1664ல் பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது.. கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு… நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும். தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது. ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது…
View More காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்Tag: ஔரங்கசீப்
ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4
சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.
ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3
அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1
ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை. ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்
ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் தாரா ஷிகோவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்… ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்….
View More தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!
முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது. தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.
துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.
வன்முறையே வரலாறாய்…- 32
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…
View More வன்முறையே வரலாறாய்…- 32வன்முறையே வரலாறாய்…- 27
இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்…. சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.
View More வன்முறையே வரலாறாய்…- 27வன்முறையே வரலாறாய்… -7
“இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது… அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடர்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர். “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்… “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி…..
View More வன்முறையே வரலாறாய்… -7வன்முறையே வரலாறாய்… – 5
எந்தவொரு மத்தியகால இந்திய, இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எவரும், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிற்கு மதம் மாறினார்கள் என்னும் குறிப்பினை எழுதியிருக்கவில்லை. உண்மையில், இஸ்லாமிய ஆட்சியின் கொடுமைகள் காரணமாக, எல்லா சாதியினரும் இஸ்லாமிற்கு மாறியிருப்பதைக் காணவியலும்… சுல்தான் குத்புதீன் முபாரக் கில்ஜியால் காயடிக்கப்பட்டு, குஸ்ரூகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்து, 1320-ஆம் வருடம் கில்ஜியைக் கொன்றான். அத்துடன் நில்லாமல் கில்ஜியின் அத்தனை போர்த்தலைவர்களையும் 20,000 பேவாரி ஹிந்துக்களின் (Bewari or Parwari) துணையுடன் கொன்றழித்தான்… சித்தூர் போரில் (1568) ஏறக்குறைய 40,000 விவசாயிகள் – அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் – 8000 ராஜபுத்திர வீரர்களுடன் இணைந்து மொகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இறுதியில் அக்பரின் படைகளால் கைப்பற்றப்பட்ட எந்த விவசாயிகளுக்கும் மன்னிப்பு வழங்காமல், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர்…
View More வன்முறையே வரலாறாய்… – 5