’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

(2001, டிசம்பர் 13 இந்தியப் பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப் பட்டது. 7 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்தத் தாக்குதலை முறியடித்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். எட்டு ஆண்டுகள் கழிந்தும், சதிகார தேசவிரோத பயங்கரவாதிக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேறவில்லை என்ற நிலையில், ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு).

நான் வன்முறையாளன் என்பதை ஒத்துக்கொள்ள அஞ்சுகிறேன்; (இதற்கு எதிராக) அமைதியை நான் உருவாக்கப்போகிறேன் என்றெல்லாம் கூறுவது தன்னைத்தானே ஏமாற்ற செய்துகொள்ளும் ஒரு இனிய கற்பனை. எவ்வளவு தீவிரமாக அமைதி வழி நடந்தாலும், எந்த மனம் வன்முறையாய் உள்ளதோ அது எக்காலமும் அமைதியை நடைமுறைப்படுத்தாது. அமைதி வழி நடத்தல் என்பதே வன்முறைதான். ஐயன்மார்களே, கவனியுங்கள். (இதைக் கேட்டு அவநம்பிக்கையாய்) சிரிக்காதீர். – ஜே கிருஷ்ணமூர்த்தி.

மிக மோசமான காலங்களினூடேயும் வாழ்க்கை பிழைத்துக்கிடந்து இதுவரை இருக்கிறது. இந்தப் பிழைப்பும் பிழைப்பா என்கிற கேள்வி எழாதவரை இனியதாகத்தான் வாழ்க்கை தோற்றமளிக்கிறது. இது மதவெறியின் இருப்பை கவனியாது வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் பொருந்தும்.

மத வன்முறையால் இந்தியாவில் ஒவ்வொரு மனிதரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நூறு வருடம் முன்பு நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டார்கள். பிறகு, நமது நண்பர்களுக்குத் தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு, இப்போது நமது நண்பர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது என்பது அறிந்து உறைந்துபோய் நிற்கிறோம். நாளைக்குப் பலியாகப்போவது நாம்தான். அல்லது இன்று இரவே.

indian_parlimentகோயம்புத்தூர், மதுரை முதலிய பெயர் தெரிந்த சிறிய நகரங்கள் முதல் பெயர் தெரியாத கிராமங்களிலும் இந்த வன்முறை பரவிவிட்டது. ஆயினும், சுருங்கிவரும் உலகின் ஆதிக்கத்திற்கு நடந்துவரும் இந்தப் போர் பற்றிய கவலை இல்லாமல் கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருள் என்பதோடு நிறுத்திவிடாமல் கண்கட்டை அவிழ்த்துவிட்டவர்கள் பாவிகள் என்றும் போதனைகள் கிடைக்கின்றன. மதுவின் போதையில், புழுக்கள் நெளியும் சாக்கடையில், வயிறு பிரட்டும் நாற்றத்தில் இருப்பவர்களில் பலருக்கு அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், உலகம் அமைதிப்பூங்காவாகவும், தனி மனித சுதந்திரம் உள்ளதாகவும் தோன்றுவதால் மூக்கைப் பொத்திக்கொண்டு அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேறுமாறு வேண்டிக்கொள்ளும் ஒரு சிலரும் கருத்துவெறியர்களாகத் தோன்றுகின்றனர். சாக்கடையில் மிதக்கும் அந்த சுக அனுபவத்தில் பாட்டும் வரும். சாக்கடையில் மூழ்கியிருக்கும் இந்திய மீடியாக்கள் பாடிவரும் பாட்டுக்கள் சாக்கடையில் மிதப்பதை உயர்வாகவும், வெளியேறி சாக்கடையை ஒழுங்குபடுத்தி, சுத்தப்படுத்தவும் விரும்புவர்களை ஏளனமும் செய்தும் வருகின்றன.

மதத் தீவிரவாதிகளால் வாழ்க்கைகளும், உயிர்களும், நம்பிக்கைகளும், சந்தோஷங்களும் அழிந்துகொண்டே வருகின்றன. தீவிரவாதச் செயல்களால் கண்ணீரையும், நம்பிக்கைகளையும் உதிர்த்துவருகின்ற அப்பாவி மக்களோ இந்தச் செயல்களின்மேல் எந்தவித கட்டுப்பாடும் செய்ய முடியாமல் ஓட்டு வங்கி அரசியல்வாதிகளின் கையில் ஜனநாயகத்தின் பெயரால் சர்வ வல்லமைகளையும் ஒப்படைத்துவிட்டு மிகவும் அழகான ஒரு கலாச்சாரமும், தனிமனித சுதந்திரமும் கண்முன் அழிந்துகொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். திகைத்து திகைத்து பழகிவிட்டவர்கள் செய்தித்தாட்களிலும், பத்திரிக்கைகளிலும் தணிக்கை செய்தபின் கிடைத்துவரும் செய்திகளில் தங்களின் முதல் திகைப்பின் இனிய அனுபவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பல லட்சம் மக்களின் இறையாண்மையை தாக்கிய அஃப்ஸல் தூக்கிலிருந்து விடுபடுவதோ, அல்லது விடுதலை செய்யப்படுவதோ இந்த இனிய அனுபவத்தை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பாகவே இருக்கும். அதற்காகத்தான் செக்யூலரிசம் என்கின்ற பெயரில் இத்தனை வன்முறைகளும். அஃப்சலுக்கு தூக்கு கூடாது, மதானி எனும் மிருகத்தினை வலிமைப்படுத்திப் பின், கூண்டிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்கிற கூப்பாடுகள். அப்படியானால் சாதாரண மக்களின் கதி? தனி மனித சுதந்திரத்தின் கதி? எக்கேடோ கெட்டொழியட்டும்.

பலமற்ற, காசுக்காக ஓட்டுப்போடுகின்ற, ஓட்டுப் போடாத, பல சமயங்களில் ஓட்டுக்கூட போடமுடியாத இந்த அப்பாவிகளால் என்ன செய்துவிட முடியும்? பலமுள்ளவைதானே வெற்றிபெறுகின்றன. நியாயமானவைகள் அல்லவே. தர்மத்திற்காக வாழப்பழகிவிட்ட இந்திய ப்ரஜைகளின்முன் இரண்டு வழிகளே இப்போது உள்ளன: “எம்முடைய மதத்தில் சேர்ந்துவிடு”, அல்லது “செத்துப்போ காஃபிர் நாயே”.

இப்படி எதுவும் இல்லாததுபோலவும் வாழ்க்கைப்பாதை பூக்களாலானதாகவும் சொல்லிவரும் மீடியாக்கள் அஃப்சலை தூக்கிலடக்கூடாது என்பவர்களின் வாதங்களை மட்டும் முன்வைக்கின்றன. தூக்குத்தண்டனை என்பது மனிதத்தன்மையற்ற செயல், அதை ஒரு மாண்புமிக்க அரசாங்கம் செய்யக்கூடாது என்று கூக்குரலிடுபவர் பலர். அவர்கள் செய்வதையே நாமும் செய்தால் நமக்கும் அவருக்கும் என்ன வித்யாசம் என்று வாதிடுபவரும் எண்ணிலர். நிழலில் மறையும் நீதிபோல இவர்கள் மறைப்பவை பல.

மரணம் என்பது மனிதர் மட்டுமல்லாது அத்தனை உயிரினங்களிலும் நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வு. தெரியாத தேவதையைவிட தெரிந்த சாத்தானே மேல் என்றிருக்கும் சராசரி மனிதர்களுக்கு யாராலும் சொல்லவியலாத மரணம் பயங்கரமானதாகத் தோன்றுகின்றது – அது இயற்கையான ஒன்றாக இருந்தாலும். அவர்களுக்கு மேலும் அச்சத்தை ஊட்டக்கூடியதாகவிருப்பது துர்மரணம்.

இந்த துர்மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் ஒன்றாக மரண தண்டனை இருக்கின்றது. தண்டனை வழங்குவது என்பது வெறுமே பழிக்கு பழி வாங்கும் ஒரு செயல் இல்லை. தண்டனையின் நோக்கம் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் செய்ய விழைவதே. எந்த ஒரு தண்டனை அதிகபட்சமாக சில கொடிய வேதனையான செயல்கள் முற்றிலும் மீண்டும் நடாதவாறு செய்கிறதோ, அல்லது குறைந்தபட்சமாக அந்தக் கொடிய செயல்களைக் கட்டுப்படுத்துகிறதோ அந்தத் தண்டனை குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படவேண்டும்.

மரண தண்டனை என்பது கொலைக்கு பதில் கொலை என்பதன் அடிப்படையில் எழுந்ததில்லை. கொலையின் தன்மையைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். சில விஷயங்களில் கொலை செய்யாதாருக்கும், அவர் நிகழ்த்திய வேறு சில கொடிய செயல்களுக்காக மரணதண்டனை விதிக்கப்படலாம். தேசத்துரோகம் என்பது இத்தகைய கொடிய செயல்களில் ஒன்று.

உலக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பெற்ற காலங்களே பொற்காலங்களாகக் கருதப்படுகின்றன. ஆயினும், இத்தகைய தீவிர தண்டனையை அதி தீவிர காரணங்களுக்கு மட்டும் அளிக்கவேண்டும் என்பதை இந்தியாவின் தவப்புதல்வர் மாமேதை அம்பேத்காரால் வடிவமைக்கப்பட்ட நமது அரசியல் சட்டம் உணர்ந்துள்ளது. அப்சலின் விஷயத்தில் இந்திய இறையாண்மையை நீதிமன்றங்கள் காத்திருக்கின்றன. நீதி நிறைவேறக் காத்திருக்கின்றன.

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டுச் செய்யாமல் பல நாட்கள் திட்டமிட்டு, இக்கொடிய காரியத்தினை நிறைவேற்றுவதற்கான பல முற்தேவைகளை நிறைவேற்றிப் பின், ஜனநாயகத்தின்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன அஃப்சலும், அந்த வகையறாக்களும். இப்படிப்பட்ட கொலைகாரர்களை மன்னிக்கவேண்டும் என்பது அப்சல் வகையறாக்களின் சந்தோஷங்களுக்குத் தரகராக வேலைசெய்வதால் கிடைக்கும் பலனைவிரும்புபவர்களுக்கும், உண்மை நிலவரம் அறியாதவர்களுக்கும் வேண்டுமானால் பிடித்த கோஷங்களாக இருக்கலாம்.

ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு என்பதையோ, அல்லது ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்பதையோ யாரும் மறுக்கப்போவதில்லை. பாவிகள் புனிதராகத் தேவையான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகளை அழிக்க நினைப்பவர்கள், புனிதர்களைப் பாவிகளாகவும் பாகன்களாகவும் காஃபிர்களாகவும் கற்பித்து அவர்களைக் கொலை செய்வதை ஊக்குவிக்கும் மனித உருவங்களும் உண்மையில் இவ்வுலக உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வீணடிப்பவர்கள் என்பதுதான் புத்தியுள்ளவர்கள் புரிதல்.

தங்களை நல்ல மேய்ப்பர்களாக அறிவித்துக்கொள்கிற அசடுகள் மனித ரத்தத்தை ருசி கண்ட புலிகளிடமிருந்து தங்கள் மந்தை காப்பாற்றப்படவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஏனெனில், மனிதர்களின் ரத்தத்தை ருசித்துவிட்ட புலிகள் மீண்டும் மனிதர்களை மட்டுமே வேட்டையாட முயலும். என்ன முயன்றாலும், அவை தங்களது குணத்தை மாற்றாது. இந்தப் புலிகளுக்கு எதிர்காலம், இறந்தகாலம் எல்லாமே வன்முறைதான். இவை மற்றவர்களைப் பாவிகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவை. இவைகளை புனிதராக இல்லை. மனிதராகக் கூட மாற்ற முடியாது. இது போன்ற சூழல்களில் மட்டும்தான் மரணதண்டனை வழங்கப்படுகிறது. எல்லாச் சூழல்களிலும் இல்லை. அரிதிலும் அரிதாக வழங்கப்படும் இத்தகைய தண்டனைகள் தேவையானவையே.

ஒரு மரணத்தை ஏற்படுத்திவிட்ட ஒருவர் அதை உணர்ச்சியின் வசப்பட்டு செய்தார் என்றாலோ, அல்லது அந்தச் செயலுக்கான காரணங்களின் நியாயத்தன்மையை முன்வைத்தோ அரசு மரணதண்டனையை ஒரு சிலருக்குக் குறைக்கிறது. ஆனால், இறுதியாக்கப்பட்டுவிட்ட நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் இருந்து எந்த அரசும் பின் வாங்குவதில்லை, இந்தியாவைத் தவிர்த்து.

பலநூறு ஆண்டுகள் முன்பிருந்து இதுவரை பலகோடி மக்களையும், பல கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் அழித்து வருகின்ற வெறிமதத்தினரைத் துணையின் கள்ளத்தொடர்பு தெரிந்ததால் உணர்ச்சி வசப்பட்டு, ஆராயாமால், யோசிக்காமல், கொலை செய்தவர்களோடோ, அல்லது மரணங்களை ஏற்படுத்திவிட்ட விபத்துக்களுக்குக் காரணமானவர்களோடோ இணைத்துப் பேசுவது என்பது கள்ளத்தொடர்பு கொள்வதைவிடக் கீழான விஷயம். மூளைச்சலவை செய்யப்பட்டதால் தவறிழைத்துவிட்ட குழந்தைகள் என்று அரசாங்க தாத்தாக்கள் தங்களுக்குப் பிரியமான பெயரன்களை லேசாக மட்டுமே தண்டித்தால் மற்ற மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது என்பதே நடவாது.

இந்தியாவில் இப்போது இதுபோன்ற லேசான தண்டனைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதுவும், அதுவும் பெயரளவிலே என்பதுவும் எல்லாரும் அறிந்ததுதான். இங்கனம் பெயரளவில் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வழிமுறையில் விடுதலையாகி மீண்டும் அக்கொடிய செயல்களில் ஈடுபட்டுவருவது பலமுறை நடைபெற்றாகிவிட்டது. இவர்கள் கொலை செய்வதையே தெய்வீகப் பணியாகச் செய்பவர்கள். மனிதர்களைத் தனித்தனியாகவோ, அல்லது கூட்டம் கூட்டமாகவோ எங்கனம் கொலை செய்யலாம் என்பதை அறிந்தவர்கள். ஒரு மனிதரை வெறும் கையால் கொல்ல எத்தனை முறைகள், ஆயுதங்களால் கொல்ல எத்தனை முறைகள் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டவர்கள். கற்பிப்பவர்கள். தும்மலின்போது கண்களை மூடும் அநிச்சைச் செயல்போல் கொலைகள் செய்வதை இயல்பாய் எடுத்துக்கொள்பவர்கள். மற்ற மதத்தாரை கொல்லுவதால் கிடைக்கும் சந்தோஷத்திற்காக வாழ்நாளைச் செலவிடுபவர்கள். அத்தகைய வாழ்வை பரப்புபவர்கள்; பாடம் நடத்துபவர்கள். இவர்களை விடுதலை செய்யப்பட்ட கள்ளத்தொடர்பு கொலையாளிகளின் தற்போதைய அமைதி வாழ்க்கையோடு ஒப்பிடுவது வெறும் பசப்புத்தனம். இவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகும் என்பதற்குப் பல நிகழ்வுகள் படிப்பினைகளாய் உள்ளன. இத்தகைய மிருகங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற முல்லாமாரித்தன வாதத்திற்குப் பதிலாக நடந்துவருகின்ற கொடுமைகளில் ஒன்றை உதாரணமாக இங்கே கொடுக்கலாம்.

மௌலானா மஸூத் அஸ்ஹார் என்னும் புனிதனை இந்திய அரசாங்கம் பிடித்து, மரணைதண்டனையெல்லாம் கொடுக்காமல், சிறையில் அடைத்துவைத்தது (இதுவே அதிசயம்தான். பொதுவாக இந்தத் தீவிரவியாதிகளை பிடிப்பதில் இந்தியா விருப்பம் காட்டுவதில்லை). என்ன நடந்தது? 1999ம் வருடம் இண்டியன் ஏர் ஃப்ளைட் 814ஐ கடத்திய தீவிரவாதிகள் பயணிகளின் உயிருக்குப் பதிலாக இந்த இஸ்லாமியப் பெரியவரை விடுதலை செய்யவேண்டும் என்றன. அம்ருத்ஸரில் தரையிறங்கிய shiv_sena_afzal_protest_delhi_3_061017விமானத்தின் டயர்களைச் சுட்டுவிட்டு பின் இந்தத் தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினால் அரசாங்கத்தின் கை ஓங்கியிருக்கும். 180 பயணிகளும் வேறு வேதனைகள் இன்றி தப்பித்திருப்பர். ஆனால், இந்திய அரசாங்கம் “ஏனோ” அங்கனம் செய்யாமல் விமானத்திற்குப் பெட்ரோல் போட்டு பாக்கிஸ்தானுக்குப் பத்திரமாக அனுப்பியது. பிறகு ஆப்கானிஸ்தான் சென்றது விமானம். இஸ்லாமியப் பெரியவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட இதை அணைத்து வரவேற்றது பெரியவர்களில் பெரியவரான ஜனாப் முஹம்மது பின் லேடன். 2001ம் ஆண்டு ஜனாப் மௌலானா மஸூத் அஸ்ஹார் இந்தியாவில் ஜைஷ்-எ-மொஹம்மத் என்கின்ற அமைப்பினை நிறுவியது. (இந்தியாவில் நிறுவப்பட்டது என்பதைக் கவனிக்கவும். பாக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பு என்று மட்டுமே இங்கு பேச்சு அடிபடும். ஆனால், உண்மையில் இந்தியா பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு முன்னரே தீவிரவாதத் தன்னிறைவு பெற்றுவிட்டது என்பது மறைக்கப்படும் மற்றொரு உண்மை.) இந்த நிறுவனம் கொன்ற அப்பாவி மக்கள் பலர். பாராளுமன்ற தாக்குதலை நடத்தியதும் இவர்களே. அதாவது தற்போது தூக்குத் தண்டனையிலிருந்து தப்பவிருக்கும் பெரியவர் அஃப்ஸல் அவர்கள் இந்த தீவிரவாத நிறுவனத்தின் உறுப்பினர். இதே குழுதான் இதன் பின் மும்பையில் நடந்த ரயில் குண்டு வெடிப்பிற்கும் காரணமாகக் கண்டறியப்பட்டது.

பாராளுமன்றத்தின் உள்ளே பாஜாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுக்கள் உள்ளீடாக அனைத்து கட்சியிலும் உள்ள பெருந்தலைகள் இருந்தனர். விட்டால் போட்டுத் தள்ளியிருப்பார்கள். இந்தியாவின் அனைத்து முக்கிய தலைவர்களையும் ஒரேயடியாக ஒரே நாளில் கொன்றுவிட்டால் இந்திய அரசாங்கத்தை உடனடியாக யார் எடுத்துச் செல்வது? மிகுந்த குழப்பமும், தேவையில்லாத கொடிய தொந்தரவுகளும் ஏற்பட்டிருக்கும். ஏன், ஆட்சியின் அதிகாரத்தைப் பிடிக்க புரட்சிகள்கூட ஏற்பட்டிருக்கலாம். ஏற்கனவே தனிநாடு கேட்டுக்கொண்டிருக்கும் குழப்பவாதிகள் தனிநாடுகள் அறிவித்துமிருக்கலாம். இவற்றையெல்லாம் சமாளிக்கக்கூடிய மாட்சிமை இந்தியாவிற்கு உண்டுதான் என்றாலும், இவை விளைவிக்கும் கேடுகள் இந்தியாவை எந்த அளவு பிற்போக்கு நிலைக்குத் தள்ளி இருக்கக்கூடும் என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளத்திற்குப் போகும். தற்போது தயங்கி தயங்கி இந்தியாவில் முதலீடு செய்துகொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுத்தமாக அவர்களுடைய முதலீடுகளை நிறுத்திக்கொள்வர். வெளிநாட்டு முதலீட்டால் தற்போது ஓரளவு அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் இல்லாமலாகும். வெளிநாட்டு முதலீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சொந்தமாக தைரியமாக தொழில் நடத்தலாம் என்று மக்கள் நினைக்கக்கூடமுடியாது. மக்கள் ஏழைகளாவர். இந்த ஏழைகளை பணத்திற்காக தங்களுடைய மதத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் மத மாற்றம் என்பது ஒரு மிகப் பெரிய வியாபாரம்.

இந்திய அரசாங்க பட்ஜெட்டைவிட அதிக அளவு செல்வம் புழங்கும் விஷயமாக தற்போது உள்ள இந்த வியாபாரம் இந்தக் குழப்பங்களால் மிக மிக அதீத பெருக்கம் அடையும். இந்த ஒரு வியாபாரம்தான் வாழ வழி என்றாகிவிட்டால் மக்கள் அனைவரும் இந்த வியாபாரத்தில்தானே ஈடுபடுவர். இவை எல்லாவற்றையும் தடுத்தவர்கள் ஆறு பாராளுமன்றக் காவலர்கள். சாதாரண மனிதர்கள்.

இவர்களின் வீர மரணத்தால் தப்பிப்பிழைத்த தலைவர்களின் முன் அப்சலின் வாழ்க்கை தற்போது நிற்கிறது. இந்தத் தலைவர்களும் சுயநலமிகள் என்பதால் பொது ஜன அபிப்பிராயத்திற்கு எதிராக செல்ல விரும்பார். எனவே இத்தகைய பொதுஜன விருப்பத்தை ஏற்படுத்த எல்லா மீடியாக்களும் அப்சலை விடுதலை செய்யவேண்டும் என்று கூறும் திம்மித்துவவாதிகளின் எழுத்துக்களையும், பேட்டிக்களையும் வெளியிட்டுவருகின்றன. மாற்றுக் கருத்தை கூறுபவர்கள் எவரும் இல்லையோ என்ற தோற்றம் உருவாகும் அளவு திம்மித்துவவாதிகளின் கருத்தை மட்டுமே இவை வெளியிடுகின்றன. இதற்காக இந்த மீடியாக்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது அப்பாவி ஐயாசாமிகளான இந்திய பொதுஜனத்திற்கு என்றும் தெரிய வரப்போவதில்லை. ஆனால், இந்த ஐயாசாமிகளுக்கு தெரிந்ததெல்லாம் லாபம் இல்லாமல் மீடியா முதலாளிகள் வியாபாரங்கள் செய்யார் என்பதுதான். வெறும் அறிவு மட்டும் இருந்து என்ன பயன்? தடுக்கும் வலிமை இல்லையே.

இதே போன்ற நிலையிலிருந்த மக்களைக்கொண்டிருந்த பல நாடுகளைப்பற்றி வரலாறு என்ன சொல்லுகின்றது? உதாரணமாக, இந்திய தத்துவங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் இணையான பெர்ஷிய கலாச்சாரத்திற்கு என்ன ஆயிற்று? “அன்பைப் பளிங்கில் பதித்திடுங்கள்…. காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள்” என்கின்ற அழகிய உருக்கமான பழமொழிகளைப் பழகிய அந்த கலாச்சாரமே தற்போது அழிந்துவிட்டதே. ஈரான் என்கின்ற நாடாக அல்லவா அது மாறிவிட்டது. அந்த ஈரானிய நாடோ தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றது. அந்த பழமொழிக்கு என்னவாயிற்று? பிரச்சினை என்னவென்றால் ஒரு கருத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் அப்படியே பின்பற்றவேண்டும். அங்கனம் இல்லாமல், ஒரு குழு தொடர்ந்து அன்பைப் பளிங்கில் பதிக்கவும், மற்றொரு குழு காயங்களை ஏற்படுத்தவும் செய்தால் பளிங்கு சமாதிகூட முந்தைய குழுவிற்குக் கிடைக்காது. அதுதான் இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் தீவிரவாதிகளுக்கு அவர்கள் எத்தனை இந்தியர்களைக் கொலை செய்தாலும், எவ்வளவு பெரிய சேதாரத்தை விளைவித்தாலும் மரண தண்டனை வழங்கக்கூடாது என்று சிறையில் அடைத்தால், நாளை இந்தியாவிற்குள்ளும் வெளியிலுமுள்ள துப்பாக்கி ஏந்திய தோழர்கள் அப்பாவிகளை பணயக்கைதிகளாக்குவர். இத்தகைய செயலுக்கு வருந்துவதுபோல முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிலுள்ள துப்பாக்கி ஏந்தாத தோழர்கள் இந்த தீவிரவாதிகளை விடுதலை செய்வர். இது ஓர் தொடர்கதையாகிவிட்டது. நமக்கும் பழகிவிட்டது. யாரேனும் தீவிரவாதியை விசாரணைக்காக கைது செய்தால்கூட காய்கறிவாங்க வீட்டை விட்டுப் போக வேண்டுமா என்ற கேள்வி வருகின்றது. வீட்டிற்கு வரும் பார்சலில் குண்டுகள் இல்லை என்பது நிச்சயம் இல்லையாதலால் வீட்டிலிருக்கவும் பயமாயிருக்கிறது. வீட்டிலும் பாதுகாப்பில்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன?

எந்த ஒரு குழு தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்றும், மற்றவை அனைத்தும் தவறு, அழிக்கப்படவேண்டும் என்று எப்போது கூற ஆரம்பிக்கிறதோ அப்போதே வன்முறை பிறந்துவிடுகின்றது. தன்னுடைய மதமே சிறந்த மதம், தன்னுடைய தூதரே உயர்ந்தவர், மற்றோரெல்லாம் சாத்தான்களின் குழுக்கள் என்று கூறும் ஆபிரகாமிய மதங்களால்தான் பெரும்பாலான போர்கள் நடந்தன. நடைபெற்று வருகின்றன. எல்லா வழிகளும் உயர்வழியே, இறையை அல்லது இறுதி உண்மையை எந்த வழிகளிலும் சென்றடையும் உரிமை எவருக்கும் உள்ளது என்று கூறுகின்ற இந்திய தத்துவங்களுக்கு எதிரானவையாக இவை இருக்கின்றன. எனவே இந்தியாவைப் பொறுத்தவரை, பாரதத்தின் பரந்த மனப்பான்மையையும், தனி மனித சுதந்திரத்தையும், பல கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையையும், மக்களாட்சியையும் அழிப்பதே ஆபிரகாமிய மதங்களின் ஒரே வேலைத்திட்டம்.

இவர்கள் இதுவரை சென்ற பாதைகள் முழுவதும் ரத்தமே காய்ந்துகிடக்கிறது. அங்கனம் ரத்தம் சிந்தி கைப்பற்றப்பட்ட நாடுகள் தங்களது அதே கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள மற்றொரு நாட்டோடு அதே கருத்துக்களைத் தூய்மையாய் பின்பற்றவில்லை என்று அதே காரணங்களுகாகப் போர் தொடுக்கின்றன. இந்த வன்முறை ஏற்றுக்கொண்டாலும் நிற்காத வன்முறை. ஏற்காவிட்டாலும் இருக்கும் வன்முறை. இது பூமியிலிருந்து மனித வாழ்வையே அழிக்க வந்துள்ள வன்முறை.

வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மாறாமல் நிகழ்கின்றன. அடுத்த வரலாற்றுத் தவறுகளை மீள்பதிவு செய்யத் தேவையான மாறுபட்ட சூழலையும், மாறுபட்ட சட்டங்களையும் தவறாமல் உருவாக்குவதே வரலாற்றின் மாறாத நடத்தையாக இருக்கிறது.

குரு கோவிந்தசிங்
Guru Gobind Singh

இதைத் தடுக்க இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள். இந்த வன்முறையானது மனிதர்களுக்கு சொந்தமாக புத்தி உண்டு, தனி மனித விடுதலை முக்கியம், கலாச்சார சுதந்திரம் அவசியம், எந்த மனிதரும் மற்றோருக்கு இளைத்தவரில்லை, இறுதி ஞானம் என்பது பல வழிகளிலும் அடையக்கூடிய ஒன்று என்ற கொள்கைகளைப் பயிலும் சுதந்திரத்தை மானுடத்திற்கு அளிக்கும் வன்முறையாக இருத்தல் அவசியம். இல்லையேல் இது எதிர்க்கும் வன்முறைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அப்படித்தானே ஆபிரகாமிய மதங்கள் இங்கே தோன்றின.

அவர்களைப்போல நாமும் நடந்தால் நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று நினைத்தவர்களை ஆபிரகாமிய மதங்கள் விழுங்கி, ஜீரணம் செய்து, கழிவுகளாகத் தங்கள் மாறாத நிலைப்பாட்டை வெளியிட்டுவிட்டன. இத்தகைய வன்முறையாளர்களைத் தீவிரமாக எதிர்த்தால் அவர்கள் அதிக உத்வேகம் பெற்று மேலும் மேலும் தொந்தரவுகள் தருவார்கள் என்பதுகூட இந்த ந.பி.க்களின் (நடைப்பிணங்களின்) வாதங்களில் ஒன்று. அந்த வகையில் பார்த்தால் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்குக்கூட தண்டனை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். (இப்படி சொல்லுவதால் பிக்பாக்கட்காரர்கள் கோபம் கொள்ளக்கூடாது. இந்த வெறிமதத்தினரையும் விட நீங்கள் பல பல படிகள் உயர்ந்தவர்கள்.) எத்தனை முறை குளித்தாலும் அழுக்காகும் உடம்பு, அதனால் குளிக்கவே வேண்டாம் என்று சொல்லும் வாதம் இது. எப்போதெல்லாம் எதேச்சதிகார சக்திகள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை அழிக்கத்தான் வேண்டும். என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணியவேண்டும். ஏனெனில், அங்கனம் செய்யாவிட்டால் ஏற்படப்போகும் பாதிப்பு, எதிர்ப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட அதிகம். மிக மிக அதிகம்.

கண்ணுக்குக் கண் எனும் ஹாமரோபியின் சட்டங்களுக்கு இந்தியாவின் பதிலாகவுள்ள “கண்ணுக்குக் கண் உலகை குருடாக்கும்” என்ற கோஷம் ஒரு நேர்மையற்ற வாதமே. ஏனெனில், ஒருவரின் கண்ணை குருடாக்கும் வன்முறை எல்லாருக்கும் இருக்காது. வன்முறையாளனுக்கு மட்டுமே இருக்கும். இத்தகைய “வன்முறையாளனை மட்டுமே” இந்த சட்டம் தண்டிக்கிறது. எல்லாரையும் இல்லை. எனவே, இத்தகைய சட்டத்தால் வன்முறையாளர்கள் குருடர்களாகலாம். அமைதியாய் வாழ்பவரன்று. அமைதியாய் வாழ்பவர்களுக்கு இத்தகைய சட்டங்களால் எந்த தொந்தரவும் இல்லை. அதனால் அமைதியாய் வாழவே அனைவரும் முயல்வர். இதனால், தீவிரவாதம் போன்ற விஷயங்களில் “மட்டும்” கண்ணுக்குக் கண் என்பது பலருக்கு உள்ளொளியை மட்டுமல்ல வாழ்வொளியையும் வழங்கும். ஆனால், இந்த உண்மையைக் காணத் தேவையான கண்ணொளி ஏற்பட வேண்டும்.

சற்றே யோசித்தால் அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்.

சுவர்க்கம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையாலோ, அல்லது மிக உன்னதமான காரியம் செய்வதாகவோ நினைத்து ஏற்கனவே கும்பல் கும்பலாக கொலைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, இனி கடுமையான தண்டனை எல்லாம் கிடையாது, சிறையில் ஆயுர்வேத சிகிச்சையோடு இருக்கலாம், சிறையிலுள்ளவர்களிடமும் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பலாம், வெளியில் இருந்தால் கிடைக்காத சுகபோகங்கள், வெளியில் கிடைத்த சுகபோகங்கள் (ஓரினச் சேர்க்கைக்குச் சிறுவர்கள் உட்பட) இங்கே கிடைக்கும் என்று அந்த சுவர்க்கத்தை சிறைச்சாலைகளுக்கும் கொண்டு வந்தால் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும்.

இத்தகைய தீவிரவாதத்தைத் தூண்டுகின்ற நாடுகளுக்கு (உதாரணமாக, பாக்கிஸ்தான், அரேபியா, ஆப்கானிஸ்தான்,….) இதனால் மேலும் லாபம்தான். இதுவரை இந்தச் செயல்களுக்காக இவர்கள் அதிகம் செலவழிக்கவோ, நஷ்டமடையவோ தேவையில்லாமல் இருந்தது. இந்தியாவிற்குத்தான் நஷ்டமும், பொருள் விரயமும். இனி சுவர்க்கத்தை சிறைச்சாலைகளுக்குக் கொண்டு வரும் செலவும் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும். இந்த அரசாங்கத்திற்கு தங்கள் உழைப்பின் ரத்தத்திலிருந்து வரி கட்டுபவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை உபயோகித்து, இந்த வெறிமதத்தார் வரி செலுத்தும் மடையர்களையே கொல்லுவர். கொன்றதற்காக விலை மதிப்பில்லாத வாழ்க்கையும் கிடைக்கும்.

ஆனால், இந்திய அரசாங்கம் இப்படித்தான் நடக்குமா, வேறு வகையில் நடக்கவியலாதா என்று பார்த்தால் நமக்கு இந்திய அரசாங்கத்தால் சரியான செயல்களைச் செய்யவும் முடியும் என்பது பஞ்சாப் பிரச்சினைகளைத் தீர்த்ததிலிருந்து தெரிகிறது. பஞ்சாப் தீவிரவாதம் தண்டிக்கப்படவேண்டியதாகவும், மற்ற மதத்தீவிரவாதங்கள் ஆதரிக்கப்படவேண்டியதாகவும் இந்திய அரசாங்கத்திற்கு தோன்றுவதற்குக் காரணம் வெறும் ஓட்டு அரசியல்தான் என்பது வெள்ளிடை. இத்தகைய திம்மித்துவ அரசியல்வாதிகள் பலர் இந்த தீவிரவாதச் செயல்களை, கொலைகளை அரசியல் கொலைகளாக பார்க்கவேண்டும் என்றும் கூறுவர். காந்தி உயிரோடு இருந்தால் இவர்களை மன்னிக்கவேண்டும் என்பார் என்றும் கூறுவர். அவர்களுக்குத் தெரியாததில்லை, காந்தியே இது போன்ற ஒரு சூழ்நிலையில் மரணதண்டனை விதிக்கப்படுவதை எதிர்க்கமுடியாமல் இருந்தார் என்பது.

கீழ்த்தரமாய் வாதங்கள் செய்வதற்கு சளைக்காத சிலர் அஃப்சலை பகத்சிங்கிற்கு இணையாய் வைக்கின்றனர். இருவரும் பாரளுமன்றத்தைத்தானே தாக்கினார்? என்ன வேறுபாடு, ஒருவர் தீவிரவாதி ஒருவர் தேசியவாதியா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இரண்டிற்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. மாவீரன் பகத்சிங் பாராளுமன்றத்தில் யாரையும் கொல்லாமல் நுழைந்து, யார் மேலும் பட்டுவிடாமல் குண்டினை எறிந்தார். இதற்குக் காரணம் உலகம் இந்தியாவின் பிரச்சினையை கவனிக்க வேண்டும் என்பதால். பகத்சிங் அப்பாவி பொதுமக்களையும், பயணிகளையும், குழந்தைகளையும், முதியோரையும் கொல்லுவதை ஆதரிப்பவரில்லை. அப்சல் வகையறாக்களோ அதைத்தான் செய்துவருகின்றன. தொடர்ந்து செய்யவும் போகின்றன.

பாராளுமன்றத்திலிருந்த தலைவர்களைக் கொல்ல வந்த அவர்கள் 6 காவலர்களைக் கொன்றார்கள். பகத்சிங்கின், வாஞ்சிநாதனின் எச்சில் உணவை உண்ட எலிக்குக்கூட அப்பாவிகளைக் கொல்லத் தோன்றாது. இது தெளிவாகத் தெரிந்தும் தீயோரை நல்லோருக்கு இணையாக வைப்பதற்கான காரணங்கள் எவை? ஒரு நிலப்பகுதியில் வாழும் மாந்தர் தங்களின் வரலாறு பற்றி எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதும், அந்த எதிரிடைக் கதைகள் வன்முறையால் நிரம்பியிருப்பதுமே காரணங்கள்.

இத்தகைய எதிர் எதிர் வரலாற்று கருத்துக்கள் இருக்கும் நிலங்களில் பலமற்ற அமைதி விரும்பும் மக்கள் அழிவதே நிகழ்ந்துள்ளது. தங்களின்மேல் திணிக்கப்பட்ட வரலாறுகளை, திருத்தப்பட்ட வரலாறுகளைப் படிக்கும் இந்தியர்கள், பள்ளியில் போதிக்கப்படும் பாடங்களை நம்பாமல், அவரவர் குழுக்களின் போதனைகளுக்கேற்ப வன்முறையில் ஈடுபடுகின்றனர். தன் குழு தவிர்த்த ஏனைய குழுக்கள் தாழ்ந்தவை, திருத்தப்படவேண்டியவை என்று நினைக்கும் வரலாறுகளைப் படிப்பவர்களால் இந்தியா சிதற இருப்பது திண்ணம்.

இல்லவே இல்லை என்று முதலில் சொல்லிவிட்டுப் பின் மூட்டுவலியோடு கூடிய காய்ச்சல் என்றாவது சிக்கூன் குனியாவை அங்கீகரிக்கின்ற அரசாங்கம் இந்த தீவிரவாத வியாதிக்கு ஆயுர்வேத சிகிச்சையளிப்பதையெல்லாம் விட்டுவிட்டு ஆயுத சிகிச்சை அளிக்க முன்வரவேண்டியது முக்கியம். இதற்கு இப்படிப்பட்ட தீவிரவாதம் இந்தியாவில் இருக்கின்றது என்பதை இந்திய அரசாங்கமும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த வியாதியைப் பொறுத்தவரை அழிக்காவிட்டால் அழிக்கப்படுவீர் என்பதை நினைவில் கொள்ளுவது அத்தியாவசியம்.

இந்திய நீதிமன்றம் சரியான முறையில் விசாரிக்கவில்லை. நேரடி சாட்சியில்லாத இந்த விஷயத்தில் சூழ்நிலையளித்த சாட்சிகளை மட்டும் வைத்து விசாரித்திருப்பதால் அஃப்சல் வாயில் எதையாவது (விரல், லாலிபாப், அல்லது வேறு ஏதாவது) வைத்து சூப்பிக்கொண்டு இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை என்றே கொள்ள வேண்டும் என்பது இந்த மரணதண்டனையை எதிர்க்கும் ந.பி.க்கள் சொல்லும் மற்றொரு வாதம். முதலாம் வருட சட்ட மாணவருக்குக்கூட தெரியும் பிக்பாக்கெட் அடிப்பதைக்கூட வீடியோ படம்பிடித்து நிறுவ வேண்டும் என்பது நடவாதது என்பது. மேலும் இதுபோன்ற விஷயங்களில் சாட்சிகளை பாதுகாக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு என்னவிதமான எதிர் நியாயங்களை இவர்கள் கூறினார்களோ அதே நியாயங்களை இங்கும் முன்வைக்கின்றனர். அதாவது, அமெரிக்கா இரட்டை கோபுரங்களைத் தானே தாக்கிக்கொண்டது என்பது அவ்வாதம். அதே போல இந்த பாராளுமன்ற தாக்குதலே இந்திய அரசாங்கம் செய்ததுதான் என்கின்ற அளவில் இவர்கள் இந்த ந.பி.க்களை பாதுகாக்கப் பொய் சொல்லுகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் குண்டினால் இறந்த அந்த ஆறு வயது குழந்தை செய்துகொண்டதுகூட தற்கொலை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அஃப்சலின் உயிருக்கு முன்னால் மற்ற உயிர்களுக்கு மதிப்பில்லையா? இவ் வெறிமதத்தார் உயிரும், வாழ்வும், சந்தோஷமும் அப்பாவி மக்களின் உயிரைவிட உயர்வானது எப்போது?

மற்ற குழுக்களை கொடுமைப்படுத்துவதையே சந்தோஷமான வாழ்நெறியாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு இவையே மனித உரிமைகளாகத் தோன்றுகின்றன. இவற்றை எதிர்ப்பவர்கள் தங்களின் உரிமைகளை எதிர்ப்பதாகவும் சொல்லுகின்றனர். அவர்களது போதனைகளின்படி இது நியாயமான ஒரு வாதம்தான்.

அதேபோல் மனித உரிமை என்கின்ற பெயரால் கொடுஞ்செயல்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு பெட்ரோ டாலர்களோ, ஓரிரண்டு சால்வைகளோ, வாழ்க்கை வசதிகளோ, ஓட்டுக்களோ தனி மனித சுதந்திரத்தையும் விட உயர்வாகவும் தேவையாகவும் தெரிகின்றன.

தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களுக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கு, தீவிரவாதிகள் இந்தக் கொலைகளை காஃபிர்களுக்கு வழங்கும் தண்டனையாகவே கருதுகின்றனர் என்பதும் தெரிந்திருக்கலாம். விதிக்கப்படும் தண்டனைக்கான காரணம் கொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவரில்லை என்பதுதான்.

செப்டம்பர் 2002ல் குஜராத் அக்ஷர்தாம் கோவிலில் தாக்குதல் நடத்தி 30 பேரைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் பெயர் “டைஹ்ரீக்-ஏ-கிஸ்ஸாஸ்” (Taihreek-e-Qisaas). இதன் பொருள் “மரண தண்டனை” !

இந்தியாவில் இந்த மரணதண்டனையைத் தீவிரவாதிகளுக்கு நிறைவேற்றக்கூடாது என்று சொல்லுபவர்கள் தொடர்புடைய மற்ற நாடுகள் இந்த பிரச்சினையை எங்கனம் அணுகுகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். 2000மாவது ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12. இவர்கள் மரண தண்டனை பெற்றது நமது நாட்டுச் சட்டங்களின்படிப் பார்த்தால் உப்புப் பெறாத உளுத்த விஷயங்களுக்காக. (இதே தண்டனை விதிக்கப்பட்ட மேற்கத்தியர்கள் அந்த நாடுகளின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர். இந்திய அரசாங்கம் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை இதுவரை காப்பாற்றியதில்லை. மதச்சார்பின்மை, மற்ற நாடுகளின் உள்விவகாரம் என்று சாக்குகள் சொல்லுகிறது.)

இங்கே தீவிரவாதிகளுக்காகக் குரல் கொடுக்கும் ந.பி.க்கள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இந்தியர்களைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. அஃப்சல், கீலானி போன்றவர்களுக்காக அமைப்புக்கள் ஆரம்பித்து, ஏகப்பட்ட பணம் செலவழித்துப் போராட்டம் நடத்தும், பேட்டிகள் கொடுக்கும் இவர்கள் சவூதி அரேபியாவிலோ, பாக்கிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, சீனாவிலோ மரணதண்டனை விதிக்கப்படுவது குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை, “இவர்கள் என்னதென தெரியாமல் செய்கிறார்கள். ஆண்டவரே, இவர்களை மன்னியும்” என்று ஆதரவளிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற அகந்தையால் இருக்கலாம். இவர்கள் கொல்லப்படும் ஹிந்துக்களுக்காக தங்கள் வாழ்க்கையைச் செலவழிப்பார்களா?

அதுகூட வேண்டாம். இந்தப் பாராளுமன்றத் தாக்குதலால் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்யும்படி ஒரு போராட்டம்கூட இவர்கள் நடத்தவில்லை. இதுவரை இந்தியாவில் தீவிரவாதத்திற்குப் பலியான, நடுத்தெருவுக்கு வந்துவிட்ட, நாதியற்ற ஏழைகளுக்கு உதவ இவர்களின் சுண்டு விரல்கூட இதுவரை அசையவில்லை. காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டில் அகதிகள் என்கிற ஆதரவு இல்லாமல் அழிந்துகொண்டிருக்கும் மக்களைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. குண்டுவெடிப்பினாலும், மதக்கலவரங்களாலும் வாழ்வையும், குடும்பத்தாரையும் இழந்தவர்களுக்கு இரங்கற்பாகூட இல்லை.

இவை எல்லாவற்றையும் விட ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வற்புறுத்துவது அப்சல் இல்லை. தன்னுடைய செயலுக்கு வருந்தாத அது மரணதண்டனையை ஏற்கத் தயாராக உள்ளது. என்னவிருந்தாலும் போரில் நேருக்கு நேர் நிற்க தைரியமில்லாமல் குழந்தைகளையும், முதியோரையும், எதற்காக சாகிறோம் என்பதுகூடத் தெரியாமல் சாகடிக்கும் வெற்றுமரபைச் சார்ந்ததல்லவா அது. இத்தகைய மாவீரர், மற்ற வெறியருக்கும் வழிகாட்டியாக அமைய தீவிரவாதம் முடிவு செய்துவிட்டது. அதனால், அப்சலுடைய மனைவியையும், மகனையும் முன்வைத்து தீவிரவாதம் தன்னுடைய பிற்காலக் கொடுஞ்செயல்களை எளிதாய் நிறைவேற்ற செய்யும் முயற்சிதான் நீதிபதி கிருஷ்ண ஐயர் ஆதரவளிக்கும் இந்த கருணை மனுவும், அதன் தொடராய் எழும் தண்டனைக்குறைப்பு குரைப்புக்களும்.

இத்தோடு தீவிரவாதிகளால் தயார் செய்யப்பட்ட ஒரு கட்டுரை அப்சலின் மனைவி எழுதியதுபோல உலா வருகின்றது. அக்கட்டுரை இந்திய அரசாங்கம் அப்பாவிக்களை கொடுமைப்படுத்துவதாகவும், மனம் திருந்திய அப்சல் போன்றவர்களை (?) இவ்வரசு அதிகம் கொடுமை செய்வதாகவும், எனவே மனம் திரும்புகிற தீவிரவாதிகளுக்கு கதி இல்லை என்பதையும் விளக்கும் வண்ணமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின்படி இந்திய அரசாங்கம்தான் இந்தத் தாக்குதலை செய்து அப்சல் போன்ற அப்பாவியை தண்டித்துள்ளது. இதை அடிப்படையாகக்கொண்டே மரணதண்டனை குறைப்பு வேண்டப்படுகிறது. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் நீதி செத்துவிட்டது. எனவே நீதியோ நேர்மையோ இல்லாத இந்த அரசாங்கத்தை, அதன் மக்களை அழித்து நமது நீதியை நிலைநாட்டுவோம். வாளும், புனித நூலும் ஏந்தி வகாபியம் காக்க வாருங்கள் என்பதுதான் இதன் சாரம்.

எதுவாயினும், திம்மித்துவவாதிகளாலும், ந.பி.க்களாலும் மாவீரனாகப் போற்றப்படுகிற இந்த அஃப்சலின் மரணமோ, அல்லது தண்டனைக் குறைப்போ மேலும் பல தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என்பது திண்ணம். ஏனெனில், தீவிரவாதிகளை உருவாக்கும் மையப்புதிர் அழியும் வரை தீவிரவாதம் தீவிர வியாதியாய் பரவிக்கொண்டேயிருக்கும். நமது தற்கால அரசியல் தலைவர்களுக்கு ஓட்டுக்களும், சொந்த சுகபோகங்களும் மட்டுமே முக்கியமாதலால் பலமுள்ள சிறுபான்மைத் தீவிரவாதம், பலமற்ற பெரும்பான்மையோரின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அழித்துக் கொண்டே இருக்கும்.

சென்னையில் தன் குடும்பத்தில் குழந்தையைக் கூட விடாமல் கொன்ற ஜெயப்பிரகாஷுக்கும், ஆட்டோ ஷங்கருக்கும் மன்னிப்பு வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தால் ஆறு குடும்பங்களின் வாழ்வை கொன்ற அஃப்சலுக்கும், இதுபோன்ற சம்பவங்களால் இதுவரையும், இனிமேலும் பல கோடி உயிர்களை பறிக்கவிருக்கிற தீவிரவாதத்திற்கும் மன்னிப்பு கிடைத்தால், தற்போதைய சூழலில் அது அதிசயமில்லை.

பலமுள்ளது வெல்லும் என்பது நியதி. கொடியது ஒன்றை பலமுள்ளதாக்க நல்லவர்கள் செய்யவேண்டியது ஒன்றும் செய்யாமலிருப்பதுதான்.

எழுதப்பட்ட சட்டங்கள் சிலந்தி வலையொத்தவை; பலவீனமான, ஏழை உயிரினங்களே இவற்றில் சிக்கிக்கொள்ளும்; ஆனால், பலமுள்ள பணவசதியுள்ள உயிரினங்களால் சிலந்திவலையே துண்டு துண்டாய் சிதறி அறுபடும். – அனச்சார்ஸிஸ்

(இந்தக் கட்டுரை ஆனந்த விகடன் 25.10.2006 இதழில் நீதிபதி கிருஷ்ணய்யரின் பேட்டிக்கு எதிர்வினையாக அப்போதே எழுதி விகடன் ஆசிரியருக்கு அனுப்பப் பட்டது. இக்கட்டுரை/கடிதம் வெளியிடப் படவும் இல்லை. பனித்துளி அவர்களுக்கு பதில் எதுவும் வரவும் இல்லை).

மரியாதைக்குரிய ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,

25.10.2006 ஆனந்த விகடன் இதழில் முன்னாள் நீதிபதியும், தற்போதைய அரசியல்வாதியுமான மதிப்பிற்குரிய கிருஷ்ணய்யரின் பேட்டி வெளிவந்தது. அப்சல் எனும் தீவிரவாதியின் மரணதண்டனைக்கு எதிரான அவரது வாதங்கள் அவர் ஒரு நீதிபதியாக இருந்து நெடுநாளாகிவிட்டது என்கின்ற எண்ணத்தையே தோற்றுவித்தன. இது போன்று வாதங்களை முன்வைப்பதில் அவர் தனித்தவரில்லை என்பதும், ஒரு பெரும் கும்பலில் ஒருவர் என்பதும் தெரிந்ததே. எனக்குத் தோன்றிய கருத்துக்களை ஒரு கட்டுரையாக விகடனுக்கு அனுப்புகிறேன். இதைத் தாங்கள் கடிதமாக எடுத்துக்கொண்டாலும் சரிதான்.

பழைய காலத்தில் தனக்கிருந்த தைரியத்தையும், நேர்மையையும் விகடன் இப்போதும் கொண்டிருக்கும் என்று நம்புகின்ற பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு மத்தியில் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் இந்தத் தொழில் தொடர்ந்து நடக்க தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக்கள் வெளியிடவேண்டியிருக்கிறது என்கின்ற நடைமுறையை நான் அறிவேன். ஆதலின் இதைத் தாங்கள் வெளியிடாவிட்டாலும் அது புரிந்துகொள்ளக்கூடியதே. இதை வெளியிடத் தாங்கள் முடிவு செய்வீர்களாயின், என் கண் அறிந்து இக்கட்டுரையில் பிழைகள் இல்லை என்று நான் நம்புவதால், மாறுதலின்றி வெளியிட்டால் மகிழ்வேன்.

வணக்கங்களுடன்,
பனித்துளி

21 Replies to “’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி”

 1. இதை போன்ற கட்டுரைகளை படிக்க பிடிப்பதில்லை, இது உண்மை என்பதும், வெட்க கேடானது என்பதும் தான் இதற்கான காரணம்.

  ஆட்டோ சஙகர் போன்றவர்கள் ஹிந்துக்கள் என்பதும், இன்ன பிறர், உலகாளாவிய பெருவாரியான மதத்தை சார்ந்தோர் என்பது ஏன் கவனத்தில் கொள்ளபட வேண்டியது என்பது விளங்காத புதிர்.

  அப்சலுக்கும் சரோப்ஜித் சிங்கின் தண்டனைக்கும் உள்ள காரணங்களும் விளங்காத புதிரே.

  இந்திய அரசாங்கம், இமய மலையும், சாரலும், வங்கம் தாண்டிய கிழக்கு ப்ரதேசங்களும் தேவையற்றவை என நினைக்கிறது என்று உணரமுடிகிறது. இது முடிவா துவக்கமா என்பது விளங்கவில்லை.

  நீதி செத்துவிடவில்லை, நீதி சொல்லுவோரும் செத்துவிடவில்லை, நீதி சொன்னதை அமுலாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் செத்தது போல் நடிக்கின்றனர். மக்களை பலி கொடுத்தபின்னரே அவர் மடிவர்.

 2. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி. இப்போது நம் தேசத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. போலி மதச்சார்பின்மையும், போலி மனித உரிமைக்கும்பல்களும் தலைவிரித்து ஆடும்போது நியாயத்தராசு அதன் சங்கிலிகள்க்குள்ளேயே சிக்கிகொண்டுள்ளது. ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளுக்கு “அப்சலும் மதானியும் தான் முக்கியம். பாராளுமன்றத்தைக் காத்த அந்த ஐந்து மாவீரர்களின் பின் லட்சக்கணக்கான ஒட்டுக்களா இருக்கின்றன. ஆனந்த விகடன் எப்போதோ “கட்சி மாறி விட்டது” மனித உரிமை பஜனை பாடல்களும் நடிகைகளின் மத்யப் ப்ரதேச படங்களும்” தான் விற்பனைக்கான நெறி(?)முறைகள். வி.ஆர் க்ருஷ்ணய்யர்( ஏ.சி அறை மனித உரிமைக் காவலர்) கட்டுரைக்கு பதில் கட்டுரை ப்ரசுரிக்க ஆனந்த விகடன் ஒன்றும் நடுநிலைப் பத்திரிக்கையல்ல. கட்டுரையின் தெளிவு மிக நன்று. எல்லாம் வல்ல இறைவனை நம்புவதுதான் நமக்கு முன் உள்ள ஒரே வழி. இஸ்ரேல் போன்று “நெஞ்சில் உரம்” கொண்டால் தான் நமக்கு விடிவு. இப்போது உள்ள அரசு இத்தாலியின் பெண்ணரசு. பேயரசும் பெண்ணரசும் நல்லது செய்யாது.

 3. Thank you Tamil Hindu.
  Very touching & awakening.
  The quality of the writing & the depth of the arguments are stunning.
  Extraordinary.
  Let us all Arise, Awake and Stop not in opposing the dormant inactivity of the Govt.
  I pray for that.
  God Bless,
  Srinivasan. V.

 4. konjam perusa irukku. irunthaalum kozhappama ezhuthalaam. but solla vantha karuthukkal ellam sathyam sathyam. avasiyam arasaangam ithai unara vendum. ajmal kasaabukku selavazhikkum pana kannakkai paarthal thalai suththugirathu??? yarudaia vari panam? pinju kuzhandaigalaium,appavi pengalaium, menmaiaana idayam padaitha baratha makkalaium, eevu irakkam illamal ennavenru yosikkamalae suttu posukkia oru raththa katterikku etharku manitha neyam,human rights aadharavu,saatchi, mel visaaranai? evaluvu kaalam izhuthadikkum neethi kuzhu? itharku selavazhikkapadum panam nam mangu mangu enru program ezhudium,accounts audit paarthum,odi odi thittu vaangi market target achieve panna paisa…. “Neengal Tax katta vendia kadaisi thethi…. thangal vyabaaram paathikapadaamal sugamaaga vazha tax kattividungal….” etharku? ippadi nammala namae konru kidakkava?
  panithuli avargalukku : innum konjam telivaaga, thodar thodar thodar vaakia maaga illamal ezhuthalam enbathu oru small suggestion!!!!!!!!!

 5. // பகத்சிங்கின், வாஞ்சிநாதனின் எச்சில் உணவை உண்ட எலிக்குக்கூட அப்பாவிகளைக் கொல்லத் தோன்றாது. //

  படிப்பவர்களின் உணர்வைச் சுண்டுகிற, தத்தளிக்கச் செய்கிற, அலைபாயச் செய்கிற தன்மை கொண்ட எழுத்து பனித்துளியுடையது..

  அப்சல் போன்ற பயங்கரவாதிகளை ஏன் தயவு தாட்சண்யமின்றி மரண தண்டனை மூலம் அழிக்க வேண்டும் என்பதற்கு தத்துவார்த்தமான, அதே சமயம் மனிதநேயம் மிக்க வாதங்களை இக்கட்டுரையில் தந்திருக்கிறார்.

  மறதி என்ற மனிதப் பண்பை இந்திய அரசியவாதிகள், மீடியாக்கள் மாதிரி exploit செய்பவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.

  பாருங்கள், பாராளுமன்றத் தாக்குதல் நிகழ்ந்து தண்டனை தரப்பட்ட அடுத்தடுத்த வருடங்களில் அப்சலைத் தூக்கில் போட வேண்டும் என்று குரல்களாவது எழுந்து வந்தன… சமீபத்திய வருடங்களில் அதுவும் அமுங்கி விட்டது.. இந்த வருடம் இந்த நிகழ்வின் நினைவு தினத்தில் குறிப்பிடத் தக்க ஆர்ப்பாட்டம் கூட எந்த அமைப்பாலும் நடத்தப் படவில்லை.

  நாம் மரத்துப் போய்விட்டோம்.

 6. marathi oru desiya vyaadhi. nejam thaan. namma makkal Sivakasi Jayalakshmi, kovai gundu vedippu madhaani,kadathhal mannan dawood ibrahim ivargal ellam ninaivil ullathaa? eppadi mohammed azhaarudin than theeviravadha kaadhaliyin vazhakkilirunthu, match fixing vazhakilirunthu thappinaar?

  marappom mannippom —- porunthuma ???

 7. //எந்த ஒரு குழு தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்றும், மற்றவை அனைத்தும் தவறு, அழிக்கப்படவேண்டும் என்று எப்போது கூற ஆரம்பிக்கிறதோ அப்போதே வன்முறை பிறந்துவிடுகின்றது.//

  கேள்வி :
  2+2 = ?
  a) 3 b) 6 c) 5 d) 4
  இதற்கு விடை இந்த வீடியோவை தயவு செய்து பார்க்கவும்

  https://www.youtube.com/watch?v=plyS8sIUjmQ

 8. இதற்கு எழில் திண்ணையில் பதில் கூறியிருந்தார்.
  2+2 என்பது எப்போதுமே 4 அல்ல. பல்வேறு கணித முறைகளில் அது 20ஆகவும், 40ஆகவும் கூட ஆகும்.
  2+2 என்பது எப்போதுமே 4 என்று நினைப்பவர்களும், 4 என்று சொல்லித்தராதவர்களை கொல்ல முனைபவர்க்ளும் முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள்.
  முஸ்லீம் சமூகத்தில் முன்னேற்றமே நடைபெறவில்லை என்பதற்கு இந்த மடத்தனமும் மூர்க்கமும் ஒரு உதாரணம்.

 9. மதானியின் சீடர்தான் லஷ்கர் ஈ தொய்பாவின் தென்னிந்திய தலைவர் என்பது இப்போது தெரிந்திருக்கிறது. அவர் கை காட்டியதால், பஸ் எரிப்பு வழக்கில் மதானியின் மனைவி குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

  மதானியை மகாத்மா ரேஞ்சுக்கு புகழ்ந்து அவரை விடுதலை செய்த கருணாநிதியும், மனித உரிமை காவலர்களும் (அமார்க்ஸ், கொசு குமாரன் ஆகியோர்) இப்போது தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று சொல்வார்களா, அல்லது இது போல அடுத்து யாரை விடுதலை செய்து இன்னும் வன்முறையை மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடுவது என்று சிந்திப்பார்களா?

 10. பனித்துளி அவர்களை வரவேற்கிறேன். கட்டுரைக்கு மிக்க நன்றி.

  // 1999ம் வருடம் இண்டியன் ஏர் ஃப்ளைட் 814ஐ கடத்திய தீவிரவாதிகள் பயணிகளின் உயிருக்குப் பதிலாக இந்த இஸ்லாமியப் பெரியவரை விடுதலை செய்யவேண்டும் என்றன. ………….. 2001ம் ஆண்டு ஜனாப் மௌலானா மஸூத் அஸ்ஹார் இந்தியாவில் ஜைஷ்-எ-மொஹம்மத் என்கின்ற அமைப்பினை நிறுவியது….இந்த நிறுவனம் கொன்ற அப்பாவி மக்கள் பலர். பாராளுமன்ற தாக்குதலை நடத்தியதும் இவர்களே.//
  // g ranganathan
  15 December 2009 at 7:48 am
  பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி. //

  ஸ்ரீ ரங்கநாதன் இந்த நிகழ்வுகள் நடந்தபோது இந்தியாவை யார் ஆட்சி செய்தனர்?

 11. இந்தியா ஒரு சுத‌ந்திர‌ நாடு, இங்கே ப‌ல‌ அடிப்ப‌டை உரிமைக‌ள் இருப்ப‌தாக‌ கூற‌ப் ப‌ட்டாலும், உண்மையிலே சாதார‌ண‌ பொது ம‌க்களுக்கு வாழும் உரிமை கூட‌ கிடையாது.

  சுத‌ந்திரம் உரிமை எல்லாம் அரசிய‌ல் செல்வாக்கு, வாக்கு வ‌ங்கி செல்வாக்கு, பில்லிய‌ன் செல்வாக்கு, ம‌த‌ச் செல்வாக்கு, இன‌ச் செல்வ‌க்கு, சாதிச் செல்வாக்கு…… இப்படிப்ப‌ட்ட‌ செல‌வாக்குக‌ள் உள்ள‌வ‌ருக்கு
  தான் எல்லா அடிப்ப‌டை உரிமையும். அதோடு எழுத‌ப் ப‌டாத‌ ஒரு உரிமையை ‍ அதாவ‌து ச‌ட்ட‌த்தை நீதியை துச்ச‌மாக‌க் க‌ருதி ப‌டு கொலை செய்யும் உரிமையையும் அவ‌ர்க‌ள் தாங்க‌ளாக‌வே சுவீகார‌ம் செய்து கொள்கின்ற‌ன‌ர்.

  உலகிலே கிரிமினல்களுக்கு, தீவிரவாதிகளுக்கு பிடித்த புகலிடமாக இந்தியா உள்ளதோ எனத் தோன்றுகிறது. எந்த தவறையும் செய்து விட்டு போலீசுக்கு மாமூல் வெட்டி விட்டு தப்பிக்கலாம். இந்த பத்திரிகைகள் பெரிதாக சப்தம் போட்டால், போலீசு பிடிக்கும், அது இன்னும் நல்லது. சிறையிலே எது வேண்டுமானாலும் கிடக்கும் என்கிறார்கள், செலவு அதிகம், ஆனால் பாதுகாப்பு உண்டு என்று கருத்து நிலவுகிறது.

  தா. கிருட்டிணன் மரணம் – அது கொலை என்று கூறப் பட்டது. ஆனால் எல்லோரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். ஒருவர் கூட குற்றவாளி இல்லையாம். அப்ப தா,கிருட்டிணன் எப்படி இறந்தார்? அனேகமா, தேங்காய் பறிக்க உபயோகப் படுத்திய அரிவாளை மறதியா மரத்திலேயே வைத்து விட்டு போயிருப்பன். அது காத்துல கீழே தா. கிருட்டிணன் மேல விழுந்திருக்கும்.

  அதே போல தினகரன் அலுவலகம் எரிப்புல மூணு பேரு இறந்துட்டாங்க. யாரும் குத்தம் பண்ணலைன்னு எல்லோரும் விடுவிக்கப் பட்டு விட்டாங்க.
  அப்ப சிகரெட் பிடிச்சு அதை அணைக்காம போட்டு நெருப்பு பிடிச்சு இருக்கும்.

  இந்த அப்சல் காண்டி என் தலைவன் ஆட்சி உள்ள இடத்துல இருந்திருந்தா, இந்நேரம் பேரறிங்கர் பொறந்த நாள் அன்னிக்கு, நன்னடைத்தையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப் பட்டு வெளியே வந்து இருப்பாரு. என் தலிவனே அடிக்கடி சொல்வது போல, என்ன செய்வது , என் ஜாதகம் அப்படின்னு சலிச்சுக்க வேண்டியதுதான்.

 12. ஆசிரியர் குழுவிற்கு,

  அருமையான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறீர்கள். பனித்துளி, எழுதியதைக் கண்டு, செத்துக்கிடந்த, மறத்துப்போன, விரக்தி அடைந்த உணர்ச்சி என்னையும் தட்டி எழுப்பி சில கேள்விகளைக் கேட்கச்சொல்கிறது. அதாவது, வன்முறையையும் (ஜிஹாத்) புனித ஏமாற்றுதலையும் (தக்கியா) இரு கண்களாகக் கொண்ட ஒரு மரபு இயக்கத்தில் உள்ளது உள்ளபடி எழுதி 8 பகுதிகளில் ஒரு மயிர்க்கூச்சல் உண்டாகும் கட்டுரைத் தொகுப்பை அனுப்பலாமா? அதை அப்படியே வெளியிடும் நோக்கம் உண்டா? ஏதோ, எவரோ, இணய கட்டுப்பாட்டுக்கு முறையீடு இட்டால், அதற்கு ஒரு மதிப்பளித்து, அம்மாதிரி கட்டுரைகளை ஒதுக்குவது நியாயமாகுமா? ஹிந்துஸ்தானத்தில் அரவஸ்தான் உண்டாக்க, இவர்கள் செய்யும் வன்முறைகளையும் வெளியிட்டால், குறிப்பாக, தமிழ் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட தமிழ்ஹிந்து மாபெரும் தொண்டு செய்யலாமே! அதைச் செய்வீர்களா?

 13. நேர்க்கண்:
  //2+2 என்பது எப்போதுமே 4 என்று நினைப்பவர்களும், 4 என்று சொல்லித்தராதவர்களை கொல்ல முனைபவர்க்ளும் முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள் //

  ஆம்,நண்பரே உங்கள் கருத்து முழுவதும் ஏற்புடையதே;இந்த கூட்டல் கழித்தல் கணக்கை வைத்து கட்டற்ற எல்லையற்ற பிரம்மத்தையறிவது கூடாத காரியம்;

  அண்மையில் தமிழக அரசு இஸ்லாமியரது திருமணத்தையும் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என்று அறிவித்ததைக் கூட எதிர்க்கிறார்கள்;

  அவர்கள் தேசத்துக்கு பொதுவான சட்டம் இருக்கும்போது நமது தேசத்துக்கும் பொதுவான சட்டம் இருக்கக்கூடாதா?

  இதற்கான கருத்தாக்கத்தையும் கருத்தொற்றுமையினையும் உருவாக்கிட வேண்டும்.

 14. அந்த வீடியோவில் உதார் விடும் மூட நம்பிக்கை தீவிரவாதிக்கு நான் கூற விரும்புவது இதுதான்.

  இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் எல்லாம் வல்லவர் , விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி என்று எல்லாம் சொல்கிறீர்கள். அவரிடம் சொல்லி ஒரு ஆறு மாதம், மாதத்தின் எல்லா நாட்களும் இரவிலே முழு நிலவாக, பெளவுர்ணமியாக இருக்கும் படி செய்யுங்கள்.

  அப்படி நீங்கள் செய்தால், நான் கடவுள் இருப்பதை ஒத்துக் கொண்டு, இந்த சில வழி பாடு செய்பவர்களை நானும் கண்டித்து, இங்கே பாருங்கப்பா, இந்த மார்க்கத்தவர் ஆறு மாதம் எல்லா நாட்களும் முழு நிலவாக ஆக்கி விட்டனர். இப்ப உங்கள் கடவுளுக்கு வலிமை இருந்தால் ஒரு வருடம் முழுவதும் எல்லா நாளும் முழு நிலவாக ஆக்கி காட்டுங்கள், இல்லா விட்டால் சிலை வழிபாடு செய்வதை நிறுத்துங்கள், கடவுளுக்கு கோவம் வரும் என்று சொல்லுவேன்.

  இப்படி எல்லாம் செய்ய முடியவில்லை என்றால், யாரும் அடுத்தவரை தொல்லை பண்ணாமல், ரவுசு விடாமல், கட்டாயப் படுத்தாமல் கடவுளின் பெயரால் அப்பாவி மக்களைக் கொல்லாமல் அமைதியாக உங்கள் வழி பாட்டை நடத்திக் கொள்ளுங்கள்.

  1+ 0 = 1 என்கிற பகுத்தறிவு எல்லாம் இந்து மதம் ஒன்றுக்குத்தான் பொருந்தும்.

  இசுலாம் மதத்தின் சார்பிலே சில நல்ல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. சாராயம் குடிக்க கூடாது, வட்டி வாங்க கூடாது, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது அவை. இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம்.

  மற்றபடி மோசஸ் என்பவர் கர்த்தர் எனபவரின் ஆணைப்படி உருவாக்கிய- வெறுப்புக் கருத்துக்கள், துவேஷக் கருத்துக்கள், இனப் படுகொலை கருத்துக்கள், இரத்தவெறி கருத்துக்களுடன் பல காமச் சலுகைகளை அளித்து உருவாக்கப் பட்ட- யூத மதத்தின் அரேபிய மொழிப் பதிப்புதான் இசுலாம் என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம்.

  அதிலே வெறுப்புக் கருத்துக்கள் , கொலை வெறிக் கருத்துக்கள், காமச் சலுகை கருத்துக்களே அதிகம் உள்ளன. அதையும் மீறி இசுலாமியரிடம் பகுத்தறிவை உருவாக்குவதில் தான் மனிதத்தின் எதிர்காலம் உள்ளது.

 15. Al-Qa’eda in Iraq alienated by cucumber laws and brutality

  Besides the terrible killings inflicted by the fanatics on those who refuse to pledge allegiance to them, Al-Qa’eda has lost credibility for enforcing a series of rules imposing their way of thought on the most mundane aspects of everyday life.

  They include a ban on women buying suggestively-shaped vegetables, according to one tribal leader in the western province of Anbar.

  Sheikh Hameed al-Hayyes, a Sunni elder, told Reuters: “They even killed female goats because their private parts were not covered and their tails were pointed upward, which they said was haram.

  “They regarded the cucumber as male and tomato as female. Women were not allowed to buy cucumbers, only men.”

  Other farcical stipulations include an edict not to buy or sell ice-cream, because it did not exist in the time of the Prophet, while hair salons and shops selling cosmetics have also been bombed.

  Most seriously, Sheikh al-Hayyes said: “I saw them slaughter a nine-year old boy like a sheep because his family didn’t pledge allegiance to them.”

  Read Full Story Here
  https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/2538545/Al-Qaeda-in-Iraq-alienated-by-cucumber-laws-and-brutality.html

 16. islam mathaththil vatti vaanga koodathu enru kooriyirukirathu seri…
  UAE yil ulla ella bankum vattiyilla kadan tharuginranava?. saaraayam kudikka koodathu….. velai athigam ulla Scottland naatu whisky enga sir athigama export avuthu?. nalla karuthai kuruvathai kooda neengal mirattum thoniyil than koorugireergal. sariya athu?
  ellorum avargal mathathai, matha kadavularai,matha kotpaadugalai seriyaagavum, nyaayamaana muraiyil pinpatri amaithiudan vaazhntaal entha problemum kediathe? seiareengala apdi? ethuku Mumbai Metro Rail kundu vedippu (Bomb blasted in 6 metro rail stations in mumbai incident), CST stationla ethukku sir Jihadi ngara perula apdi oru kaatu mirandi thanam? en ithallam romba amaithiyaana,ozhungaana seialmuraigala theriutha? Akshar dam koilla nadantha padukolaigalukku pathil? ungal mathathai kutram solla vendam. Aanaal Hindu matham ithu ponra adaavadikkum,akrama veriaatathukkum thunai pogiratha?, matravargalai vazha vidaathe, un kadavulai pinpatrubavargalai mattum vazhavidu, matra vazhipaatu thalangalaium, avargalathu punitha noolgalai azhithu vidu enpathu ponra theeya karuthukkal engavathu ulanava engal veda,purana,ithihaasa,kaavyangalil?

  onnum theriyaatha pachai kuzhanthaigal, enna thavaru izhaithana? allavai theriuma? saama vedam patithaa? jeba thotta geethangal paadiatha? enna therium antha siriya ithayangalukku? en avatrai kooda jihad enra padu bayangara kodoorathil saambalaakureenga? entha vithathil ithu nyaayam? ippadi bothikkara oru principles nallathu thaannu epdi solreenga? matham,kadavul vidunga oru nimisham…. unga manasa thottu sollunga nyaayama intha kotpaadugal?

 17. நண்பர் கார்கில்ஜெய் என்னுடைய வாதத்தினை தவறாகப்புரிந்துகொண்டுள்ளார். விமானக் கடத்தல் நடந்தது பாஜக கூட்டணி ஆட்சியின் போது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதற்குப்பின் வந்த காங்கிரஸ் கூட்டணியரசு வோட்டு அரசியலுக்காக இன்னும் அப்சலை தூக்கில் போடாமல் விட்டுவைத்திருக்கிறது என்பதைத்தான் “பேயரசு செய்தால்……… என்று குறிப்பிட்டேன்.

 18. “ஊடகங்களின் poruppilladha போக்கு தெள்ளதெளிவாக காட்டப்பட்டுள்ளது மிகவும் நெஞ்சை நெகிழவைக்கிறது . விஜய் தொலைகாட்சி நிறுவனத்தினர்
  நிச்சயம் இதற்காக mannippu கேட்டே ஆகவேண்டும்.

  அது நடந்ததும் athai அனைவருக்கும் theriapaduthungal. கலாச்சாரத்தின் perumayai sariyaga sollikkodukka vendiya Oru moodhatti, Thaaliyai kazhattiya avalathirkku mannippu Ketkavendum; Appadi seyyavillai endral sattapadi avargal meylum nadavadikkai yedukka vendum. Ikkaariyathirkku nichayam கடவுள் தண்டனை அளிப்பார். இது நிச்சயம்!

  என் ரத்தம் கொதிப்பதற்கு என்னன்னவோ எழுத தோன்றுகிறது ! மத உணர்வுகளை புண்படுத்துபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

  வாழ்க உமது தொண்டு ! உங்கள் அன்பன் –

  க.ரெங்கநாதன்.

 19. ஸ்ரீ. ரங்கநாதன்,
  என்னுடைய கருத்து இதுதான் :
  காங்கிரஸ் பேய். பிஜேபி பிசாசு. அவ்வளவுதான். பிஜேபி இடம் ஆட்சியை மக்கள் கொடுத்தனர். வாஜ்பாயிக்கு நெருக்கடி இருந்தது. அவருடைய நேர்மை நெருக்கடியை வெல்லும் அளவுக்கு இல்லை. திட சங்கல்பம் இல்லாமல் ஈனமாக நடந்து கொண்டார். கோமாளித்தனம் செய்தார். சரி விடுங்கள். உண்மையைச் சொன்னால் வாக்குவாதம் வரும்.

 20. “எந்த ஒரு குழு தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்றும், மற்றவை அனைத்தும் தவறு, அழிக்கப்படவேண்டும் என்று எப்போது கூற ஆரம்பிக்கிறதோ அப்போதே வன்முறை பிறந்துவிடுகின்றது. தன்னுடைய மதமே சிறந்த மதம், தன்னுடைய தூதரே உயர்ந்தவர், மற்றோரெல்லாம் சாத்தான்களின் குழுக்கள் என்று கூறும் ஆபிரகாமிய மதங்களால்தான் பெரும்பாலான போர்கள் நடந்தன. நடைபெற்று வருகின்றன. எல்லா வழிகளும் உயர்வழியே, இறையை அல்லது இறுதி உண்மையை எந்த வழிகளிலும் சென்றடையும் உரிமை எவருக்கும் உள்ளது என்று கூறுகின்ற இந்திய தத்துவங்களுக்கு எதிரானவையாக இவை இருக்கின்றன. எனவே இந்தியாவைப் பொறுத்தவரை, பாரதத்தின் பரந்த மனப்பான்மையையும், தனி மனித சுதந்திரத்தையும், பல கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையையும், மக்களாட்சியையும் அழிப்பதே ஆபிரகாமிய மதங்களின் ஒரே வேலைத்திட்டம்.”

  இவ்வரிகள் பனித் துளி அல்ல. மிக மிக அற்புதம். பொன்னேடுகளில் பொறிக்கப்படவேண்டியவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *