”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”
Tag: பெரியார்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்
தலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு – பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும்.
View More திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்
வைக்கம் போராட்டத்தினுடைய வெற்றி காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும் போய்விடக்கூடாது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே அந்த வெற்றி சேரவேண்டும் என்ற கேவலமான ஆசைதான். காந்திஜியினுடைய பங்கை சொன்னால் எங்கே வைக்கம் வீரர் பட்டம் போய்விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்!
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்போகப் போகத் தெரியும் – 33
‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது.
“…நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே – அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே…”
–மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
“பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.” — (கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?போகப் போகத் தெரியும் – 32
….. சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்லவேண்டி வருமானால், அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்..
எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக்கொள்ளுவதும் இல்லை….
காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயமாகும்.
— தோழர் ஈ.வெ.ராமசாமி அறிக்கை
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!
தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
…பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
(விடுதலை 20-04-1962)
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!போகப் போகத் தெரியும் – 30
மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.
View More போகப் போகத் தெரியும் – 30போகப் போகத் தெரியும் 29
ஈ.வெ.ராவின் சுயமரியாதைத் திருமணம் பற்றிப் பலர் பேசுவதைப் பார்க்கிறேன். அதைப் பற்றி அந்தப் பகுதி வரும்போது விரிவாகப் பேசுவேன். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
‘சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.’
View More போகப் போகத் தெரியும் 29