தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை.அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர்….சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்… நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது…

View More தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்

க.நா.சு.வும் நானும் – 2

க.நா.சு.வின் ‘ஒரு நாள்’ தவிர என்றும் எவரதும் பழம் மதிப்புகளையே திரும்பச் சொல்வதாக இருப்பதாகவும், ஜெயகாந்தன் ஒருவர்தான் நிகழ்காலத்தைப் பதிவு செய்வதாகவும் அதிலும் அவர் அதீத உணர்ச்சிகளை எழுப்புவதாகவும், சொல்வது எதையும் உரத்துச் சொல்வதாகவும் எழுதியிருந்தேன்… அவர் சிலாகித்து எழுதியவர்கள், அவர்கள் செல்லப்பாவோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தோ என்றும் எனக்குத் தோன்றியதுண்டு… அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான்;ஆனா முத்துசாமி… அவர் என்னிடம் கொண்டிருந்த கோபம் அவர் வீட்டினுள்ளும் பரவியிருந்தது தெரிந்தது, “அவனோடு என்னத்துக்கு இன்னமும் சுத்தீண்டு”… என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்”

View More க.நா.சு.வும் நானும் – 2

க.நா.சு.வும் நானும் – 1

வணிக ரீதியாக வெற்றி பெற்றவர்களதும், பெரும் பிராபல்யம் பெற்றவர்களதும், அது தரும் சுகங்களை அனுபவிப்பவர்களதும், எழுத்து எல்லாம் இலக்கியமல்ல என்று சொல்லப்படுமானால்… சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், அவையெல்லாம் மறக்கப்பட்டு விமர்சகர் என்ற லேபிளே அவருக்கு ஒட்டப்பட்டது ஒரு பரிதாபகரமான விளைவு… அமெரிக்க ஏஜெண்ட் எனக் கண்டு பிடித்தனர் ரஷ்ய ஏஜெண்டுகளாக இருந்த முற்போக்குகள்… ஒரு இலக்கியப் படைப்பு தரும் அனுபவம் முழுதையும் எந்த விமர்சனமும் சொல்லித் தீர்த்துவிட முடியாது. என்றெல்லாம் பேசிய முதல் குரல் க.நா.சு-வினதுதான்… க.நா.சு.வை மறைமுகமாகத் தாக்கும் ”உண்மை சுடும்” என்ற ஜெயகாந்தனின் முன்னுரையைப் பார்க்கலாம். “சுடவில்லை, உண்மையல்லாததால்” என்று க.நா.சு. வேறிடத்தில்…

View More க.நா.சு.வும் நானும் – 1

ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]

நடக்கிறது எதுவுமே, அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல்கிறேன். அவ்வளவுதான்… புதுமைப் பித்தன் நாவல் எழுதுகிறேன் என்று ஆரம்பித்து ஒரு இடத்திலே “அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்ததாக” எழுதுகிறார்… நிறைய சச்சரவுகள் வரும் என்று பிரசுரமாகவில்லை. கடைசியில் டைம்ஸ் டுடேயோ என்னவோ பத்திரிகையில் பிரசுரமானது. இதன் தமிழ் வடிவத்தை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்னும் இணைய இதழில் பார்க்கலாம்… பிச்சமூர்த்தி யாப்பில் எழுதி fail ஆயிருக்கிறார் பார்த்தீர்களா?…

View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]

ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில்… எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும்… எனக்கு என்னதான் தெரியும்.. பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளையா?…

View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால்…80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை..

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1

நம் கண்முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையெனச் சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போலத் தலையங்கங்கள் எழுதும் முன்னணிப் பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்தப் பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜகம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ஃபாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து, தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது…

View More தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1