ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை…. மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது… பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது….
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2Tag: கிருஷ்ணா கோதாவரி ஊழல்
ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்… பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் மோசடி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து…. இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம் அளவுக்கு நிலக்கரி ஊழல் என்ற ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது…
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்
இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?… பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்… தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்… அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறீர்கள்? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்…
View More காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்