மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது…
View More சர்வம் தாளமயம் – திரைப்பார்வைTag: கர்நாடக இசை
கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்
நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும் பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்…
View More கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்
தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”
View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்
கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார். திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்….
View More இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை
தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…
View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளைஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்
இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்… சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார்… முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது…
View More எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்எப்படிப் பாடினரோ – 1 : அருணாசலக் கவிராயர்
பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் தமிழில் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது… செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.. “மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ – தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ… “
View More எப்படிப் பாடினரோ – 1 : அருணாசலக் கவிராயர்உண்மையான ரசிகன்
என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து ‘உலாத்திக்’ கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா?… திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது….
View More உண்மையான ரசிகன்பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை
கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே… இதற்கு பதில் என்னவாகத் தான் இருக்கமுடியும்? நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது “பரிவாதினி”. கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை. இதன் பின்னணீயில் இருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று….பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது என்றும் தமிழிசை என்பது வேறேதோவென்றும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். நல்ல விஷயங்களை எல்லாமே பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் மனப்பான்மைக்கு சற்றும் எதிரானதல்ல இது. பரிவாதினி இவ்வரசியல்களுக்கு அப்பாற்பட்டது என்று நிறுவியிருக்கிறார்கள்….
View More பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகைஅஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
ஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்… அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே. இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத எந்த சாதனையாளருக்காவது மரணத்தின் போது அரசு மரியாதை கொடுக்க பட்டிருக்கிறதா? என் நினைவு தெரிந்து இல்லை. நமது மாநில அரசின், சமூகத்தின் கலாசார மொண்ணைத் தனத்தின் அளவு அத்தகையது. இந்தக் கலைஞனின் மரணத்தை ஒரு சாக்காக வைத்தாவது அதை மாற்றுவோம். இதை தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையாகவே முன் வைப்போம்….
View More அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்