ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…

View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

இரண்டு வருடங்கள் முன்பு (2008-ம் வருடம்), இந்துக்களின் இதே புனித நன்னாளில் தான் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களும், அவரது ஆசிரமத்தின் சீடர்களும் மாவோயிஸ்டு வெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள்… பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும், இந்த பலிதானத்தையும் நினைவு கூறும் வாழ்த்து அட்டைகளை தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு வழங்குகிறது…

View More ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

காற்றினிலே வரும் கீதம்

சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? …ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன …

View More காற்றினிலே வரும் கீதம்

ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் மனதை உருக்கும் வண்ணம் ‘ஸ்ரீ கிருஷ்ண…

View More ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

மதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டு தெருவில் அழைத்துச் செல்லும் பர்தா அணிந்த முஸ்லிம் தாய்மார்கள்… ராதை-கண்ணனின் தெய்வீக அன்பையும், கீதைக் கண்ணனின் தெய்வீக உபதேசத்தையும் சித்திரங்களாகத் தீட்டும் ஓவியர் முகமது ஷகீல்..

View More மதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன…..விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.

View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சுவாமி விவேகானந்தரின் அழகிய உரையை மகிழ்வுடன் அளிக்கிறோம். “அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தைக் குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதாரபுருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீகிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது … ‘நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்’ என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்?”

View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1