம பானமானது வேள்விகளில் படையல் பொருளாக வைக்கப் படும் பாயசத்தைக் கூட சொன்னார்களோ, அல்லது இந்த தேவர்கள் என்று சொல்லப் ப‌டுப‌வ‌ர்கள் அருந்திய‌ அமுத‌ம் என்று சொல்ல‌ப் ப‌டும் பானமா என்று ந‌ம‌க்குத் தெரியாது.

  அவ‌ர‌வ‌ர்கள் மன‌துக்கு பிடித்த‌ பான‌த்தை இதான் சோம‌ பான‌ம் என்று சொல்ல‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர்.

  என்னைக் கேட்டால் டேஸ்ட‌ர்ஸ் சாய்ஸ் காபிதான் சோம‌ பான‌ம் போல‌ இருக்கு என்று சொல்வேன்.

  குவார்ட்ட‌ர் கோயிந்த‌னைக் கேட்டா, மெக்டோனால்டு விஸ்கி தான் சோம‌ பான‌ம் என்கிரார்.

  ஹை கிளாஸ் குடி ம‌க‌னோ, புளூ லேபில்தான‌ சோம‌ பான‌ம் என்கிரார்.

  அவ‌ர‌வ‌ருக்கு பிடித்த‌ பான‌த்தை சோம‌ பான‌மாக‌ க‌ருதி ப‌ருகும் குடிம‌க‌ன்க‌ளே, நீங்க‌ள் வாழ்க‌!

 3. ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே,

  நல்லா கவனிங்க, அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை.

  முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

  அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே,

  அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது?

  ருஷியாவா? மத்திய ஆசியாவா?

  ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

  நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால்,

  அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சூட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால்,

  கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

  ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?

  நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல,

  ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?

  உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?

  இந்த ஆரியர்கள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள்
  என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.

 4. நல்ல கட்டுரை அய்யா! நீங்கள் எழுதிய “Aryan Invasion truth” என்கிற கட்டுரையையும் scribd-இல் படித்தேன்… ஆரியன்/திராவிடன் எனும் இனவாதத்தை முறியடிக்கும் உங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்கள்.. உங்களைப்போன்ற வல்லுனர்கள் தேவை!

 5. A very nice article. I would like to refer to ‘Hindhu Dharma” by His Holiness Shri Chandrasekhara Saraswathi Swamigal of Kanchi Mutt (Maha Periyavargal) where all clarifications about Soma Tree, Soma Bhanam, Aryan-Dravidian divide etc. are given. It is a MUST that every Hindu should read and follow.
  Kind Regards
  Ramaswamy

 6. MUST என்று எப்படி சொல்ல முடியும்? அப்படியானால் அந்த நூல் வரும் முன்பு யாரும் இந்து மதத்தை சரியாகப் பின்பற்றவில்லையா?

  “I suggest to read” என்று எழுதினால் யாரும் ஆட்சேபிக்கப் போவது இல்லை.

  (Edited)

 7. Dear Mr.Tiruchikaran,

  You have been writing good comments but dont know why you hate Kanchi mutt. It may be your personal opinion, then its better to keep it with yourself. By such a comment you are no different from a missionary christian or a muslim (abusing someone or someone’s belief). ‘Must Read’ is a generally used term (like a slang). People have told me and I too have told others ‘Vivekanada’s words are a must read for every Hindu’. Similary I also say ‘Deivathin Kural’ is a ‘Must Read’. Its just a phrase to say how good it is.
  In fact, you will get lot more insight about Hindusism from Deivathin Kural than anywhere else (in the sense, crisp, consise and in a single place of reference).
  Your comments about Kanchi mutt and Maha periava are not in good taste.
  I dont want to argue with you on this and will not even reply if you give a long explanation, but please dont hurt others belief. Then you are no good than a preching missionary or the ‘fatwa’ issuing maulvi.

  Satish

 8. ஐயா ச‌தீஷ் அவ‌ர்க‌ளே ,

  முக்கிய‌மான‌ பொருளிலே குறுக்கு சாலை ஓட்டி விட்டு, நான் உங்க‌ளை புண் படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள்.

  இங்கே விவாதிக்கப் ப‌டுவ‌து என்ன‌ பொருள்?

  சோம‌ பான‌ம் ம‌ற்றும் இந்தியாவின் ஆதி குடிகளான‌ ஆரிய‌ர்க‌ள் வெளியில் இருந்து வ‌ந்த‌தாக‌ க‌தை க‌ட்ட‌ப் ப‌டுவ‌து ப‌ற்றி.

  யாராவ‌து அது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்துக்க‌ள் ஏதாவ‌து நூலில் கூறி இருந்தால், அதை மேற்கோள் காட்டினால் ப‌ல‌ன் உண்டு.

  அதை விட்டு, ராஜ‌ மார்த்தாண்ட‌…. என்ப‌து போல‌ க‌ட்டிய‌ம் கூறுவ‌தால் என்ன‌ ப‌ல‌ன்?

  ஒவ்வொரு ம‌னித‌னிட‌மும் ஆன்மீக‌ம் சென்று அடைய‌ வேண்டிய‌ கால‌த்திலே, ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை எல்லொரிட‌மும் கொடுக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். அப்ப‌டி செய்யா விட்டால் இன்னும் அதிக‌ விப‌ரீத‌ங்க‌ள் ஏற்ப‌டும்.

  வெரும‌னே துதி பாடுவ‌தில் க‌வ‌ன‌ம் செலுத்தி இருக்கிரோம். அத‌னால் ஆன்மீக‌த்தை ச‌ரியாக‌ நாம் புரிந்து கொள்ள‌வில்லை – இதுதான் நான் அழுத்திக் கூற‌ விரும்புவ‌து.

  காஞ்சி ம‌ட‌மோ, பூரி ம‌ட‌மோ, சிருங்கேரி ம‌ட‌மோ, இராம‌கிரிஷ்ண‌ ம‌ட‌மோ, க‌ருத்துக்களை எடுத்து வையுங்க‌ள், அத‌ன் அடிப்ப‌டையிலே ம‌க்க‌ள் தெளிவு பெருவார்க‌ள்.

  நான் ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் காஞ்சி ம‌ட‌ம் ப‌ற்றியோ, வேறு ம‌ட‌ம் ப‌ற்றியோ க‌ருத்து தெரிவிக்கிரேனா? க‌ட‌ந்த‌ ஒரு மாத‌த்தில் நான் இட்ட‌ பின்னூட்ட‌ங்க‌ளை பாருங்க‌ள், இருந்தால் சொல்லுங்க‌ள்.

  நான் ஒன்றும் ஃப‌த்வா விதிக்க‌வில்லை.

  ம‌ஸ்ட் என்று எழுதுவ‌தும், அதில் த‌ப்பில்லை என்று இன்னொரு ம‌ஸ்ட் போடுவ‌துமாக‌ ஃப‌த்வா போடுவ‌து நீங்க‌ள் தான்.

  //க‌ருத்துக்க‌ள் ஏதாவ‌து இருந்தால் அதை எடுத்து வையுங்க‌ள், வெறும‌னே துதி பாடினால் இன்னும் அதிகமான‌ இருட்டுக்குப் போவோம்// என்று கூறினால் அது ஃப‌த்வா வா?

  புண் ப‌ட்டுக் கிட‌ப்ப‌து நான் தான்.

  ச‌முதாய‌மே புண் பட்டுக் கிட‌க்கிற‌து.

  நீங்க‌ள் புண்ணுக்குப் புனுகு பூசுகிறீர்க‌ள்.

 9. அன்புள்ள சதீஷ் அவர்களுக்கு திருச்சிக்காரர் அவர்களுக்கு “MUST” usage and clarification கொடுத்ததற்கு நன்றி.
  திருச்சிக்காரர் அவர்களே – வணக்கம். ஒரு நல்ல சுற்றுலா இடத்தைப் பற்றியோ, திருக்குறள் மற்ற நல்ல நூல்களைப்பற்றி பேசும்பொழுது, “இது பார்க்கப் படவேண்டிய இடம், செல்லவேண்டிய இடம், படிக்கப் பட வேண்டிய நூல்” என்று குறிப்பிடுவது வழக்கம் தான். அதுமாதிரியே ஆங்கிலத்திலும் “A Must Visit Place, A Must Read Novel or Book” என்று சொல்வது நடைமுறையில் உள்ளது. இது உங்களுக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும். பல விஷயங்கள் விவாதிக்கப்ப்டும் பொழுது, ஒரு மாமுனிவரின் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதற்காகவே எழுதினேன். ஏற்புடையதாக இருந்தால், நல்லது. நல்ல விஷயங்கள் எங்கு யார் சொன்னாலும் ஏற்பது நல்லது தானே? நீங்கள் சொல்லும் நல்ல செய்திகளை எவ்வளவு நண்பர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். எனக்கு வயது 67 ஆனாலும், அலுவலக அனுபவம் 40 ஆண்டுகள் இருந்தாலும் இன்னும் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன். தவறென்று தோன்றினால், மன்னிக்கவும்.
  Hindu Dharma comprises of 827 pages of which a small portion gives reference to Soma Bhana which I reproduce below for reference, from pages 240-241 of Chapter 23. It is indeed a Treasure and “it is suggested” that anyone needing clarification on Hindu Dharma may refer to this authored by the Revered Saint.

  VOICE OF THE GURU
  PUJYASRI CHANDRASEKHARENDRA SARASWATI SWAMI
  HINDU DHARMA
  The Universal Way of Life – Chapter 23, part of pages 240-241

  “There is another falsehood spread these days, that Brahmins performed
  the somayajnas only as a pretext to drink somarasa (the essence of the
  soma plant). Those who propagate this lie add that drinking somarasa is
  akin to imbibing liquor or wine. As a matter of fact somarasa is not an
  intoxicating drink. There is a reference in the Vedas to Indra killing his foe
  when he was “intoxicated” with somarasa. People who spread the above
  falsehoods have recourse to “Arthavada” and base their perverse views
  on this passage.
  The principle on which the physiology of deities is based is superior to
  that of humans. That apart, to say that the priests drank bottle after
  bottle of somarasa or pot after pot is to betray gross ignorance of the
  Vedic dharma. The soma plant is pounded and crushed in a small mortar
  called “graha”. There are rules with regard to the quantity of essence to
  be offered to the gods. The small portion that remains after the oblation
  has been made, “hutasesa”, which is drunk drop by drop, does not add
  up to more than an ounce. No one has been knocked out by such
  drinking. They say that somarasa is not very palatable. .
  The preposterous suggestion is made that somarasa was the coffee of
  those times. There are Vedic mantras which speak about the joy aroused
  by drinking it. This has been misinterpreted. While coffee is injurious to
  the mind, somarasa cleanses it. It is absurd to equate the two. The soma
  plant was available in plenty in ancient times. Now it is becoming more
  and more scarce: this indeed is in keeping with the decline of Vedic
  dharma. In recent years, the Raja of Kollengode made it a point to supply
  the soma plant for the soma sacrifice wherever it was held.”
  Thanks to everyone. Regards
  V.Ramaswamy

 10. i agree with Mr Satish. Tiruchikaran, you are demeaning yourself by knocking down His Holiness Maha Periyaval. It will a drawn out affair arguing with you on this.Congenital hatred of Kanchi Mutt perhaps? IT LOOKS LIKE YOU SHOW MOR RESPECT TO MYTHICAL J.CHRIST THAN TO HIS HOLINESS PERIYAVAL OF KANCHI.

 11. நாம் எல்லோருமே புத்தர், ஆதி சங்கரர் போல ஞானத்தை அடைந்தால் மட்டுமே விடுதலை அடைய முடியும்.

  அப்படி விடுதலை அடைவதற்கான ஆன்மீக ஏற்றம் பெற வேண்டிய தகுதியும், அவசியமும் எல்லோருக்கும் இருக்கிறது.

  அரசியலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதல்வர் தான், ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்தான் இருக்க முடியும், ஆனால் ஆன்மீகத்தில் ஒரே நேரத்தில் பல ஞானிகள் இருக்க முடியும்.

  நாம் எல்லோரும், எத்தனை பேர் முடியுமோ அத்தனை பேர், ஞானிகள் ஆகி விடுதலை பெற வேண்டும் என்ற கருணையினால் தான், புத்தர், ஆதி சங்கரர் போன்றவர்கள் அவ்வளவு சிரம மெடுத்து இந்தியாவெங்கும் சுற்றி உபதேசம் செய்தனர்.

  எல்லோரிடமும் ஒரே ஆத்மா தான் இருக்கிறது என்றுதானே சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார்?

  ஆனால் ஒரு சிலரை மட்டும் மிக உயர்வாக எழுதியதைப் படிக்கும் போது அந்த விடுதலையும் (முக்தி), ஞானமும் ஏதோ ஓரிருவருக்கு மட்டுமே வரும் வாய்ப்பு உள்ளது போல எண்ணத்தை உண்டாக்கி, மற்றவர் வழக்கம் போல இந்த உலக வாழ்க்கையில் ஏமாறும் வாய்ப்பு உள்ளது.

  எனவே தான் வெறுமனே ஓவர் பில்டப் கொடுப்பதை விட்டு முன்னேறுவதைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.

  யார் வேண்டுமானாலும் என்னை கீழானவனாக, கெட்டவனாக நினைத்துக் கொள்ளுங்கள், என் தலையிலே சாணியை அரைத்து வூற்றுங்கள் – நான் இங்கே வந்தது உங்களிடம் நல்ல பெயர் எடுக்க மாலை, மரியாதை பெற்றுக் கொள்ள அல்ல.

  என்னுடைய சமுதாயத்தை அழிவில் இருந்து, அழுகுவதில் இருந்து மீட்க.

  நான் எதற்கு வெறுக்க வேண்டும்? அத்வேஷ்டா என்பதுதானே எனது அடிப்படைக் கருத்து. பிறவியிலேயே என்றால், நீங்கள் எல்லாம் பிறவியிலேயே குபேரக் குட்டிகளாக இருந்தால் இருந்து கொள்ளுங்கள்,எனக்கு அதிலே மகிழ்ச்சிதான்.
  (குறிப்பு : என் உறவினர்கள் எல்லோரும் அதே அமைப்பின் அத்யந்த சீடர்கள் தான்)

  தடித்த வார்த்தைகளை பயன் படுத்தினால் நான் பயப்பட மாட்டேன்.

  மூளை சலவை செய்து கொண்டவர் எந்த பேரை வைத்துக் கொண்டாலும் அவர்கள் ஆபிரகாமிய மதத்தவரில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல.

  இவர்களுக்கு சொல்வதற்கு பதில் ஆரியதாசன் போன்ற சகோதரர்களுக்கு சொல்லலாம். நியாயத்தை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உடையவர்கள்.

  என்னவோ செய்து கொள்ளுங்கள்!

  நான் எழுதுவதுதானே உங்கள் கண்ணை உறுத்துகிறது? நான் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்!

  ஆனால் நான் போனால் இன்னொருவன் வருவான். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. உலகம் உருண்டை என்று ஒரே ஒருத்தன் தான் சொன்னான். மற்ற எல்லோரும் தட்டை என்றுதான் நினைத்து அவனைப் போட்டுக் கொளுத்தினார்கள். ஆனால் உண்மையைக் கொளுத்த முடியாது!
  அவன் சொன்னதுதான் உண்மை, அதுதான் ஜெயித்தது.

  சத்யம் ஏவ ஜெயதே!

 12. Thanks Mr. Ramasamay,

  I could have taken it correctly, if it was mentioned as “MUST read” in the first instance.

  Thanks for explanation.

 13. திரு ராமசாமி அவர்களே,

  வணக்கம்.

  உங்களையோ இன்னும் மற்றவரையோ மரியாதை இல்லாமல் பேசுவதாக எண்ணி விட வேண்டாம்.

  உங்களைப் போன்ற பெரியவர்கள், வணக்கத்துக்குரிய பெரியவர்களாக இருந்தாலும், வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக இருப்பது சிலருக்கு வாய்ப்பாக அமைத்து விடுகிறது.

  இந்து மதம் மிக முக்கியமான கட்டத்திலே இருக்கிறது. அது எப்படி போகும் என்று கணிக்கும் அளவுக்கு நான் இல்லை.

  உங்களை போன்றவர்கள் மன வருத்தம் அடையும் வகையிலே என் எழுத்து அமைந்து விட்டால் அது வேண்டும் என்றே அப்படி எழுதப் பட்டது அல்ல என்பதை தெரிவிக்கிறேன்.

 14. ///நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால்,

  அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சூட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால்,

  கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

  ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே///

  திரு திருச்சிக்காரர் அவர்களே,
  மிக ஆழமான,அருமையான சிந்தனையெய் , தூண்டும் கருத்துக்கள்.இதைப் படிக்கும் போது ”ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தனர்” என்ற பொய்கள் விரைவில் இந்நாட்டிலிருந்து ஓடும் நேரம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்.

 15. திருச்சிக்காரன் அவர்களே

  //Ramasamy wrote- would like to refer to ‘Hindhu Dharma” by His Holiness Shri Chandrasekhara Saraswathi Swamigal of Kanchi Mutt (Maha Periyavargal) where all clarifications about Soma Tree, Soma Bhanam, Aryan-Dravidian divide etc.//

  you – //சோம‌ பான‌ம் ம‌ற்றும் இந்தியாவின் ஆதி குடிகளான‌ ஆரிய‌ர்க‌ள் வெளியில் இருந்து வ‌ந்த‌தாக‌ க‌தை க‌ட்ட‌ப் ப‌டுவ‌து ப‌ற்றி.
  யாராவ‌து அது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்துக்க‌ள் ஏதாவ‌து நூலில் கூறி இருந்தால், அதை மேற்கோள் காட்டினால் ப‌ல‌ன் உண்டு//

  If I am reading Mr.Ramaswamy wrong, please correct me. Is he not quoting a refernce where the details of soma are given?

  இதற்கு தாங்கள் – //மகா பெரியவ கிகா பெரியவ என்று எழுத வேண்டாம்// என்றீர்கள்.

  //முக்கிய‌மான‌ பொருளிலே குறுக்கு சாலை ஓட்டி விட்டு, நான் உங்க‌ளை புண் படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள்.//
  who is changing topics???? 🙂 A reference to Soma is given and you disparage Maha periyava and you accuse me that I am changing topic.
  you quote bible, quran, vivekandana, and if Ramaswamy quotes maha pariyava…why are you saying…
  //வெரும‌னே துதி பாடுவ‌தில் க‌வ‌ன‌ம் செலுத்தி இருக்கிரோம். அத‌னால் ஆன்மீக‌த்தை ச‌ரியாக‌ நாம் புரிந்து கொள்ள‌வில்லை – இதுதான் நான் அழுத்திக் கூற‌ விரும்புவ‌து//

  if you do its, its quoting reference and if others do its ‘thuthi padal’…i cant understand this logic of yours.
  //நான் ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் காஞ்சி ம‌ட‌ம் ப‌ற்றியோ, வேறு ம‌ட‌ம் ப‌ற்றியோ க‌ருத்து தெரிவிக்கிரேனா? க‌ட‌ந்த‌ ஒரு மாத‌த்தில் நான் இட்ட‌ பின்னூட்ட‌ங்க‌ளை பாருங்க‌ள், இருந்தால் சொல்லுங்க‌ள்.//

  Ramaswamy quoted a refernce to soma banam….but its you who said ‘maha periyava giga periyava’ and all…
  Many of us openly accept that most of your writings are good…but this definitely is not in good taste and unwarrented. when you preach to others that we should learn, it also applies to you. Ramaswamy, Rama and my self – we all say the same thing – ‘MUST” is a common usage in English to recommend something. I can be wrong, but 3 of us cannot be wrong on the same subject.
  I request you to read your own comments on this topic – you will realize an inherent hatred in all those towards Kanchi mutt and maha periyava.

  When you can accept the good preached by Jesus, why cant you accept the good preached by Kanchi mahaswamigal? Who is at fault?
  //ஆனால் ஒரு சிலரை மட்டும் மிக உயர்வாக எழுதியதைப் படிக்கும் போது //
  This comes from you whenever Kanchi is discussed… 🙂
  keep your cool and think my friend.

  Regards,
  Satish

 16. SAIRAM. This is an appeal to all – let us all not accuse any individuals, nor Saints and Enlightened Souls, be it Maha Periyaval, Lord Jesus or Allah or Budhdha or Jain Saints, Shirdi Sai Baba, Puttabarthi Sri Sathya Sai Baba. I feel that I and may be some others too are totally incompetent to talk anything about those Great Souls. By virtue of their nobility and Divine Grace, they came to the Earth in human form to try to preach us normal humans, how to elevate ourselves and how to be humane, how to love all and serve all. Let us discuss issues and if any reference from any Holy Books are given – Bible, Quirran, Vedas or Books authored by Great Souls – let us accept what you can digest and not find fault. Who are we in front of them? Not even the tiniest particle of a particle. Everything except God is Maya or Asathya and perishable. Only God is Sathya and let us try to realise Him. Tamilhindu has provided a wonderful website for us all to discuss and clarify things for the benefit of everyone. Instead, if we start accusing ourselves like மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்வது போல் we making ourselves a subject of mockery for others who are waiting for an opportunity. Let us all unite. Thanks and Regards

 17. Dear Mr. Sathish,

  1) //If I am reading Mr.Ramaswamy wrong, please correct me. Is he not quoting a refernce where the details of soma are given?//

  In Mr. Ramasamy’s initial comment, the relevence to Subject was just quoting the name Soma bana and referring a book. He spared more words for Eulogy. Instead of getting into Eulogy, he could have clarified the subject. Thats the same I told please leave eulogy, and concentrate on Subject.

  //A reference to Soma is given and you disparage Maha periyava and you accuse me that I am changing topic//
  Just few words on Subjects and more words on eulogy! You are happily enjoying to listen the eulogy, but not ready to listen what others say. So the topic was not changed by me.

 18. Dear Mr. Sathish

  you quote bible, quran, vivekandana, and if Ramaswamy quotes maha pariyava…why are you saying…
  //வெரும‌னே துதி பாடுவ‌தில் க‌வ‌ன‌ம் செலுத்தி இருக்கிரோம். அத‌னால் ஆன்மீக‌த்தை ச‌ரியாக‌ நாம் புரிந்து கொள்ள‌வில்லை – இதுதான் நான் அழுத்திக் கூற‌ விரும்புவ‌து//

  if you do its, its quoting reference and if others do its ‘thuthi padal’…i cant understand this logic of yours.//

  Can you tell as when and where I engaged in துதி?

  I quote from Bible, Quran, Geethaa, I quote from Adi Sankara, vivekaanantha, Pattianththaar, Thiyakaraajar…. But I dont write eulogy for any person for a mile.

  I donr eulogise like ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள், ஸ்ரீ சத்குரு தியாகராஜா சுவாமிகள்…., when I wrote. Can you check it your self?

  If there are any events in praise of particular person, Its common to put the complete title along with the name in the event. Or in Upanyaasamas they praise with eulogy.

  This is a common platform where all came to discuss, analyse and learn, what is the necessary to pour eulogy here?

 19. Dear Mr. Ramasamy,

  //Let us discuss issues and if any reference from any Holy Books are given – Bible, Quirran, Books authored by Great Souls – let us accept what you can digest and not find fault//

  There are many objectionable parts which recorded and advocated Genocide , Racism and many other poisonus Dictates commanaded in some of the books you mentioned.

  The civilised soceity can not risk those poisonus substance.

  If you are not intersted to expose them, you can relax. But we have our duty, let us do our duty.

 20. Dear Mr. Ramasamy,

  //Bible, Quirran, Vedas or Books authored by Great Souls -Who are we in front of them? Not even the tiniest particle of a particle//

  I am sorry to say that,

  we can not consider ourselfes as inferiors.

  We have been taught that all souls are the same soul,

  I am sorry, we are not ready to get in to slave mentality.

  We have confidence that any soul is just covered with ignorance, but can see the light and be all powerful.

  If you want to confer the ” Great Soul ” title to any one and keep “tiny soul” title to you, its your liberty, but not binding on all.

  We are not ready to blindly accept any dictates!

  If you feel that you are tiny, please dont make us feel so.

  We are optimistic and confident.

 21. Dear Mr. Sathiish,

  //I request you to read your own comments on this topic – you will realize an inherent hatred in all those towards Kanchi mutt and maha periyava.//

  I do not have inherent hatredness or not even ordinary hatredness.

  If I have hatredness , I can subtly include the same in many of my comments. I am not doing that because I belive in அத்வேஷ்டா principle.

  Only when I find promotion type content, I express my reaction to that.

 22. Dear Mr. Sathish,

  I dont know what is your profession whether finance or software or engineering . But irrespecive of tha may be you know that as per interanational standards we have units like micro, milli, centi, deci, kilo, mega and then giga. That is why I used the term Giga, to empahasise the pont that it is the next unit after mega – even for Eulogy also same unit applies!

 23. //ஆனால் ஒரு சிலரை மட்டும் மிக உயர்வாக எழுதியதைப் படிக்கும் போது //
  This comes from you whenever Kanchi is discussed…//

  Becuase mainly Eulogy is done only there. For whom else this much big Eulogising Title is used , and keep on repeated !

  உங்களை விட்டால் அடுத்த முழ நீள பட்டயம் ” அளவற்ற அருளாளலனும்…” என்று அல்லாவுக்கு தான் போடுகிறார்கள். அவர் (அல்லா)இருக்கிறாரா என்றே நிரூபிக்கவில்லை. அந்த அறியாமையையும் கண்டிக்கிறோம்.

 24. Dear Mr. Sathish.

  //keep your cool and think my friend//

  Its easy for you to be cool.

  Because your aim is to protect some personalities and few establishments.

  But our aim is to protect the Jan (People), Samaaj (Socety) , Dharam (Religion) and Sathya (Truth). Hence we have to be vigilanat (Jaakaratha).

 25. Dear Mr. Sathish,

  //When you can accept the good preached by Jesus, why cant you accept the good preached by Kanchi mahaswamigal? Who is at fault?//

  I never said I can not accept any thing wrote by by the Senior Kanchi pontiff.

  That is why I ask you to write what was told by them, waht is new in their philosophy , in what way it helped the people and soceity, In what way it helped to find the Truth.

  But you are indulging in eulogy, not coming to subject.

 26. //Instead, if we start accusing ourselves like மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்வது போல் we making ourselves a subject of mockery for others who are waiting for an opportunity. Let us all unite. Thanks and Regards//

  thats right . Also we should not behave in such a way that the people spite on us and laugh at us!

 27. Friends

  Somaras is used for Somayag. One doing a somayag is called somayaji. ( Tamil Somasi mara nayanar is actually somayaji mara nayanar)

  The Soma ras is made from a plant called Somalathai. ( latha is kodi)

  The name soma is moon. The Soma Latha will have 15 leaves on full moon day and the leaves start falling from Prathama one by one. On Amavasya there will be no leaves. Again it will start one by one till Pournami.

  The plant is available in Kerala. I heard that the The thiruvanathapuram Royal family arranges for this plant whenever a Somayag is done. The juice of this plant is only Soma ras.

 28. நண்பர்களே

  கடவுள் ஒரு டாக்டரிபோல் . ஒரே டாக்டர் ஒரே விதிக்கு அலைக்கு தகுந்த மருந்தை தருவது போல், சமுதயட்டிங் பக்குவதிருக்கு ஏற்ப மடங்களை தந்திருக்கிறார்.

  ஆடு புரியாத பாதிரிகளால் வரும் பிரச்சினை தன இடு

 29. அன்புள்ள அரவிந்தன்,

  ‘நப நப’ என்று சொல்லி சும்மா தாண்டிப் போக முடியவில்லை. தாமரை தான் சோமபானத்திற்கு ஆதாரமென்றால் தாமரையிலிருந்து பானம் தயாரிப்பது எப்படி அல்லது தயாரித்தார்களா போன்ற குறிப்புகள் எங்கே?

  எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து எழுதும் நீங்கள் ஏதோ வெள்ளைக்காரன் சொன்னான், அதுவே வேத வாக்கு என்பது போல முடித்திருப்பது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

  லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

 30. ஆரியர் இந்திய நாட்டவர்களே திராவிடம் என்று சங்க பாடல்களில் எங்குமே இல்லை . தமிழர் என்றுதான் உள்ளது . அம்பேத்கரை விட அறிவாளி எவனும் இல்லை . அவரே ஆரியர்கள் இந்தியர்கள் என்று கூறிவிட்டார் . சோமம் என்பது தாவரம் என்பதில் சந்தேகமில்லை .

 31. soma latha is a plant creapper type kodi it have seeds flowers etc but original soma latha is in himaliya duplicate is awaliable in all over india we evean have at thanjavur dt. kalanchery village
  in soma yaga it will be used and squesed along with sastra stothatras chanted by the veadic scolers and it will be multiplied more than 1000 times with secured water. and all ritwiks will drink that soma banam as a sip it will be only mear 2ml only. it will not give stadate or any thing balance of soma rasa will be put in fire of yaga
  thank u
  K. Samba vaidyanatha Soma Yaji

 32. ஆரிய என்ற சொல்லுக்கு மரியாதை க்கு உரியவர் என்று பொருள் . மஹா பாரதட்டில் அர்ஜுனனை பார்த்து கண்ணன் ஆரிய புத்திர என்று கூப்பிடுகிறார் அதபோல் அர்ஜுனனும் கண்ணை பார்த்து ஆரிய புத்திர என்று அழைக்கிறார் மற்றும் ராமர் இராவணன் சுக்ரீவன் வாலி கர்ணன் போன்ற அனைவரும்,ஒருவரை ஒருவர் ஆரிய புத்திர என்று தான் அழைகிரர்கல் இதன் மூலம் ஆரிய என்ற வார்த்தை எப்படி உருவானது என்று puriyum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *