திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை… சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும்…
View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2Tag: திருப்பணி
திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1
அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையுமே நம்பிச் செய்தார்கள். அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது? சிவாச்சாரியார்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டார். இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல.. உண்மை சைவர்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் திருநாவலூரில் நடந்தேறியிருக்கிறது…
View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்
கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை… ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும்.
தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்….
அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்
உற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான்…. 7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, காணிக்கைகளைச் செலுத்தினார்கள்…
View More அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்
கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….
View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை
உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.
View More யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கைஇலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?
கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்….கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்…
View More இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!
துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்…தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்… சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
View More உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்
“வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்… எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது ….
View More வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்