அடிபணிதல்

அடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச் சென்ற எச்சரிக்கைக் குறிப்பினை அடுத்து ஹிர்ஸி அலி நெதர்லாந்தை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று…. அயான் ஹிர்ஸி அலி கூறுகிறார் – “அடிபணிதலின்” மையக்கருத்து, ஒரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு பற்றிய ஒன்று. எவர் மனதையும் புண்படுத்தவோ அல்லது கோபம் கொள்ளச் செய்வதற்காகவோ இந்தத் திரைப்படத்தை நான் எழுதவில்லை. ஒரு முஸ்லிம் பெண்ணானவள், குரானில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் பின்பற்றி, எதனைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எவ்வாறு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து அடிபணிகிறாள் என்பதனைக் காட்டுவதற்காக மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது….

View More அடிபணிதல்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1

பூஞ்ச்சில் ஒரு கடை வீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம், “எடை சரியில்லை. முஸ்லீம்களை ஏமாற்றுகிறாயா?” எனக் கூச்சலிட்டு கடைக்காரர் மண்டையைப் பிளந்து கலவரத்திற்கு வித்திட்டார்கள். இதைப்போலவே ஜம்முவில் ஒரு முஸ்லீம் பெண் குழந்தைக்கு ஒரு இந்து சுற்றுலாப் பயணி அன்பெழுக நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டார் என்று சொல்லி சுற்றுலா பேருந்து ஒன்றையே ஏரியில் முழ்கடித்தார்கள்.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது… காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை…

View More ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்… இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள்.

View More ’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.

View More கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

View More அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

வெட்கக்கேடு

மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம்…

View More வெட்கக்கேடு