தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது… கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்…
View More பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்Tag: ஜோதிடம்
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்…. இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது… இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே…
View More பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.
View More பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது… அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் – ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.
View More மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வைவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ…
View More வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்… தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!
View More ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்
..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.
View More புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?
டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய் விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி விடுகிறது…
View More ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…
இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன….இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை!
View More சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…சோதிடம் என்பது உண்மையா பொய்யா?
வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.
ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது.