சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய் ….
Tag: நாராயணீயம்
பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி
நான்முகன் தீர்த்தத்தால் திருமாலின் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணம் என்ன? ..சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது.. சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணிபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3
பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3அச்சுதனின் அவதாரப் பெருமை – 2
ஸ்ரீமத் பாகவத புராணத்திற்குச் சாரமாக வடமொழியில் 1036 பாசுரங்களாகப் பாடினார். அதை குருவாயூர் திருத்தலத்தில் அரங்கேற்ற, இவர் பாடிய ஒவ்வொரு தசகத்துக்கும் (பத்துப் பாசுரங்களுக்கும்) குருவாயூரப்பனே தலையசைத்து வரவேற்றதாக இத்தல வரலாறு கூறும்… பிறந்த பெண் குழந்தை மெதுவாக அழுது கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்தன. அந்த இல்லத்திற்குள் வசுதேவன் சென்றார். அங்கே உம்மைப் படுக்கவைத்து விட்டு அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு விரைவாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்…
View More அச்சுதனின் அவதாரப் பெருமை – 2