நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…

View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன….. இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.

View More நம்மாழ்வார்

நிலமென்னும் நல்லாள்

தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்… சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்… நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்….

View More நிலமென்னும் நல்லாள்

பசுமைப் புரட்சியின் கதை

அந்த நண்பர்  விவசாயி  மகன் .   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி –   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை  என அது  எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, திறன்வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை  கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு  கண்டடையப் பட்ட  ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி  முறையும் , கால்நடைகளுக்கான  தீவனப் பற்றாக்குறையும்,  கன ரக உழவு முறைகளின்  தாக்கமும்  எவ்வாறு  நமது  விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று  நூல் பல்வேறு ,தரவுகள்  வழியே சொல்லிச் செல்கிறது….

View More பசுமைப் புரட்சியின் கதை