தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
View More நாடும் நமதே! நாற்பதும் நமதே!Tag: மதிமுக
அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.
View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்
1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்… இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
அடல் பிகாரி வாஜ்பாய் என்ற இமயம் தேசிய அரசியலிலிருந்து விலகக் காரணமான நாசகார சக்திகளுடன் எந்த இணக்கமும் பாஜக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சரித்திர நினைவு உள்ளவர்களின் கருத்து…
மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான…
View More மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)
அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி
‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…
View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணிகுழப்ப நிலையில் தமிழக அரசியல்
தமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய…
View More குழப்ப நிலையில் தமிழக அரசியல்இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி
மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த…
View More இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணிபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு
பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில்…
View More பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடுமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!
“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….
View More மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!