இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..
View More பெட்ரோல் விலை உயர்வு – 2Tag: நடவடிக்கை
பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்
கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்