வன்முறையே வரலாறாய்… – 5

 

 மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

M.A.Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன….

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3,  பகுதி 4

 

***

இன்றைய இஸ்லாமிய ‘கல்வியாளர்களும்’, வரலாற்றாசிரியர்கள் என அறியப்படுபவர்களும் (இவர்களில் பலர் முஸ்லிம்கள் அல்லாத முற்போக்கு வேடமிடும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்), மத்திய கால இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் பல்கிப் பெருகிய முஸ்லிம்களின் எண்ணிக்கைக்குக் காரணங்களை புகைமூட்டமிட்டுத் திரையிடப் பார்க்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஒரு மறுக்கவியலாத உண்மை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் வெல்லப்பட்ட காஃபிர்கள் ‘தாங்களாகவே’ முன்வந்து இஸ்லாம் மதத்துடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை வலிந்து ஏற்படுத்த இவர்கள் வெட்கமின்றி முனைகிறார்கள்.

ஆனால் பல மத்திய கால இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும், இப்ன்-பதூதா போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்த பயணிகளும், வியாபாரிகளும், இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் எழுதிவைத்துச் சென்றிருக்கும் குறிப்புகள் இதற்கு நேர்மாறான ஒரு சித்திரத்தையே நமக்களிக்கின்றன. அதேநேரத்தில், இந்தியா போன்ற இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு பலியான நாடுகளில் பயணம் செய்த ஐரோப்பியப் பயணிகளும், பாதிரியார்களும் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளை ஒட்டியே தங்களின் குறிப்புகளையும் எழுதிச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்றைய இஸ்லாமிய ‘கல்வியாளர்கள்’ எத்தனை பெரிய புரட்டர்கள் என்னும் உண்மை தெளிவாகிறது. மேலும் இந்தக் காலக்குறிப்புகள் இந்தியப் பெருநிலத்து ஹிந்துக்கள் எவ்வாறு தங்களின் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெறுப்பும் கோபமும் உடையவர்களாக இருந்தார்கள் என்பதனைத் தெளிவாக்குகிறது.

இதனடிப்படையில், முஸ்லிம்கள் அல்லாத காஃபிர்கள் தாங்களாகவே விருப்பத்துடன்  ‘அமைதி மார்க்கத்தில்’ தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய் என நிரூபணமாகிறது. தங்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரி மற்றும் கராஜ் வரிகளின் கொடுமைகளைத் தாங்கவியலாத, தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்வதற்குச் சக்தியற்றிருந்த அப்பாவி ஹிந்துக்கள் வேறுவழியின்றி முஸ்லிம்களாக மதம் மாறியதை வேண்டுமானால் ஹிந்துக்கள்  ‘அமைதியான முறையில்- தாங்களாகவே’ இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள் என்று சொல்லலாம். இருப்பினும் இந்த மதமாற்றத்தை ஹிந்துக்கள்  ‘   ‘அமைதி மார்க்கத்தின்’ மேன்மையை உணர்ந்து பூரித்து, அதன் காரணமாகவே முஸ்லிம்களாக மதம் மாறினார்கள் என்று கூறுவது நகைப்பிற்குரியதாகவே இருக்கும். அவ்வாறான விருப்ப மதமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், அவை மிக, மிக அபூர்வமாகவே நிகழ்ந்தன என்பதே உண்மை.

இன்றைய இந்திய முஸ்லிம் தலைவர்கள் மற்றும் சுயநலவாத, வாக்கு வங்கி அரசியல் தலைவர்கள்,  ‘சாதி அடிப்படையில் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், இஸ்லாம் அளிக்கும் சம உரிமையைக் கண்டு தாங்களாகவே மதம் மாறியதாக’ கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனும் இந்தியா மீது படையெடுக்கையில் தன்னுடன் வரலாற்று ஆசிரியர்களை அழைத்து வந்திருக்கிறான். அவர்கள் எழுதிய துல்லியமான குறிப்புகள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன. எந்தவொரு மத்தியகால இந்திய, இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எவரும், எந்தவொரு இடத்திலும் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிற்கு மதம் மாறினார்கள் என்னும் குறிப்பினை எழுதியிருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களில் பலர் இஸ்லாமியர்களாக மதம் மாறி இருக்கலாம் என்பதனை மறுக்கவியலாது. ஆனால் அது வெவ்வேறு காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்கிறது.

இரண்டாம் தரெயின் போர்
இரண்டாம் தரைன் போர்- 1556

சாதியால் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்களில் அவர்கள் காஃபிர்களாகவே தென்பட்டார்கள். எனவே அவர்களும் ஜிஸியா வரி மற்றும் கராஜ் வரிகளை அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டார்கள். ஏற்கனவே சமூகத்தின் அடித்தளத்தில் அல்லல் பட்டுக் கொண்டிருந்த அவர்களை இந்த வரிகள் மேலும் அவலத்திற்கு உட்படுத்தின. எனவே வேறு வழியின்றி தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் மற்ற ஹிந்துக்களைப் போல இஸ்லாமியர்களாக மதம் மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்திய துணைக் கண்டத்து இஸ்லாமிய மதமாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கையில், தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே எல்லா சாதியினரும் இஸ்லாமிற்கு மாறியிருப்பதைக் காணவியலும். இன்றைக்கும் இந்தியாவின் பெருவாரி மக்களாக,    ‘ஹிந்துக்களாக’ வாழ்ந்து கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையே மேற்கூறிய இஸ்லாமிய  ‘கல்வியாளர்களின்’ பொய்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது- ‘அமைதி மார்க்கத்தின்’ பெருமை அத்தகையது.

மத்தியகால இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் இந்திய துணைக் கண்டத்தின் சாதிகளைப் பற்றியோ அதன் பல்வேறு பிரிவுகள், வேறுபாடுகளைக் குறித்தோ அறிந்து கொள்வதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பொருத்த வரை ஹிந்துக்கள் அனைவரும் சிலைவழிபாடு செய்யும் காஃபிர்களே. ஹிந்து மதச் சாதிக் கோட்பாடுகள் காரணமாக பெருவாரியான தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள் என உண்மைக்குப் புறம்பாக முதன்முதலில் எழுதி வைத்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களுள் பெரும்பாலோர் இந்திய/ ஹிந்து மதம் குறித்தான எந்தவிதமான அறிவுமற்ற அரைவேக்காடுகள் என்பது இன்றைக்கு நிருபிக்கப்பட்டுள்ளது. அதுநாள் வரை தங்களின் கொடூரமான வாள்முனை மதமாற்றங்களுக்காக விமர்சனத்திற்கு ஆளாகியிருந்த முஸ்லிம்கள் ஐரோப்பியர்கள் சொன்னதையே தாங்களும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்த இடத்திலே ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவலை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும் இந்திய தாழ்த்தப்பட்டவர்கள் சீக்கியர்களுடன் சேர்ந்துகொண்டு இஸ்லாமிய ஆட்சிக்கெதிராக பல புரட்சிகளையும், எதிர்ப்புகளையும் செய்திருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இன்றைய இந்திய தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இது குறித்தான அறிதல் இல்லை. இதனை சில உதாரணங்களுடன் இங்கு காண்போம்.

முதலில், குஸ்ரூகான் என்பவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சுல்தான் குத்புதீன் முபாரக் கில்ஜியால் காயடிக்கப்பட்டு, குஸ்ரூகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்து, 1320-ஆம் வருடம் கில்ஜியைக் கொன்றான். அத்துடன் நில்லாமல் கில்ஜியின் அத்தனை போர்த்தலைவர்களையும் 20,000 பேவாரி ஹிந்துக்களின் (Bewari or Parwari) துணையுடன் கொன்றழித்தான். பின்னர் குஸ்ரூகானும் அவனது ஆதரவாளர்களும் தில்லியில் வலிமையுடனிருந்த அத்தனை இஸ்லாமியர்களையும் அழிப்பதென சபதம் கொண்டனர். இதனை ஜியாவுதீன் பரானி என்ற வரலாற்றியசியர் பின்வருமாறு குறிக்கிறார்:

“நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் தில்லியின் அரண்மனைக்குள் சிலை வழிபாடு செய்யும் பணிகள் துவங்கின. இஸ்லாமிய புனித நூலான குரான் அவர்கள் அமரும் ஆசனமாகப் பயன்படுத்தப்பட்டதுடன், மசூதிகளின் உள்ளேயும் ஹிந்துக் கடவுள் சிலைகள் வைக்கப்பட்டன” என்கிறார்.

இதில் கவனிக்கப் பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், மத்திய கால இந்திய வரலாற்றாசிரியர்களான ஜியாவுதீன் பரானி, அமீர் குஸ்ரூ, இப்ன்-பதூதா போன்றவர்கள் மேற்கூறிய பேவாரி ஹிந்துக்களை தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

“இந்த பேவாரி சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் தீரத்துடன் தங்களின் வாழ்வை அவர்களின் தலைவர்களுக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்” என்கிறது ஒரு குறிப்பு.

சித்தூர் ராஜபுதனப் பெண்களின் தியாக மரணம்
சித்தூர் ராஜபுதனப் பெண்களின் தியாகம்- 1304

மத சுதந்திரமும், சகிப்புத்தன்மையும் உடையவர் என அறியப்படுகிற பேரரசர் அக்பருக்கு எதிராகவும்  தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் ஆயுதமேந்திப் போராடினர். முன்பே குறிப்பிட்ட சித்தூர் போரில் (1568) ஏறக்குறைய 40,000 விவசாயிகள் – அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் – 8000 ராஜபுத்திர வீரர்களுடன் இணைந்து மொகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்களின் வீரம் செறிந்த தாக்குதல்கள் அக்பரை சினம் கொள்ளச் செய்தன. போரின் இறுதியில் அக்பரின் படைகளால் கைப்பற்றப்பட்ட 30,000 ஹிந்து- தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மன்னிப்பு வழங்காமல், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர்.

இதுபோலவே ஔரங்கசீபின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துக் கிளம்பிய மராத்தா ராஜ்ஜியத்தை உருவாக்கிய வீரர் சிவாஜியும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹிந்துவே ஆவார். மராத்தா- தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் சிவாஜியின் காலத்திற்குப் பின் 1761-ஆம் ஆண்டு வரைக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு வந்த அஹமத்-ஷா-அப்தாலி, மராத்தா ராணுவத்தை மூன்றாம் முறையாக பானிபட்டுப் போரில் தோற்கடிக்கும் வரையிலும் மராத்தியர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்தார்கள்.

இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சாதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் அனைவரும் – பேவாரிகள், மராத்தியர்கள், ஜாட்க்கள், கோகர்கள், கோண்ட்கள், பில்கள், சத்நாமிகள், ரெட்டிகள் – என அத்தனை பேரும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை இறுதிவரை எதிர்த்துப் போராடியவர்கள் என்பதே வரலாறு.

கோரி முகமது
கோரி முகமது

இவர்களில் கோகர்கள் (Khokhars or Gukkurs), சுல்தான் முகமது கோரிக்கு எதிராக மிகத் தீரமாகப் போராடிய தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் என்று புகழாரம் சூட்டுகிறார் ஃபெரிஸ்டா. இதே கோகர்கள், இந்திய துணைக் கண்டத்தில் இஸ்லாமியர்கள் பெற்ற முதல்வெற்றிக்குக் காரணமான- முகமது-பின்-காசிம் 715-ஆம் வருடம் எடுத்த படையெடுப்பிலேயே கூட, அதனை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்தவர்கள். அதன்பின்னர் இஸ்லாம் இந்திய துணைக் கண்டத்தில் வேரூன்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அதனை மறவாத கோகர்கள், சுல்தான் முகமது கோரிக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்டு அவனை விரட்டியடித்தனர். ஆனால் மீண்டும் வலிமையுடன் திரும்பிவந்த முகமது கோரி, கோகர்களை நிர்மூலப்படுத்தினான். கோரியின் வரலாற்றாசிரியரான இப்ன்-அசிர், “சுல்தான் எதிரிகளை (கோகர்களை) தோற்கடித்துக் கொலை செய்து அவர்களின் ரத்தத்தை ஓடை போல வழிந்தோடச் செய்தார்” எனக் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், விடாக்கண்டர்களான கோகர்கள், 1206-ஆம் வருடம் முகமது கோரியை அவனது படைமுகாமில் வைத்தே கொலை செய்தார்கள். தங்களது உறவினர்கள் முகமது கோரியால் படுகொலை செய்யப்பட்ட துக்கத்திலிருந்த இருபது கோகர்கள் துணிவுடன் கோரியின் கூடாரத்தினுள் நுழைந்து அவனைக் கத்தியால் குத்திக் கொன்றார்கள்.

கோகர்களின் தீரம் அத்துடன் முடிவடைந்துவிடவில்லை. கோரியின் மரணத்திற்குப் பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட யாஹ்யா-பின்-அகமதின் புத்தகமான  ‘தாரக்-இ-முபாரக்-ஷாஹி’யில் ஜஸ்ரத்-ஷைக்கா கோகார் (1420-30) என்ற மாபெரும் தாழ்த்தப்பட்ட ஹிந்து வீரனைப் பற்றி மீண்டும் கேள்விப்படுகிறோம். இந்த ஜஸ்ரத் கோகாரே அன்றைய இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் மனதில் அச்சமூட்டிய மாவீரனாகத் திகழ்ந்தான் என யாஹ்யா-பின்-அகமது குறிப்பிடுகிறார்.

துரதிருஷ்டவசமாக உயர்சாதி ஹிந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டு மேற்கூறிய தாழ்த்தப்பட்டவர்களின் புரட்சிகளை நசுக்கினார்கள் என்பதனையும் வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

முகமது பி காசிம் நடத்திய மாபெரும் இனப் படுகொலை
முகமது பின் காசிமின் மாபெரும் இனப் படுகொலை- பொ.யு. 712

உதாரணமாக, கொடுங்கோலனான ஔரங்கசீப் தனது தலைநகரை வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு மாற்றிய காலப்பொழுதில் திரண்டெழுந்த ஜாட் விவசாயிகள் முகலாயர்களுக்கு எதிரான கலவரங்களைத் துவங்கினர். மேலும் வட இந்தியத் தலைநகரிலிருந்து தென்னிந்திய தலைநகருக்குக் கொண்டு செல்லப்பட்ட அரசாங்கப் பொருட்களையும், வரிப் பணத்தையும், ஆபரணங்களையும் ஜாட்க்கள வழிமறித்துக் கொள்ளையடித்தனர். அவர்களை அடக்குவதற்கு ஔரங்கசீப் உயர்சாதி ராஜபுத்திர வீரர்களின் உதவியைக் கோரிப் பெற்று, ஜாட்களின் கலவரத்தை கொடூரமாக அடக்கினான்.

இதன்படி, இன்றைய ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜாட்களின் கோட்டையான கின்சானை முகலாயர்களும், ராஜபுத்திரர்களும் அடங்கிய பெரும்படை பலகாலம் முற்றுகையிட்டுப் பின்னர் 1690-ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் கோட்டையினுள் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கடுமையான போரில் 1500 ஜாட்கள் கொல்லப்பட்டார்கள். ஏறக்குறைய 200 முகலாயர்களும் 700க்கும மேற்பட்ட ராஜபுத்திர படைவீரர்களும் இந்தச் சண்டையில் மரணமடைந்தார்கள்.

மேற்கூறிய சிறிய உதாரணமானது, இன்றைய இஸ்லாமிய  ‘கல்வியாளர்களின்’ கூற்றான தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமிற்கு கூட்டம் கூட்டமாக மாறினார்கள் என்பது எத்தனை அடிப்படையற்றது என்பதனை விளக்குகிறது.

காலம் காலமாக தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களில் அனேகம் பேர் புத்த மதத்தைத் தழுவி பௌத்தர்களாக வாழ்ந்தார்கள் என்பதே உண்மை. இஸ்லாமியப் படையெடுப்புகள் ஆரம்பமான காலகட்டத்தில் புத்தமதம் வடமேற்கு இந்தியாவின் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள்) பெரும்பகுதியில் பரவியிருந்தது. அங்கு வாழ்ந்த பெருவாரியான தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் பௌத்தர்களே. இதுபோலவே இந்தியாவின் கிழக்கில் வங்காளத்திலும் புத்தமே பிரதான மதமாக இருந்தது.  ‘அமைதி மார்க்கமான’ இஸ்லாமின் வரவிற்குப் பின்னர் இப்பகுதிகளில் புத்த மதம் இருந்த இடம் தெரியாமல் மறைந்ததைக் காண்கிறோம்.

வங்காளத்திலிருந்த பௌத்தர்கள், ஹிந்துக்களில் 60 சதவீதத்தினர் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையோர் தங்களின் இஸ்லாமிய காலத்திற்கு முந்தைய கால நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் தங்களுடன் தக்கவைத்துக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவர்களில் மிகக் குறைந்த அளவிலான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பௌத்தர்களே தங்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டார்கள்.

இந்தப்பகுதிகளில் இருந்த தாழ்த்தப்பட்ட பௌத்தர்கள் இஸ்லாமை வலிந்து ஏற்றுக் கொண்டார்கள் என்பதுவும் கட்டுக்கதையே. காரணம், புத்த மதத்தில் சம்பிரதாய இந்து சமூகத்தில் இருந்த அளவுக்கு சாதிக் கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் இந்திய பௌத்தம் உண்மையான அமைதியும், சகிப்புத்தன்மையும் கொண்டது. அவ்வாறான நிலைமைக்கு நேர்மாறான, வன்முறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமைத் தழுவ இந்திய தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை. இது இப்படி இருக்க, இஸ்லாமிய ‘கல்வியாளர்கள்’ அளிக்கும் ஆதாரமற்ற கதையளப்புகள் நகைப்பிற்கு இடமானவை.

(தொடரும்)

 .

 

 

9 Replies to “வன்முறையே வரலாறாய்… – 5”

  1. A fantastic factual logistic analysts and wringing.pl mail me the earlier 1 to 4 writing parts.

  2. If there was no discriminating caste system in Tamil Nadu, Islam or Christianity would not have taken root here.

  3. Regarding the Muslim rule in India, Will Durant, the famous American historian writes, “The Mohammedan Conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precarious thing, whose delicate complex of order and liberty, culture and peace may at any time be overthrown by barbarians invading from without or multiplying within. The Hindus had allowed their strength to be wasted in internal division and war; they had adopted religions like Buddhism and Jainism, which unnerved them for the tasks of life; they had failed to organize their forces for the protection of their frontiers and their capitals, their wealth and their freedom, from the hordes of Scythians, Huns, Afghans and Turks hovering about India’s boundaries and waiting for national weakness to let them in. For four hundred years (600–1000 A.D.) India invited conquest; and at last it came.” [1]

  4. Koenraad Elst , the German historian, in his Negationism in India, writes “The Muslim conquests, down to the 16th century, were for the Hindus a pure struggle of life and death. Entire cities were burnt down and the populations massacred, with hundreds of thousands killed in every campaign, and similar numbers deported as slaves. Every new invader made (often literally) his hills of Hindus skulls. Thus, the conquest of Afghanistan in the year 1000 was followed by the annihilation of the Hindu population; the region is still called the Hindu Kush, i.e. Hindu slaughter. The Bahmani sultans (1347-1480) in central India made it a rule to kill 100,000 captives in a single day, and many more on other occasions. The conquest of the Vijayanagar Empire in 1564 left the capital plus large areas of Karnataka depopulated. And so on.” [2]

  5. prof. K.S. Lal, suggests a calculation in his book Growth of Muslim Population in Medieval India which estimates that between the years 1000 AD and 1500 AD the population of Hindus decreased by 80 million. Even those Hindus who converted to Islam were not immune from persecution, which was illustrated by the Muslim Caste System in India as established by Ziauddin al-Barani in the Fatawa-i Jahandari.[3] where they were regarded as “Ajlaf” caste and subjected to severe discrimination by the “Ashraf” castes. [3]

    A similar account has been given by historian Ganesh Ram and said that 80 million Hindus were killed by the Muslims during the Muslim rule in India. [4]

    The Hindu sage Padmanabha described in his Kanha Dade Prabandha in 1456 AD the story of the Muslim invasion of Gujarat of 1298 AD:”The conquering army burnt villages, devastated the land, plundered people’s wealth, took Brahmins and children and women of all classes captive, flogged with thongs of raw hide, carried a moving prison with it, and converted the prisoners into obsequious slaves.” [2]

    Muslim conquest of the Indian subcontinent by the Arabs began during the early 8th century, when the Umayyad governor of Damascus, Hajjaj mobilized an expedition with 6,000 cavalry under the command of Muhammad bin-Qasim in 711 AD. Records from the campaign recorded in the Chach Nama record mass executions of resisting Sindhi forces and the enslavement of their dependents. This action was particularly extensive in Debal (today’s Karachi). According to an order from Hajjaj all able-bodied men were killed, and that their underage sons and daughters were imprisoned and retained as hostages. In the town of Brahminabad , the defending forces were mass massacred. Hajjaj reportedly advocated a hardline military strategy, saying “Henceforth grant pardon to no one of the enemy and spare none of them.” [2]

    It has been mentioned earlier that there is no records to tell how many Hindus were killed during the Muslim rule in India. According to K S Lal, the figure is 80 million. In this regard, Swami Vivekananda, in 1898 AD wrote, “When the Muslims first came to India, there were, according to their historical records, sixty crores (600 million) Hindus in India. This calculation suffers rather from underestimation than exaggeration, for lots of people perished solely through the persecution of the Muslims. Therefore it is obvious that the number of the Hindus was even more higher than sixty crores – on no account less than that. But today the same Hindus have dwindled into twenty crores.” So, according to Swami Vivekananda, the foreign Muslim invaders slaughtered more than 40 crore (or 400 million) Hindus. Not only that, we have to add the number of Hindus who were born within that period.[5] (Rules and Regulations of the Ramakrishna Math: 1897 – 1898)

    Islamic Barbarism in India

    Before 1192, Muslim invaders came to India to plunder its wealth and riches. The other motive of their invasions was to please Allah by killing Hindu kafirs, and to earn the title of Ghazi and hence to secure a coveted place in jannat-ul-ferdaus, the highest place in the Islamic Paradise. Only in 1192, Muhammad Ghori succeeded to establish a Muslim political power in India by defeating Samrat Prithwiraj Chauhan, the Emperor of Delhi and Ajmir in the Second Battle Tarain. He defeated the Muslim invader Shahabuddin Muhammad Ghori in the First Battle of Tarain in 1191 and set him free as a gesture of mercy. But Ghori attacked for a second time the next year, and Prithwiraj was defeated in the said Second Battle of Tarain and captured.. Ghori took Prithviraj to Ghazni, blinded him and killed him.

    After this incident the Muslim invaders launched barbaric Islamic jihad and the brutality of jihad began to take place with horrible acts of cruelty, mass massacre and bloodshed. A few examples will be sufficient for the reader to understand the horridness of those acts. In 1194 AD, Mohammad Ghori launched a military campaign against Raja Jaichand of Benaras. On their way to Benaras, they occupied the fortress at Asni and to describe the Incident, Hassan Nizami in his Taj-ul masir writes, “By the edge of the sword they (more than 50,000 Hindus) were despatched to the fire of Hell. Three bastions were raised, as high as heaven, with their (slain) heads and their carcasses became the food of the beasts of prey. …They destroyed nearly one thousand temples and raised mosques on their foundations”. [6]

  6. When the Muslim invaders came to India, our Hindu rulers took into account their military might alone. To fight this new enemy they followed the same strategy their ancestors used to follow—the eternal rules and traditions handed down to them from the days of Mahabharata, and they failed to discover the element of jihad, the kafir killing motives of theses barbaric new invaders. Being guided by their age old civilized tradition that the prisoners of war were to be set free and not to be harmed, Hindu kings after winning a victory over the Muslim army, used to set the soldiers free. But on the contrary, victorious Muslim rulers, being guided by their kafir killing doctrine of jihad, used to massacre the entire regiment of Hindu prisoners of war.

    It was unthinkable for our Hindu kings to cause slightest harm to innocent civilians even during a war. So they became astonished to see killings of civilians, innocent farmers, burning of their standing crops in fields by the Muslims and most importantly, dishonoring and harming the women and children. There are umpteen instances where their civilized heritage was responsible for their defeats. For example, being guided by the civilized Hindu tradition, Prithviraj Chauhan, after the First Battle of Tarain in 1191, set Mohammad Ghori, and his army prisoners of war, free. But this civilized behavior later on brought his defeat and death.

    Apart from this torturing and slaughtering the Hindus, the barbaric Muslim invaders indulged in another violent and horrific thing and that was mass conversion of Hindus to Islam through violence at the point of sword. Hindu Dharma does not preach to convert non-Hindus to Hinduism and hence Hindus never tried to convert other people to Hinduism. So, the Hindus were terrified and panicked to see the forced conversion of the Hindus by the Muslim invaders turned rulers.

    It should be mentioned here that in the eye of Islam, Hindus were despicable species of infidels or kafirs. Hindus were not simply kafirs but of the worst kind as because they created partners of Allah (shirk) by worshipping the idols of Hindu gods and goddesses. Thus were mushriks, fit to be killed whenever the opportunity arrives. Conquering India and establishing political power here provided the Muslims the golden opportunity to earn the title of Ghazi (slayer of infidels) and hence to secure a place in Jannat-i-Ferduse, or the highest quarters in the Islamic paradise.

  7. இன்றைக்கு இந்தியாவில் இஸ்லாமியர்களாக இருப்பவர்களும் முன்னாளில் இந்துக்களாக இருந்த நம் முன்னோர்களின் வம்சாவழியினரே என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது இஸ்லாம் இந்த நாட்டில் அன்றைய சுல்த்தான்களால் எவ்வளவு கொடூரமான வழிகளில் பரப்பப்பட்டது என்பதைப் படிக்கும்போது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியதைப் போன்ற வேதனை.

  8. அக்பர் மோசமான கொலைகாரன் . ஆனால் அவனை நல்லவனை போல் , கதை கட்டி விட்டார்கள் . குத்புதின் கோரி போன்ற மத வெறியர்களை , தாழ்த்தபட்ட சமுதாய மக்கள் அழித்தனர், என்பதை படிக்கும் போது பெருமையாக இருக்கிறது . இந்த வரலாறு எல்லாம் மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளது !

  9. இடது சாரி வரலாற்று அராய்ச்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய(வர்ணா) அடிக்குமுறை தாழாது இஸ்லாத்தை தழுவியதாகக்கதை விடுகிறார்கள். சுல்தாங்கள் மற்றும் முகலாயர்களால் வாழ்முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற உண்மையை மறக்கடிக்க சூபி களால் இஸ்லாம் சாமானிய மக்களிடம் பரவியது என்ற மாயத்தோற்றத்தினை உருவாக்க முயலுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சரியான பதிலடியாக இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவில் தோன்றிய மாவீர்கள் பலர் கட்டாய மதத்திணிப்பினை
    எதிர்த்துப்போராடி வெற்றியும் பெற்றனர் என்பது ஆதரங்களோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்துவிட முடியுமா என்ன.
    சிவசிவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *