இங்க நீங்க வச்சது தான் சட்டம். நீங்க சொல்ற ஆளைத்தான் புகழனும். அப்படி இல்லாம உங்களுக்கு பிடிக்காதவங்க யாரையாவது புகழ்ந்து பேசினா அவரைப்பத்தி தப்பா பேசுவீங்க.. இன்றைய கோழைவுட் போல சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு காரியம் சாதிப்பவர் அல்ல. சரியான ஆண்மகன் எங்கள் ராஜா. இது பெரியார் மண் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு முறையும் “குருர் பிரம்மா குருர் விஷ்ணு” ஸ்லோகம் ஒலிக்க விட்டே மேடையேறிய புனிதன் எங்கள் ராஜா….
View More இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடிTag: வெறுப்பு பிரச்சாரம்
‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…
View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோவள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை
ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது..
View More வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினைசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?
சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். குகனின் வழிவந்த ‘நிஷாதர்கள்’ என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள்… இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்? கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான “வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை” பேசியிருந்தால், அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக அங்கீகரிக்கப் பட்டிருக்கும். ஆனால், ராமாயண பிரசங்கம் செய்து பாஜகவில் சேர்ந்து அமைச்சராகவும் அல்லவா ஆகி விட்டார்…. “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ஸ்ரீராமனின் குழந்தைகள்” என்று அவர் கூறியது “வெறுப்பு பேச்சுக்கு” மற்றொரு உதாரணமாகக் காட்டப் படுவது கொடுமையிலும் கொடுமை. ஒரு ஒப்பீட்டுக்காக, ஒரு நடக்க முடியாத விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தானிலோ சவுதி அரேபியாவிலோ உள்ள ஒரு சுன்னி இஸ்லாமிய மௌல்வி….
View More சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?
“அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார்.” திராவிடர் கழகம் செய்யும் இந்த பிரச்சாரம் எந்த அளவு உண்மை? தெரிந்து கொள்ள படியுங்கள்…
View More படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?