ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்…. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3Tag: தவம்
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2
இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1
எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு… பகவான் ரமணர் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட ஒரு ரசமான பின்னணியுடன் இந்த “ஆன்ம போதம்” தமிழில் உருவெடுத்தது. சங்கரரின் இந்த நூல் முழுவதும், 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக பகவானால் எழுதி முடிக்கப்பட்டன… தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய், சாந்தி அவிர்ந்தவராய், ஆசை அறுந்தாராய் ….
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17
நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு… நமக்கு இன்று கோடிகள் தான் பெரிய எண். ஆனால் எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது… இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10
தாங்கள் சித்திரகூட மலைச்சாரலில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் அங்கு ஒருமுறை வந்துவிட்டதால், அது தெரிந்து அயோத்தி மக்கள் பலரும் அவ்வப்போது அங்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்தால், அது வரும் வழியில் உள்ள பல தபஸ்விகளுக்கும் இடையூறாக இருக்கலாம் என்பதால் இராமர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போகலாம் என்று தீர்மானித்தார். அப்படி அவர்கள் போகும் வழியில் அத்ரி மகரிஷியையும் அவரது பத்தினி அனசுயாவையும் சந்தித்தார்கள். ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்துகொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின் முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10அறியும் அறிவே அறிவு – 10
அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 |…
View More அறியும் அறிவே அறிவு – 10