கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….
View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்Tag: திருக்கோவில் பக்தர் பேரவை
நலம் பெறப் பிரார்த்திப்போம்!
பா.ஜ.க. தேசிய செயலரும், ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தமிழகத்தில் நெடுங்காலம் பணியாற்றியவருமான திரு.வி.சண்முகநாதன் அவர்கள் உடல்நலம் குன்றி புதுதில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது… அன்னார் விரைவில் பரிபூரண ஆரோக்கியத்துடன் உடல்நலம் பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம். ஆலயங்களில் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதங்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைப்போம். அன்னாரது முகவரி….
View More நலம் பெறப் பிரார்த்திப்போம்!