அறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்
View More கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22Tag: மணிமேகலை
உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21
தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.
சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20
பசி இருக்கும் வரையில்தான் குற்றங்கள் இருக்கும். குற்றங்கள் அதிகரிக்கும்போதுதான் சிறைக்கோட்டங்கள் தேவைப்படும். அந்தப் பசியைப் போக்கிவிட்டு, குற்றங்களைக் குறைத்துவிட்டால், பிறகு சிறைக்கோட்டத்திற்குத் தேவை என்ன இருக்கப்போகிறது, மன்னா? எனவே இப்போதுள்ள இந்தப் பெரிய சிறைக்கோட்டத்தை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு மிகப்பெரிய அறக்கோட்டத்தைக் கட்டுங்கள்!
View More சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19
மணிமேகலை யாரு? மாதவி என்ற பேரிளங்கொடிக்குப் பிறந்த துவண்டுவிழும் கொடி. பூத்துக்குலுங்கும் மலர். போதவிழ்ந்து தேன்சிந்தும் மலர். மலரில் தேன் வடிகிறதென்றால் வண்டு மொய்க்காதா என்ன? மணிமேகலையைச் சாதாரண வண்டா மொய்த்தது? உலகாளும் அரசவண்டு. நான் பார்த்துக்கொண்டு வாளாதிருப்பேனா? அந்த வண்டு தேன்பருகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அமுதசுரபியாம் அமுதசுரபி! பிச்சைப் பாத்திரம்! அந்தத் திருவோட்டை மணிமேகலை கைகளிலிருந்து பிடுங்கி அந்தப் பிச்சைக்கரகள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அவளை என்னுடன் பொன்தேரில் ஏற்றிக்கொண்டு வருகிறேனா இல்லையா, பார்!
View More உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17
பத்தினிப்பெண்டிர் கணவனை இழந்ததும் தீ வளர்த்து அதனுள் இறங்குவதும், அந்தத் தீயானது அவர்களைத் தழுவிக்கொண்டு உயிரைப் பருகவது குறித்துக் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி உக்கிரமாக எரியும் தணலின் நடுவில் தான் சென்று அமர்ந்தும் இந்தத் தீயின் வெப்பம் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது, அவளுக்குத் தான் தனது கணவனுக்கு உரிய சேவைகளைச் செய்து அவர் பெற்றோரைப் பேணி, வந்த விருந்தினரை ஓம்பி முன்னோர்களுக்குப் பித்ரு காரியங்கள் செய்வித்து வந்ததில் ஏதேனும் பிழையோ என்ற ஐயம் ஏற்பட்டது.
View More ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16
துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.
View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16பாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15
கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்
View More பாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14
பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது. இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும்.
View More ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13
‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன்.
View More அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11
“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.”
View More மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11