பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…
View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்Tag: பிரபஞ்ச தரிசனம்
சிதம்பர தரிசனம்
தில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்…. உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது…. இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?….
View More சிதம்பர தரிசனம்சிவபிரான் சிதைத்த சிற்றில்
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…
View More சிவபிரான் சிதைத்த சிற்றில்புருஷ சூக்தம்
புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…
View More புருஷ சூக்தம்மலரும் பிரபஞ்சம்
முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?… சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்… இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்… பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன… பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது… கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன [உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ]…
View More மலரும் பிரபஞ்சம்