டேனிஷ் மிஷனரி ஆவணங்களில் இருந்து பறையர்கள் பெருமளவில் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு படை என்பது ஐரோப்பிய படை மட்டும் அல்ல ; மராத்திய அரசர்களின் படையும் தான்…பறையர்களிடம் ஏராளமான மாந்த்ரீக, வைத்திய சுவடிகள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் வைத்திய, மாந்த்ரீக திறனை அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தி இருக்கின்றனர்; அதற்கான தக்ஷிணையும் கொடுத்திருக்கின்றனர்… பறையர்கள் சில இடங்களில் சில நேரங்களில் கொடுமைப்படுத்தபட்டனர் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர்கள் வேறு சில இடங்களில் விவசாய குடிகளாகவும் போர்குடிகளாகவும் கோலோச்சினார் என்பது. அவர்கள் பெருமையை கூறாமல் அவர்கள் அனுபவித்த கொடுமையை மட்டும் கூறுவது மன ரீதியாக அவர்களை வலிமை இழக்க செய்து தாழ்வு உணர்ச்சியை உருவாக்குவதற்கான தந்திரம்…
View More சொல்லப்படாத பறையர் வரலாறுTag: வர்ணப் பிரிவுகள்
புருஷ சூக்தம்
புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…
View More புருஷ சூக்தம்எழுமின் விழிமின் – 23
ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….
View More எழுமின் விழிமின் – 23புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை