ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..
View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்Tag: இருமொழிப் புலமை
தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை
சில சம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் வருகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. “தனது” என்ற பொருள் கொண்ட “நிஜம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லை “உண்மை” என்பதற்குத் தமிழன் கையாள்கிறானே, அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.. அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” (சம்ஸ்கிருதத்தில் தோழி) என்ற சொல்லாடல். அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” (தோற்றம்). தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். இது வேதமந்திரத்திலிருந்து வருகிறது..
View More தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வைஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்
நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…
View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1