அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்… ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை….
View More அக்பர் என்னும் கயவன் – 9Tag: இஸ்லாமிய அரசு இயந்திரம்
அக்பர் என்னும் கயவன் – 8
அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.
உடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவப் பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார்.
அக்பர் என்னும் கயவன் – 7
நீதித் துறை நடவடிக்கைகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதும், சத்தியப் பிராமணம் எடுப்பதும், சாட்சிகளை விசாரிப்பதும் அக்பரின் அரசவையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. தன் மனதில் தோன்றிய சித்திரவதைகளை குற்றவாளிகளின் மீது உபயோகிக்க ஒருபோதும் அக்பர் தயங்கியதில்லை. தனக்கு வரிவழங்காத விவசாயிகள் மது தனது படைகளை ஏவி, அவர்களைக் கசக்கிப் பிழிவதற்கும் அவர் பயன்படுத்தினார்.
View More அக்பர் என்னும் கயவன் – 7அக்பர் என்னும் கயவன் – 6
கண்ணில் புகுந்த அம்பு மூளையைத் துளைத்ததில் ஹேமு அரை மயக்க நிலையில் இருந்தார். அந்த நிலையிலேய அவரைச் சிறுவனான அக்பரின் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அக்பர் வெறியுடன் தனது கையிலிருந்த குறுவாளால் (scimitar) ஹேமுவின் கழுத்தை அறுத்துக் கொல்கிறார்.
View More அக்பர் என்னும் கயவன் – 6அக்பர் எனும் கயவன் – 5
கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. அவருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும். வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார்…
View More அக்பர் எனும் கயவன் – 5அக்பர் எனும் கயவன் – 4
அக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். தான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் கர்னல் டோட். இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். வின்செண்ட் ஸ்மித் எழுதுகிறார்: “கடுமையான போரில் தோல்வியுறும் வேளையில் ஹுமாயுனின் சகோதரர் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள்”. சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்…
View More அக்பர் எனும் கயவன் – 4அக்பர் எனும் கயவன் – 3
அக்பர் ஃப்தேபூர்சிரிக்குச் சென்று அங்கு 11 நாட்கள் தங்குகிறார். இதே வேளையில் அவரது 31 வயதான அவரது மகன் ஜஹாங்கிர் அக்பருக்கு எதிரான புரட்சியில் ஈடுபடுகிறார். அவரது இருபதாவது வயதிலிருந்தே அக்பருடனான உறவு மிகவு சீர்கெடத் துவங்கியிருந்தது. அதற்கு முன்னதாக ஜூலை 8, 1589-ஆம் தேதி அக்பர் வயிற்று வலியால் துடிக்கும் அக்பர் தனது மகன் ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்துவிட்டார் என்று புலம்புகிறார். அவரது சமையற்காரரான ஹக்கிம் ஹுமாம் (நவரத்தினங்களில் ஒருவர்) ஜஹாங்கிரின் பேச்சைக்கேட்டு விஷம் வைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறார்… அக்பரின் “புகழ்”பெற்ற வரலாற்றாசிரியரான அபுல் ஃபைசல் ஜஹாங்கிரின் ஆணையின்படி குவாலியருக்கில் வைத்துக் கொல்லப்படுகிறார். அவரது தலை ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜஹாங்கிர் அந்தத் தலையை குப்பையில் தூக்கிப் போடுகிறார்….
View More அக்பர் எனும் கயவன் – 3அக்பர் எனும் கயவன் – 2
சித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது… இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்… பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா ராம்சந்தின் அரசவைப்பாடகர். அக்பர் ஏராளமான பொக்கிஷங்களுடன் தான்சேனையும் கட்டித் தன்னுடன் இழுத்துச் செல்கிறார். செல்ல விருப்பமில்லாத தான்சேன் கண்ணீர் வடித்து துக்கத்துடன் அக்பருடன் செல்கிறார்…
View More அக்பர் எனும் கயவன் – 2அக்பர் எனும் கயவன் – 1
அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை…அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை…
View More அக்பர் எனும் கயவன் – 1தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்
ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் தாரா ஷிகோவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்… ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்….
View More தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்