திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்Tag: செயல்வீரர்
அஞ்சலி: பி.ஆர்.ஹரன்
தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்… பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும், சாதுக்களையும் மகான்களையும் சந்திப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள்…
View More அஞ்சலி: பி.ஆர்.ஹரன்