ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும். லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர்…. இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம்…
View More மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?Tag: விலையேற்றம்
பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2
சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்….
View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1
லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த…
View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1பெட்ரோல் விலை உயர்வு – 2
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..
View More பெட்ரோல் விலை உயர்வு – 2பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு
திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?
View More சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு