மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த மூங்கில் துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது என்பதை இந்த முட்டாள்கள் சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன… நேரடியாக வரவு செலவு அறிக்கை மட்டுமே இன்று பட்ஜெட்டில் வாசிக்கப்படுகிறது. பலருக்கு இன்னும் அது பிடிபடவில்லை இவர்கள் வரியை ஏற்றியும் குறைத்தும் கதாகாலட்சேபம் நடத்தும் நிதிநிலை அறிக்கைகளையே பார்த்து பழகிவிட்டார்கள் இன்று இது வரி வருவாய் இன்ன துறைக்கு இவ்வளவு ஒதுக்கப்பட்டிருந்தது அவ்வளவு தான் என்று நறுக்குத்தெரித்தார் போல வாசிக்கப்படும் அறிக்கைகளை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. இவர்கள் மரமண்டைக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று புரிய இன்னும் ஒரு மாமாங்கமாகும்…
View More அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்Tag: சந்தை
நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்
கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…
View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6
உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!… எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?…. எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது…. ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்….
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2
“The Great Leap Forward” என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளவும்,தொழில்களை தொடங்கவும் அனுமதி அளித்தது. இன்று சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இந்த ஒரே ஒரு விஷயமே முக்கியம் என்பது என் தீர்மானமான கருத்து. நாட்டிற்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்பதெல்லாம் மனித இயற்கைக்கு முரணானது. தனக்காகவும், தன் சந்ததிக்காகவும் உழைத்து, சேர்ப்பதில்தான் ஒரு மனிதனுக்கு ஊக்கம் ஏற்படும். அதனாலேயே, நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்பதே சரியான வழியே தவிர,பணக்காரர்களை கொன்று போடுவதால், நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. இன்றைய சீன முன்னேற்றத்தில்,பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளார்கள். அவர்களின் சாமர்த்தியமான வர்த்தகங்களினால்தான் சீன அரசிற்குவரி வருமானம் பெருகியுள்ளது. அதைக் கொண்டே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1
இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்… 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்… இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்
இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்… கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில் தேச நலனை முன்வைத்து பா.ஜ.க எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று….
View More இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை
ஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. நடைமுறையில் இந்த பயணத்தினால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன? ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா?
View More ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வைஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2
ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம்… ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம்… வர்த்தகத்தின் இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும்…
View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்
இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!
View More காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்அக்ஷய திருதியையும் அசட்டு க்யூவும்
2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே…
View More அக்ஷய திருதியையும் அசட்டு க்யூவும்