திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்!

View More திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்

வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை.

View More வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்