1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா…
View More பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்Tag: வாஜ்பாய்
70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!
இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்… உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது…
View More 70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…
இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
View More டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…ஜெயிக்கப் பிறந்தவர்!
ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது….
View More ஜெயிக்கப் பிறந்தவர்!போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி
‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…
View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணிஎல்லையில் மீண்டும் போர்மேகம்
கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி…
View More எல்லையில் மீண்டும் போர்மேகம்உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு
உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை…
View More உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடுயார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?
5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்…
View More யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2
ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம், வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் மாற்று என்ன? லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம்? லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே! எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.
View More லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்
கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.
View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்